<cesDoc id="tam-w-literature-travel-6mani" lang="tam">
<cesHeader type="text">
<fileDesc>
<titleStmt>
<h.title>tam-w-literature-travel-6mani.txt</h.title>
<respStmt>
<respType>Electronic file created by</respType>
<respName>Central Institute for Indian Languages, Mysore</respName>
<respType>transferred into Unicode and CES format by</respType>
<respName>"Unicodify" software by Andrew Hardie</respName>
</respStmt></titleStmt>
<publicationStmt>
<distributor>UCREL (on behalf of CIIL)</distributor>
<pubAddress>Department of Linguistics, Lancaster University, Lancaster, LA1 4YT, UK</pubAddress>
<availability region="WORLD"></availability>
<pubDate>03-07-04</pubDate>
</publicationStmt>
<sourceDesc>
<biblStruct>
<monogr>
<h.title>சுற்றுலா வளர்ச்சி</h.title>
<h.author>வெ. கிருட்டிணசாமி</h.author>
<imprint>
<pubPlace>India</pubPlace>
<publisher>Unknown - Book</publisher>
<pubDate>1986</pubDate>
</imprint>
<idno type="CIIL code">6mani</idno>
</monogr></biblStruct></sourceDesc></fileDesc>
<encodingDesc>
<projectDesc>Text collected for the CIIL Corpus, subsequently integrated into the EMILLE/CIIL Monolingual Written Corpora.</projectDesc>
<samplingDesc>Simple written text only has been transcribed. Diagrams, pictures and tables have been omitted. Sampling begins at page 40.</samplingDesc>
<editorialDecl><conformance level="1"></conformance></editorialDecl>
</encodingDesc>
<profileDesc>
<creation><date>03-07-04</date></creation>
<langUsage>Tamil</langUsage>
<wsdUsage>
<writingSystem id="ISO/IEC 10646">Universal Multiple-Octet Coded Character Set (UCS).</writingSystem>
</wsdUsage>
<textClass>
<channel mode="w">print</channel>
<constitution type="composite"></constitution>
<domain type="public"></domain>
<factuality type="fact"></factuality>
</textClass>
<translations></translations>
</profileDesc>
<revisionDesc></revisionDesc>
</cesHeader>

<text><body>

<p>-152-</p>

<p>	தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சி</p>

<p>	`யாதும் ஊரே ௟ாவரும் கேளிர்' என்பது கணியன்
பூங்குன்றனாரின் பொன்மொழியாகும். இக்கூற்று சுற்றுலா
உணர்வுக்கும், உலகமெங்கும் வளர்ந்து வரும் சுற்றுலாத்
துறைக்கும், பொருந்தும், "முன்பெல்லாம் காசிக்குப்
போகிறேன் திருப்பதிக்குப் போகிறேன் என்பார்கள்.
இப்படி இருந்த நாட்டில் வாரத்திற்கு வாரம் மாதத்திற்கு
மாதம் அமெரிக்கா போகிறேன் - ருஷ்யாவுக்குப்
போகிறேன் என்று கூறப்படுவதைக் கேட்கிறோம். நம்நாடு
எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்
காட்டாகும்" என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
"தமிழகம் காண வருவோரைப் பயணிகளாக வரவேற்றுப்
பாச மிகுந்த நண்பராக வழியனுப்புவோம்" என்பது
தமிழக அரசின் குறிக்கோளாகும்.</p>

<p>
சுற்றுலா வளர்ச்சிக் கழகம்</p>

<p>	தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாச் சிறப்புக்களைப்
பிற மாநிலத்தவரும், அயல்நாட்டவரும் கண்டு களிக்க
வேண்டும் என்னும் நோக்கத்தோடு சுற்றுலா வளர்ச்சியில்
தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. ஏறத்தாழப் பதினைந்து
ஆண்டுகட்கு முன்பு சுற்றுலா வளர்ச்சிக்கென அரசு
மட்டத்தில் எவ்வகை அமைப்பும் இல்லை. அப்பொழுது
செய்தி விளம்பரத் துறையின் வழியாகச் சுற்றுலாத்
துறையில் ஓரளவு கவனம் செலுத்தப்பட்டு வந்தது.
தமிழ்நாடு சுற்றுலா வ஼ளர்ச்சிக் கழகம் 1968-ல் ஆரம்பிக்கப்
-153-
பெற்றது. 1-7-1971 வரை அது வாணிக நோக்கோடு
செயல்பட்டது. அக்கழகம் ழதொடங்கும் பொழுது அதன்
ஆரம்ப மூலதனம் ரூ. 50 இலட்சமாகவும், தற்பொழுது
ரூ. 100 இலட்சமாகவும் உயர்ந்து உள்ளது.</p>

<p>	இக்கழக்த்தின் வருவாய் 1971-72-ல் ரூ. 4.58 இலட்ச~
மாக இருந்தது. 1976-77ல் ரூ. 68.51 இலட்சமாகவும்,
1980-81-ல் ரூ. 164.51 இலட்சமாகவும், 1981-82-ல்
ரூ. 223.58 இலட்சமாகப் பெருகியது. முதன் முறையாக
இக்கழகம் 1977-78-ல் நிகர ஆதாயம் ஈட்டியது. முந்தைய
ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகள் தற்பொழுது ஈடு
செய்யப்பட்டு விட்டன.</p>

<p>
நிதி ஒதுக்கீடு</p>

<p>	1975-76-ல் ரூ. 22.70 இலட்சமும், 1980-81-ல் ரூ. 63.22
இலட்சமும், 1981-82-ல் ரூ. 115.86 இலட்சமும், 1982-83-ல்
ரூ. 140.40 இலட்சமும் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு
நிதி ஒதுக்கீடு செய்துள்஼ளது. தமிழ்நாடு அரசு 5 ஆவது
திட்டத்தில் ரூ. 1122 கோடி மொத்த ஒதுக்கீட்டில்
சுற்றுலாவுக்கு ரூ. 711 இலட்சம் ஒதுக்கியுள்ளது. அது 0.06%
ஆகும். 6 ஆவது திட்டத்தில் ரூ. 3150 கோடி மொத்த
ஒதுக்கீட்டில் ரூ. 8 கோடி சுற்றுலாவுக்கு ஒதுக்கியுள்ளது.
அது 0.25% ஆகும்.</p>

<p>
மாவட்டச் சுற்றுலா மையங்கள்</p>

<p>	தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர்ச்
சுற்றுலாப் பயணிகளுக்காக இரண்டு சுற்றுலா மையங்கள்
தேர்ந்தெடுக்கப்பெற்று, அவற்றின் வளர்ச்சிக்கான
திட்டங்கள் தீட்டப்பெற்றுள்ளன. அவ்விடங்களில் தமிழ்
நாட்டுப் போக்கு வரத்துக் கழகங்களின் மிகை வருமானத்~
திலிருந்து அடிப்படை வசதிகளைப் பெருக்கும் திட்டம்
உருவாக்கப் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு 40 இடங்களை
மாவட்டச் சுற்றுலா மையங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
-154-
அவற்றில் மாவட்டத்திற்கு இரண்டு சுற்றுலா மையங்கள்
மேம்படுத்தப்படும்.</p>

<p>
தமிழகத்தின் சிறப்பு</p>

<p>	இயற்கைச் செல்வம், தொன்மைச் சிறப்பு பண்பாட்டு
முதிர்ச்சி, கலை வளம், மொழி வளம், மலைநகர்கள்,
வனங்கள், காடுகள், வனவிலங்குகள், பறவைகள், பசுமை
நிறைந்த சமவெளிகள், வளம் பெருக்கும் ஆறுகள்,
அருவிகள், நீண்ட வெண்மணற் கடற்கரைகள், உப்பங்~
கழிகள், கால்வாய்கள், வானுயர்ந்த கோபுரங்களைக்
கொண்஼ட கோயில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்,
புனித இடங்கள், அற்புதக் கைவினைப் பொருள்கள்,
பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் பரதம், கேட்கக் கேட்கத்
தெவிட்டாத இசை, கிராமியக் கலைகள் போன்ற பல்வேறு
வளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.</p>

<p>
கோயில்கள்</p>

<p>	தமிழ் நாட்டைக் `கோயில்கள் நாடு' எனலாம்.
தமிழ்நாடு அவ்வளவு மிகுதியான கோயில்களைக்
கொண்டுள்ளது. `கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்' என்பது தமிழ் நாட்டுப் பழமொழியாகும்.
இக்கருத்தை அவ்வையாரும் கூறியுள்ளார். தமிழகக்
கோயில்கள் தமிழ் நாட்டின் பழமைப் பண்புகளைப்
பாதுகாத்து வருகின்றன. அவை தமிழ் நாட்டின் பண்பாடு,
மரபு, நாகரிகம் போன்றவற்றைப் பாதுகாக்கும்
இடங்க஼ளாகத் திகழ்கின்றன. கோயில்கள் மக்களின் வாழ்க்~
கையில் மிகுந்த பங்கெடுக்கின்றன.
-155-</p>

<p>	வெளி நாட்டினர் தமிழ்நாட்டுக் கோயில்களின்
கட்டிடக்கலை, சிற்பக்கலை, கட்டிட அமைப்பு, தொழில்
நுட்பம் போன்றவற்றைக் கண்டு வியக்கின்றனர். தமிழ்
நாட்டுக் கோயில்கள் எகிப்து நாட்டின் பிரமிடுகளைப்
போலப் புகழ்பெற்றவை. பித்தளை உலோகங்களில்
படிமச் சிலைகள் அமைத்தல், கல்லில் சிலை செதுக்குதல்,
குடவரைக் கோயில்கள், குகைக் கோயில்கள், தமிழ்
நாட்டுத் தேர்கள் போன்றவை வெளி நாட்டுப் பயணி~
களைக் கவருவனவாகும்.</p>

<p>	தமிழ நாட்டின் ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு
வகையில் சிறப்புப் பெற்றது ஆகும். இராமேசுவரக்
கோயிலின் நடைக்கூடம் உலகத்திலேயே மிகப் பெரிய~
தாகும். ஶ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
தமிழ் நாட்டிலேயே உயர்ந்த கோபுரமாகும். தமிழ்
நாட்டில் பரப்பளவில் பெரிய கோயில் மீனாட்சி அம்மன்
கோயிலாகும். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கை
கொண்ட சோழபுரக் கோயில், தாராசுரக் கோயில்,
போன்றவை சோழர்காலக் கட்டிடக் கலைக்குச் சான்று
பகர்வனவாக உள்ளன. அன்னை வேளாங்கண்ணி,
பூண்டி மாதாகோயில் போன்றவை கிறிஸ்்த்தவர்களின்
சிறந்த கோயில்களாக விளங்குகின்றன. நாகூர் ஆண்டவர்
பள்ளிவாசல், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்கா
போன்றவை முகம்மதியர்கள் வணங்கும் இடங்களாகும்.
தமிழ் நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகள் முருகப்
பெருமானின் புகழைப் பறை சாற்றுகின்றன.</p>

<p>
கோட்டைகள்</p>

<p>	சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
இந்தியாவில் உள்ள நல்ல கோட்டைகளுள் ஒன்றாகும்.
அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிறப்புப் பெற்றி~
ருந்தது. தமிழ் நாட்டின் தலைமைச் செயலகம் அதனுள்
இருக்கிறது. அதனுள் தூய மரியன்னை ஆலயம்,
-156-
பிராட்டஸ்டண்ட் சமயத்தினரின் ஆலயம், கோட்டைப்
பாதுகாப்புப் படையினரின் குடியிருப்பு, ஓர் அரும்பொருட்
காட்சியகம் போன்றவை இருக்கின்றன. இராபர்ட் கிளைவ்
தம் குடும்பத்துடன் அக் கோட்டைக்குள் வாழ்ந்தார்.</p>

<p>	வேலூர் கோட்டை மிகப் பெரிய கோட்டையாகும்.
அதனுள் இருக்கும் கோவிலில் மூலவிக்ரகம் இல்லை.
செஞ்சிக் கோட்டையின் சிறப்பு தமிழகம் அறிந்த
ஒன்றாகும்.</p>

<p>
நினைவுச் சின்னங்கள்</p>

<p>	குகைக் கோவில்கள், குடவரைக் கோயில்கள்,
மகாபலிபுரம், திருச்சி, கழுகுமலை, வெட்டுவான்
கோயில், நாகமலை சமணர் படுகைகள், சித்தன்னவாசல்
ஓவியங்கள், மதுரைப் புது மண்டபச் சிற்பங்கள், நெல்லை
கிருஷ்ணாபுரச் சிற்பங்கள், ஆவுடையார் கோவில் சிற்பங்கள்
போன்றவை நினைவுச் சின்னங்களாகக் காட்சி
அளிக்கின்றன.</p>

<p>
அணைக் கட்டுகள்</p>

<p>	சாத்தனூர் அணை, வைகை அணை, மேட்டூர் அணை,
திருமூர்த்தி அணை, மதுரை மதகு அணை, கல்லணை,
முக்கொம்பு, பவானிசாகர், காரையாறு அணை, கடனா
நதி அணை, மணிமுத்தாறு அணை போன்றவை.
தமிழ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற அணைகளாகும். அவை
சுற்றுலா மையங்களாக விளங்குகின்றன. ஞாயிற்றுக்
கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் அணைக்
கட்டுகளில் வண்ண விளக்குகள் எரிகின்றன. அவை
விடுமுறை நாள்களைச் செலவிடப் பயன்படுகின்றன.</p>

<p>
பல்கலைக்கழகங்கள்</p>

<p>	மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னைப்
பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன்
-157-
பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்~
கழகம், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்,
அன்னை தெரசா பல்கலைக்கழகம், வேளாண்மைப்
பல்கலைக்கழகம், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்~
கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்~
கழகங்கள் தமிழ் நாட்டில் உள்ளன.</p>

<p>
நூலகங்கள்</p>

<p>	தஞ்சை சரசுவதி மகால், சென்னை மறைமலை அடிகள்
நூலகம், சென்னை பாவாணர் நூலகம், பிரிட்டிஷ் கவுனிசில்
நூலகம், அமெரிக்கன் எம்பஸி நூலகம், அடையாறு நூலகம்,
சென்னைப் பல்கலைக்கழக நூலகம், மதுரை காமராசர்
பல்கலைக்கழக நூலகம் போன்ற நூலகங்கள் தமிழ் நாட்டில்
உள்ளன. மாவட்டந்தோறும் மாவட்ட மைய நூலகங்கள்
உள்ளன. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பேரூர்களிலும்
நூலகங்கள் உள்ளன.</p>

<p>
தேர்கள்</p>

<p>	ஒவ்வொரு கோயிலிலும் தேர் உண்டு. சிறிய கோயில்~
களில் உள்ள தேர்கள் `சப்பரம்' என்று அழைக்கப் பெறும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர், ஶ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயில் தேர், திருவாரூர் தேர் போன்றவை
புகழ்பெற்ற தேர்கள்.</p>

<p>
அருவிகள் (நீர் வீழ்ச்சிகள்)</p>

<p>	நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் சண்பகா
தேவி அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம்,
பாலருவி, தேனருவி போன்ற பல அருவிகளை உடையது.
அங்கு சூன் முதல் செப்டம்பர் வரை மக்கள் செல்வர்.
பாபநாசம், தருமபுரி மாவட்டத்தில் உல்ள ஒகனெகல்,
அய்யனார் அருவி, மதுரை மாவட்டத்தில் உள்ள சுருளித்
தீர்த்தம், கும்பக்கரை உலக்கை அருவி, போன்றவை சிறந்த
அருவிகளாகும்.
-158-</p>

<p>கடற்கரைகள்</p>

<p>	சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகில்
இரண்டாவது பெரிய கடற்கரையாகும்; மிகச்சிறந்த
கடற்கரையாகும். அங்கு அண்ணாவின் நினைவாலயம்
உள்ளது. புதிய கலங்கரை விளக்கமும், அங்குள்ளது.
சென்னையில் உள்ள சாந்தோம் கடற்கரையும், எலியட்ஸ்
கடற்கரையும் புகழ் பெற்றவைகளாகும். மகாபலி
புரத்திலும் கடற்கரை உள்ளது. அஙகுள்஼ள கடற்கரைக்
கட்டிடங்களுக்கு ரோஜர் ஆங்கர் என்னும்
பிரெஞ்சுக் கட்டிடக்கலை நிபுணர் திட்டம் தீட்டிக்
கொடுத்துள்ளார். கடலூர், மணப்பாடு, குளச்சல்,
திருச்செந்தூர், இராமேசுவரம், கன்னியாகுமரி, தங்கக்
கடற்கரை, உப்பங்கழிகள் போன்றவை சுற்றுலாக்
கடற்கரைகளாகும்.</p>

<p>
மலைகளும் கோடைக் குடி இருப்புக்களும்</p>

<p>	உதக மண்டலம் கோடைக்குடியிருப்புக்களில் சிறந்தது
ஆகும். அது மலைகளின் இராணி எனப்படும். அது நீலகிரி
மலையில் அமைந்துள்ளது. குன்னூர், கோத்தகிரி ஆகியன
இங்குள்ளன. உதகமண்டலம் கடல் பரப்பிலிருந்து
7,500 அடி (2,286 மீட்டர்) உயரத்தில் உள்ளது. குன்னூர்
1836 மீட்டர் உயரம் உடையது. உதகை பல நவீன
வசதிகளை உடையது. இயற்கைக் காட்சி, உடல் நலத்திற்கு
ஏற்ற தட்பவெப்பநிலை, குறுகிய கேஜ் புகைவண்டி
இருப்புப்பாதை, மலர்க் கண்காட்சி போன்ற சிறப்புக்கலைக்
கொண்டது. ஏப்ரல் முதல் சூன் வரையும் அக்டோபர்
நவம்பர் மாதங்களும் பார்க்கச் செல்லும் காலமாகும்.</p>

<p>	கொடைக்கானல் பழநி மலையில் உள்ளது. அதன் 
உயரம் 7000 அடி (2120 மீட்டர்). மரங்கள் பெரிய
பாறைகள், அருவிகள், அழகான ஏரி, இன்பமான
இயற்கைச் சூழ்நிலை போன்றவற்றைப் பெற்றுள்ளது.
-159-
ஏப்ரல் முதல் சூன் வரையும், அக்டோபர், நவம்பர் மதங்~
களும் பார்க்கச் செல்லும் மாதங்களாகும்.</p>

<p>	ஏற்காடு சேர்வராயன் மலையில் உள்ளது. அதன்
உயரம், 5,000 அடி (1,500 மீ.) ஆகும். நல்ல தட்ப வெப்ப
நிலையையும், அமைதியான சூழலையும் பெற்றுள்ளது.</p>

<p>
வனவிலங்குகள்</p>

<p>	தமிழ் நீடு 1,30,069 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு
உடையது. அதில் 20,210 ச. கி. மீ. மட்டுமே (16%)
காடாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பெரிய~
தொரு மலைத் தொடராகும். அந்த மலைத் தொடரில்
2633 மீட்டர் உயரமுள்ள தொட்ட பெட்டா சிகரம்
உள்஼ளது.</p>

<p>	புலி, சிறுத்தைப்புலி, காட்டெருது, கடமான் வரை,
ஸ்லாத்பேர், சிறுத்தை, பிளாக் பக், நான்கு கொம்புகளை
உடைய மறிமான், நீலகிரிக் குரங்கு, நீலகிரி காட்டாடு,
சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகள் காணப்பெறு~
கின்றன.</p>

<p>	1972ஆம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்
செயல்படுத்தியதன் விளைவாகவும், வனவிலங்குக்
காப்பாளர்களை நியமித்ததன் காரணமாகவும், தனி வன~
விலங்குப் பிரிவு ஒன்றை அமைத்ததாலும், வனவிலங்குகள்
துறையில் தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
தங்களுடைய அதிகார வரம்பின் கீழுள்ள அனைத்து
விலங்குகளுக்கும் முழுப் பாதுகாப்பு அளிப்பது வனவிலங்குக்
காப்பாளர்களின் சிறப்பான பணியாகும். அது உய்விடங்~
களும் ஏற்படுத்தப் பெற்றுள்ளன.</p>

<p>
முதுமலை வனவிலங்கு உய்விடம்</p>

<p>	நீலகிரி மாவட்டத்தில் உதக மண்டலம் மைசூர்
சாலையில், உதகமண்டலத்திலிருந்து 65 கி.மீ. தூரத்தில்
முதுமலை உள்ளது. அதன் பரப்பளவு 321 ச. கி. மீ. ஆகும்.
-160-
முதலில் ஈரக்கசிவுள்ள இலையுதிர்க் காடுகளாக இருந்து,
பண்டிப்பூரை நெருங்க நெருங்க வறண்ட இலையுதிர்
காடுகளாக உள்ளன. மூங்கில, தேக்கு போன்ற பலவகை
மரங்கள் உள்ளன.</p>

<p>	அங்குப் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டெருது,
கடமான் வகை, புள்ளிமான் வகை, கடால், பார்்க்கிங் டீயர்,
கொம்புகளையுடைய வனமான் வகை, ஸ்லாத்பேர்,
மலைப்பாம்பு, நீர்நாய் போன்ற விலங்குகளும், பலவகைப்
பறவைகளும், பலவகை ஊர்வனவும் காணப்படுகின்றன.</p>

<p>	அங்கு ஆண்டிற்கு 900 மி. மீ. முதல் 3800 மி.மீ. மழை
பொழிகிறது, அருகிலுள்ள விமான நிலையம் கோயம்~
புத்தூர் (160 கி.மீ.) ஆகும். உதகமண்டலமும் (64. கி.மீ.)
மைசூரும் (95 கி.மீ.) அதன் அருகிலுள்ள புகைவண்டி
நிலையங்களாகும். அங்கு வருவதற்கு ஏற்றகாலம்
பிப்ரவரிக்கும் சூனுக்கும் இடையிலுள்ள காலமாகும்.
அபயாரண்யம், கார்குடி, மசினகுடி, சில்வன் லாட்ஜ்
போன்ற இடங்களில் ஓய்வு மாளிகைக஼ள் உள்ளன. தெப்பக்
காட்டில் மரவீடுகளும், கூடாரங்களும் வாடகைக்குக்
கிடைக்கும். வாடகைக்கு மோட்டார் வண்டிகளும்,
யானைகளும் கிடைக்கும். அங்குத் தேவையான உணவும்
கிடைக்கும்.</p>

<p>
களக்காடு வன விலங்கு உய்விடம்</p>

<p>	களக்காடு நெல்லை மாவட்டத்தில் உள்ளது. அதன்
பரப்பளவு 223 ச. கி.மீ. ஆகும். அங்குக் குன்றுகளின்
அடிவாரத்திலிருந்து முட்காடுகள் வரையில் பசுமையாக
இருந்த காடுகள் வறண்ட இலையுதிர்க் காடுகளாக
மாறியுள்ளன. அருகிலுள்ள புகைவண்டி நிலையம்
சேரன்மாதேவி (20 கி.மீ.) ஆகும். அங்குச் செல்வதற்குச்
சிறந்த பருவம் செப்டம்பர் முதல் மார்ச்சு வரையாகும்.</p>

<p>	களக்காடு சிங்கவால் குரங்குகளுக்குப் புகழ்பெற்ற
இடமாகும். அங்குச் சாதாரணக் குரங்கு, நீலகிரிக் குரங்கு,
-161-
பானெட் மெகாக், சிங்கவால் குரங்கு என்ற நான்கு வகைக்
குரங்குகளையும் காணலாம். நீலகிரிக் காட்டாடு, மடமான்
வகை, ஸ்லாத்பேர், காட்டெருது, யானை, புலி, பறக்கும்
அணில், சிறுத்தைப் புலி, காட்டுநாய், பான்கோலின்
போன்ற வனவிலங்குகளையும், பல்வகைப் பறவைகளையும்,
ஊர்வனவற்றையும் காணலாம்.</p>

<p>
கோடிக்கரை வனவிலங்கு உய்விடம்</p>

<p>	கோடிக்கரை தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. அதன்
பரப்பளவு 17.26 ச. கி.மீ. ஆகும். அங்குச் சதுப்பு நிலக்
காடுகளும், வறண்ட பசுமைக்காடுகளும் காணப்படு~
கின்றன. அங்கு ஆண்டிற்கு 1300 மி.மீ. முதல் 1500 மி.மீ.
வரை மழை பொழிகிறது. அதற்கு அருகில் உள்ள விமான
நிலையம் திருச்சிராப்பள்ளி (230 கி.மீ.) ஆகும். கோடிக்~
கரையில் வனஓய்வு மாளிகை உள்ளது. அங்குத் தேவையான
உணவு கிடைக்கும். பிளாக் பக், காட்டுப்பன்றி,
புள்ளிமான் போன்றவற்றை ஆண்டு முழுவதும் காணலாம்.
நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கோனை மூக்கு
நாரை, பிளாக் பிக், சிறவிக஼ள், கடல் குருவிகள், கடல் ஆலா,
நண்டு தின்னும் கோட்டான், உள்ளான்கள் போன்ற
நீர்வாழ் பறவைகளைக் காணலாம்.</p>

<p>
முண்டாந்துறை வனவிலங்கு உய்விடம்</p>

<p>	முண்டாந் துறை திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ளது. அதன் பரப்பளவு 567 ச. கி.மீ. ஆகும். அது
வறண்ட இலையுதிர்க் காடுகளாக உள்ளது. அதற்கு அருகில்
உள்ள புகைவண்டி நிலையம் அம்பாசமுத்திரம் (45 கி. மீ.)
ஆகும். அங்குச் செல்வதற்குச் சிறந்த பருவம் அக்டோபர்
முதல் சனவரி மாதங்கள் ஆகும்.</p>

<p>	அங்குப் புலி, குரங்குகள், ஸ்லென்டர் லோரிஸ்,
ஸ்லாத் பேர், கடமான் வகை, புள்ளிமான் வகை, காட்டு
நாய், பல்வகைப் பறவைகள் போன்றவற்றைக் காணலாம்.
-162-</p>

<p>ஆனைமலை விவனலங்கு உய்விடம்</p>

<p>	ஆனைமலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்~
புத்தூரிலிருந்து 60 கி. மீ. தூரத்தில் உள்ளது. அதன்
பரப்பளவு 958 ச. கி. மீ. ஆகும். அங்கு இலையுதிர்க்
காடுகள், பசுமையாக இருக்கும் காடுகள் போன்றவை
உள்ளன. அங்குத் தேக்கு மரங்கள் மிகுதியாக஼் காணப்
பெறுகின்றன. அங்கு 500 மி. மீ. முதல் 5000 மி. மீ. வரை
மழை பொழியும். கிழக்குச் சரிவுகளில் குறைவான
மழையும், மேற்குச் சரிவுகளில் பலத்த மழையும் பெய்யும்.
அதற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம் பொள்ளாச்சி
(135 கி. மீ.) ஆகும். அங்குச் செல்வதற்கு ஏப்பிரல் மாதம்
முதல் சூன் வரை சிறந்த பருவமாகும்.</p>

<p>	யானை, காட்டெருது, புலி, சிறுத்தைப் புலி, ஸ்லாத்~
பேர், காட்டுப் பன்றி, காட்டு நாய், நீலகிரிக் குரங்கு,
சிங்க வால்குரங்கு, கடாமான் வகை, நான்கு கொம்புகளை
உடைய மறிமான், புள்ளி மான், பல்வேறு பறவைகள்
போன்றவற்றைக் காணலாம்.</p>

<p>	வண்டலூரில் மிருகக் காட்சிச் சாலை உள்ளது.
கிண்டியில் மான் பண்ணையும், பாம்புப் பண்ணையும்
உள்ளன.</p>

<p>
வேடந்தாங்கல் - பறவைகளின் சரணாலயம்</p>

<p>	வேடந்தாங்கல் செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்~
னையிலிருந்து 86 கி. மீ. தூரத்தில் உள்ளது. அதன்
பரப்பளவு 0.3 ச. கி. மீ. ஆகும். அங்குள்ள ஏரியில் பேரிங்~
டோனிய மரங்கள் மிகுதியாக உள்ளன. அங்கு ஆண்டுக்கு
1200 மி. மீ. மழை பொழிகிறது. அதற்கு அருகில் உள்ள
விமான நிலையம் மீனம்பாக்கம் (70 கி. மீ.) ஆகும்.
அதற்கு அருகிலுள்ள புகைவண்டி நிலையம் கருங்குழி
(10 கி. மீ) ஆகும். நவம்பர் மாதம் முதல் பெப்ருவரி வரை
பறவைகளைக் காணச் சிறந்த பருவமாகும்.
-163-</p>

<p>	அங்குப் பறவைகள் கூடி முட்டையிட்டுக் குஞ்சு
பொரிக்கக் கூடிய வசதிகள் உள்ளன. கார்மோரன்ஸ்,
ஈக்ரெட்ஸ், சாம்பல்நிறக் கொக்குகள், ஹரான்ஸ், அகல~
வாய்க் கொக்குகள், டார்ட்டர், ஸ்பூன் பில், வெள்ளை
இப்பீஸ், நைட் ஹெரான், கிரிபி, கிரே, பெலிகன்~
கள், வாத்துகள், உள்ளான்கள், சேண்டு பைப்பர்ஸ், கூட்ஸ்,
கடல் ஆலா, நீர்க்கோழி போன்ற பறவைகள் உள்ளன.</p>

<p>தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பறவைகள் சரணா~
லயமும், நெல்லை மாவட்ட மூன்றடைப்பில் ஒரு பறவைகள்
சரணாலயமும், விரலி மலையில் மயில்களின் சரணா~
லயமும், முத்து ராமலிங்க மாவட்டத்தில் எஸ். எஸ்.
கோட்டைக் கருகில் ஒரு பறவைகளின் சரணாலயமும்
உள்ளன.</p>

<p>
நுண் கலைகள்</p>

<p>	நம் முன்னோர்கள் சுற்றுலாவை ஒரு கலையாகக் கருதி
வந்தனர். இன்று சுற்றுலா ஒரு தொழிலாக மாறி அந்நியச்
செலா வணியை ஈட்டித் தருகிறது.</p>

<p>	தமிழ் பழமையானது. திராவிட மொழிகளின் தாயா஗
விளங்குகிறது. மூன்று பிரிவுகளை உடையது. மூவேந்தர்~
களால் வளர்க்கப் பெற்றது. தமிழ் நாட்டில் கருநாடக
சங்கீதம் பரத நாட்டியம், வீணை, நாதசுரம், மிருதங்கம்,
தபேலா, தோலக், கஞ்சீரா, நாட்டிய நாடகங்கள்
(குறவஞ்சி), பாகவதமேள, கும்மி, கோலாட்டம், காவடி,
பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகம் போன்றவற்றைக்
காணலாம்.</p>

<p>
கைவினைத் தொழில்கள்</p>

<p>	அக் கலைகள் பண்டைக் காலம் முதல் கோயிலுடன்
தொடர்புடையன. சுவாமி மலை, நாச்சியார் கோயில்,
கோட்டாறு, திருநெல்வேலி, கும்பகோணம், தஞ்சாவூர்
போன்ற இடங்களில் சிலைகளும், உலோக வேலைப் பாடுகளும்
-164-
செய்யப் பெறுகின்றன. விருதுநகர், மதுரை போன்ற
இடங்களில் மரச்சிற்பங்கள் தயார் செய்யப் பெறுகின்றன.
த஼ஞ்சை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் கொம்பு~
க஼ில் வேலைப்பாடு உடைய பொருள்கள் செய்யப்படு~
கின்றன. பத்தமடைப் பாய் புகழ் பெற்ற ஒன்றாகும்.
நெல்லையிலும் பவானியிலும் சமுக்காளம் நெய்யப் பெறு~
கிறது. சேலம், ஈரோடு போன்ற இடங்களில் போர்வைகள்
நெய்யப் பெறுகின்றன. மதுரை, வடசேரி, ஈரோடு ஆண்டி
பட்டிபோன்ற இடங்களில் கைத்தறித்துணிகள் கிடைக்கும்.
காஞ்சிபுரம், சின்னாளப் பட்டி, கும்பகோணம் போன்ற
இடங்களில் பட்டுத் துணிகள் கிடைக்கும். பனை நாரினால்
செய்யும் பொருள்கள், மண்பொம்மைகள், பீங்கான்கள்,
வருணம் தீட்டிய சங்குகள் போன்ற கைவினைப் பொருள்கள்
தமிழ் நாட்டில் கிடைக்கும்.</p>

<p>
தகவல் நிலையங்கள்</p>

<p>	தகவல் நிலையங்கள் வழி காட்டும் நிலையங்களாகச்
செயல்படுகின்றன. தமிழகச் சுற்றுலாத் துறை 17 தகவல்
நிலையங்களையும், 8 பயணிகள் அலுவலகங்களையும்,
20 செய்தி நிலையங்களையும் நடத்துகிறது. அவை விமான
நிலையம், புகைவண்டி நிலையம், முக்கியமான சுற்்றுலா
இடங்களில் அமைந்துள்ளன.</p>

<p>	1979 ஆம் ஆண்டு சிதம்பரத்திலும் 5-1-1981 ஆம்
நாள் சென்னையிலும், சுற்றுலா அலுவலகங்கள் திறக்கப்
பெற்றன. இராமேசுவரத்தில் 21-1-1976-ல் திறக்கப்
பட்ட சுற்றுலா தகவல் மையம் 1-7-1983-ல் சுற்றுலா
அலுவலகமாக உயர்த்தப் பெற்றது. புது தில்லியில்
11-8-1980-ல் திறக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம்
21-1-1984-ல் சுற்றுலா அலுவலகமாக உயர்த்தப் பெற்றது.
பெரும்பாலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்
பம்பாய் - தில்லி - ஆக்ரா - ஜெய்ப்பூர் என்ற முறையில்
-165-
வட இந்தியாவிற்கே செல்கின்றனர். தென் இந்தியா
வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மிகக் குறைவே.
எனவே, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின்
அத்தகைய சுற்றுலாப் பயணத்தை மாற்றி அவர்க஼ளைத்
தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கத்துடன் 1980-ல் புது
தில்லியில் சுற்றுலாத் தகவல் மையம் திறக்கப்பட்டது.</p>

<p>	சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
19-3-1980-ல் சுற்றுலாத் தகவல் மையம் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி புகைவண்டிச் சந்திப்பு நிலையத்தில்
20-11-1981-ல் சுற்றுலாத் தகவல் மையம் திறக்கப்
பட்டது. 25-5-1981-ல் சென்னை மத்திய புகைவண்டி
நிலையத்தில் சுற்றுலாத் தகவல் மையம் திறக்கப்பட்டது.
7-5-1983-ல் தஞ்சாவூரிலும், 4-7-1983-ல் மதுரை விமான
நிலையத்திலும், 23-10-1982-ல் திருச்சி விமான நிலை~
யத்திலும் சுற்றுலாத் தகவல் மையங்கள் திறக்கப்~
பட்டன.</p>

<p>	மேற்கு வங்காளத்திலிருந்து மிகுதியான சுற்றுலாப்
பயணிகள் தமிழகத்தில் உள்ள இராமேசுவரம், கன்னியா~
குமரி, மதுரை, காஞ்சிபுரம் போன்ற புனித இடங்களுக்குப்
புனிதப் பயணம் வருகிறார்கள். அதனை மேலும்
அதிகரிக்கும் நோக்கத்துடன் கல்கத்தாவில் ஒரு சுற்றுலா
மையம் விரைவில் திறக்கப்படவுள்஼ளது.</p>

<p>
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேற்கொள்ளும் பயணத்
	திட்டங்கள்</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்தின் சுற்றுலாப் பயணத்
திட்டங்கள் உள்நாட்டு மற்று வெளிநாட்டுப் பயணி~
களைக் கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றிப்
பிற மாநிலங்களில் உள்ள சுற்றுலாச் சிறப்பு மிக்க
இடங்களையும் கண்டுகளிக்கும் வண்ணம் இந்தச் சுற்றுலாப்
பயணத் திட்டங்கள் நிறைவேற்றப் பெற்றுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்் பேருந்துகளில்
-166-
பயணம் செய்தோர் எண்ணிக்கை பெருகி வருவதே
அதற்குச் சான்றாகும்.</p>

<p>	அக்கழகம் நடத்தும் சுற்றுலாப் பயணத் திட்டங்கள்
சுற்றுலாப் பயணிகளின் கருத்துக்களை அறிந்து அதற்~
கேற்ப விரிவாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் சுற்றுலாப்
பயணத் திட்டங்கள் வருமாறு: (1) தமிழ்நாடு சுற்றுலா
(2) தென்னிந்தியச் சுற்றுலா (3) காஞ்சிபுரம் - திருக்க஼ழுக்
குன்றம் - மாமல்லபுரம் சுற்றுலா (4) சென்னை நகரச்
சுற்றுலா (5) திருப்பதி சுற்றுலா.</p>

<p>
தமிழ்நாடு சுற்றுலா (7 நாள்கள்)</p>

<p>	இந்஼தச் சுற்றுலாவில் பயணிகள் திருச்சி, கொடைக்~
கானல், மதுரை, கன்னியாகுமரி, சுசீந்திரம். திருச்செந்~
தூர், இராமேசுவரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கு
அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒவ்வொரு சனிக்
கிழமையும் காலை 6-30 மணிக்குப் புறப்படும் சுற்றுலாப்
பேருந்து அடுத்த வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்குத்
திரும்புகிறது. கட்டண விவரம்.</p>

<p>	ரூ. 780 - (இருவர் தங்கும் அறை)
	ரூ. 750 - (ஒருவர் தங்கும் அறை)</p>

<p>	5 வயது முதல் 12 வயது முடிய உள்ள குழந்தை~
களுக்குக் கட்டணம் ரூ. 580 ஆகும். 5 வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்குக் கட்டணம் ஏதும் இல்லை.</p>

<p>
தென்னிந்தியச் சுற்றுலா (7 நாள்கள்)</p>

<p>	இந்தச் சுற்றுலாவில் பயணிகள் பெங்களூர், மைசூர்,
சோம்நாத்பூர், சீரங்கப்பட்டணம், பிருந்தாவனம்,
முதுமலை, உதகை, கோவை, கொச்சி, ஓகேனக்கல்,
திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்
படுகின்஼றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை
-167-
6.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்த வெள்ளிக்கிழமை
மாலை சென்னைக்குத் திரும்புகிறது.</p>

<p>	கட்டண விவரம்</p>

<p>	ரூ. 780 - (இருவர் தங்கும் அறை)
	ரூ. 750 - (ஒருவர் தங்கும் அறை)</p>

<p>	5 வயது முதல் 12 வயது முடிய உள்ள குழந்தை~
களுக்குக் கட்டணம் ரூ. 580 ஆகும். 5 வயதிற்குட்பட்ட
குழந்தைகளுக்குக் கட்டணம் ஏதும் இல்லை.</p>

<p>
காஞ்சிபுரம் - திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம்
	சுற்றுலா (எல்லா நாள்களிலும்)</p>

<p>	காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.30
மணிக்குத் திரும்புகிறது. இந்தச் சுற்றுலாவில் கலந்து
கொள்ளும் பயணிகள் காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம்,
மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்
படுகின்றனர்.</p>

<p>	கட்டணம் ஆள் ஒன்றுக்கு ரூ. 40; குளிர் சாதனப்
பேருந்தில் ரூ. 55.</p>

<p>
சென்னை நகரச் சுற்றுலா (எல்லா நாள்களிலும்)</p>

<p>	மாலை 2.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 6.00
மணிக்குத் திரும்புகின்றது. சென்னை நகரின் முக்கியமான
சுற்றுலா மையங்களுக்குப் பயணிகள் இந்தச் சுற்றுலாவின்
கட்டண விவரம் ஆள் ஒன்றுக்கு ரூ. 25.</p>

<p>
திருப்பதி சுற்றுலா (எல்லா நாள்களிலும்)</p>

<p>	காலை 6.00 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.00
மணிக்குத் திரும்புகின்றது. இந்தப் பயணத்தில் பங்கு
கொள்ளும் பயணிகள் சொகுசுப் பேருந்து அல்லது குளிர்
சாதன வசதி கொண்ட பேருந்தின்஼ மூலம் திருப்பதி,
திருமலை, திருச்சானூர் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்
செல்லப்படுகின்றனர்.
-168-</p>

<p>கட்டண விவரம்</p>

<p>	ஆள் ஒன்றுக்குக் குளிர் சாதனப் பேருந்தில் 130 ரூபாய்
(இந்தக் கட்டணத்தில் திருப்பதி கோவில் சிறப்புத்
தரிசனத்திற்காகக் கட்டணம் ரூ. 25-ம் அடங்கும்). குளிர்
சாதனம் பொருத்தப்படாத சுற்றுலாப் பேருந்துமூலம்
சென்று வரப் பயணக் கட்டணம் ரூபாய் 105 ஆகும்.
மாமல்லபுர஼ம், திருப்பதி சுற்றுலாக்கள் சொகுசுப் பேருந்து~
களிலும், குளிரிசாதனப் பேருந்துகளிலும் நடத்தப்படு~
கின்றன.</p>

<p>	அரசின் நிறுவனம் நடத்தும் சுற்றுலாவில் தகுந்த
பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அரசின் சொந்த விடுதி~
களில் பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற சுவையான உணவும்
அளிக்கிறது. பல வசதிகளுடன் சிக்கனமாகப் பல இடங்~
களைக் கண்டு களிக்க ஏற்பாடு செய்கிறது. தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும் சுற்றுலாக்கள்
வாணிக நோக்கத்தில் நடத்தப்படுபவை அல்ல. மக்களின்
உணர்வுகளின் அடிப்படையில் நடத்தப்படுபவை ஆகும்.</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும்
சுற்றுலாக்கள் சாதாரண மக்கள் பங்கேற்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளன. அக்கழகம் வசூலிக்கும் கட்டணத்தில்
போக்குவரத்துக் கட்டணம், தங்கும் இடங்களுக்கு
வாடகை மற்றும் சுற்றுலா இடங்களைக் காண்பதற்கான
நுழைவுக் கட்டணம், வழிகாட்டிக்கான ஊதியம்
போன்றன அடங்கும்.</p>

<p>	சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சாலை வழிப் பேருந்துச்
சுற்றுலாப் பயணங்களை நடத்துகிறது. அந்தப் பயணங்கள்
மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளன. ஏழு நாள்கள்
சுற்றுலாப் பயணம் என்ற வகையில் நடத்தப்படுகின்ற
இரண்டு சுற்றுலாப் பயணத் திட்டங்களின்மூலம் தமிழகத்தின்
-169-
சுற்றுலா மையங்கள், தென்னிந்தியச் சுற்றுலா
மையங்கள் போன்றவற்றை ஒருவர் கண்டு களிக்க முடியும்.</p>

<p>
வாகனங்கள்</p>

<p>	தமிழ்நாட்டின் முக்கியமான இடங்களுக்கு இருப்புப்
பாதைகள் போடப்பட்டுள்ளதால், ஏறத்தாழ எல்லா
இடங்களுக்கும் புகைவண்டியில் செல்ல முடியும். சென்னை,
திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இயங்களில்
விமான நிலையங்கள் உள்ளன. சென்னையை முக்கிய~
மான விமான தளமாக ஆக்கவேண்டும். மதுரை, திருச்சி,
கோவை விமான நிலையங்களில் போயிங் விமானங்கள்
இறங்குவதற்கு ஏற்றாற்போல் செப்பனிட வேண்டும்.
கால அட்டவணைப்படி நடத்தும் விமானச் சேவையை
மிகுதியாக்க வேண்டும்.</p>

<p>	திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம், பாண்டியன்,
சேரன், சோழன், ஜீவா, பெரியார், கட்டபொம்மன்,
தீரன் சின்னமலை, பட்டுக்கோட்டை அழகிரி, இராணி
மங்கம்மாள் போன்ற போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்
நாட்டில் இயங்குகின்றன. இவை பருவ காலங்களில்
சுற்றுலா மையங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள்
வருகின்றன.</p>

<p>	சுற்றுலாத் துறையிடம் பொதுமக்கள் பயணத்திற்காக
24 பேருந்துகள் உள்ளன. ஏறத்தாழ 30 சுற்றுலா
மையங்களில் 125 ஒப்புதல் பெற்ற பயண வாடகைக்கார்
வைத்துள்ளவர்கள் உள்ளனர். முக்கியமான சுற்றுலா
மையங்களில் அனுமதி பெற்ற சுற்றுலாக் கடைகள்
உள்ளன. மேலும் 130 பதிவு பெற்ற சுற்றுலா முகவர்கள்
உள்ளனர். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தனியார் சொகுசு வண்டி஖ள் வாடகைக்குக்
கிடைக்கும். அவ்வண்டிகளில் நவீன வசதிகள் பொருத்தப்
பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும்
-170-
திருப்பரங்்குன்றத்திற்கும் சிறு பேருந்துக஼ள் விடப்படு~
கின்றன.</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலாக் கழகத்திடம் 1972-73-ல்
2 பேருந்துகளும், 1976-77-ல் 14-ம், 1980-81-ல் 19-ம்,
1981-82-ல் 20-ம், 1983-ல் 24 பேருந்துகளும் இருந்தன.
1980ஆம் ஆண்டில் குளிர் சாதனம் பொருந்திய பேருந்து
ஒன்றும், 1981 ஆம் ஆண்டில் குளிர் சாதனம் பொருந்திய
பேருந்துகள் இரண்டும் வாங்கப்பட்டன.</p>

<p>	இப்பேருந்துகளின் மூலமாகப் பெற்ற வருவாய் 1975-ல்
ரூ. 8.7 இலட்சமாகவும், 1979-80ல் ரூ. 17.97 இலட்சமாக~
வும் 1980-81-ல் ரூ. 37.37 இலட்சமாகவும், 1981-82-ல்
ரூ. 65 இலட்சமாகவும் உயர்ந்துள்ளது. போக்குவரத்துப்
பிரிவில் 31-3-1981ஆம் நாள் வரையில் ரூ. 35 இலட்சம்
முதலீடு செய்யப் பெற்றுள்ளது. அப்பிரிவிலிருந்து 1972-
73ஆம் ஆண்டில் 2 இலட்சம் ரூபாயும், 1976-77 ஆம் ஆண்டில்
14 இலட்சம் ரூபாயும், 1980-81 ஆம் ஆண்டில் 35 இலட்சம்
ரூபாயும் வருமானம் கிடைத்துள்஼ளது. அந்தப் பேருந்து~
களின்மூலம் புதிய சுற்றுலாக்கள் நடத்துவதோடு, பேருந்து~
களை வாடகைக்கு விடவும் திட்டமிடப்பட்டுள்஼ளது.</p>

<p>	இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் 10 மாதங்~
களே கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. 1979-ல்
72,000 சுற்றுலாப் பயணிகள் கப்பல் வழியாக
இராமேசுவரம் வந்துள்ளனர்.</p>

<p>
விடுதிகள்</p>

<p>	மோட்டல்கள் என்று வழங்கப்பெறும் பெருவழி ஓய்வு
விடுதிகள் இராணிப்பேட்டையிலும் (மரகதம்), உளூந்தூர்ப்
பேட்டையிலும் (வைரம்) அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ண~
கிரியில் (மாணிக்கம்) ரூ. 11 இலட்சம் செலவில் கட்டப்பட்ட
பெருவழி ஓய்வு விடுதி திறக்கப்படவிருக்கிறது. திருத்தணி,
தேனி ஆகிய இடங்களில் பெருவழி ஓய்வு விடுதி஖ள் கட்டப்
-171-
படவுள்ளன. 1978ஆம் ஆண்டிலிருந்து பெருவழி ஓய்வு
விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.</p>

<p>	திருச்சி, மதுரை, திருச்செந்நூர், உதகமண்டலம்,
கன்னியாகுமரி, கொடைக்கானல், ஏற்காடு, ஒகனெகல்,
சிதம்பரம், நாகபட்டினம், கோயம்புத்தூர், மாமல்லபுரம்
ஆகிய இட஼ங்க஼ளில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
நடத்தும் சுற்றுலா மாளிகைகள் உள்ளன. அவற்றில்
253 படுக்கைகள் இருந்தன. புதிய கட்டிடங்கள் கட்டப்
பெற்றதால் அதன் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்தது.</p>

<p>	மாமல்லபுரத்தில் 44.31 ஏக்கரில் ரூ..௃41 இலட்சச்
செலவில் கடற்கரை ஓரத்தங்குமிடம் கட்டப்பெற்றுள்஼ளது.</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தும்
சுற்றுலா மாளிகைகள் புதிய பொலிவுடன் காணப்படு~
கின்றன. வெந்நீர், தொலைபேசி, குளுகுளு வசதி, இசை
நிகழ்ச்சிகள் போன்ற நவீன வசதிகளைக் கொண்டுள்ளன.
திருச்சி, மதுரை கன்னியாகுமரி போன்ற இடங்களில் உள்ள
மாளிகைகளில் குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளன. அம்~
மாளிகைகளில் தங்குவதற்கு ஒருநாள் வாடகையாகத் தனி
அறை ரூ. 12-00, இருவர் ரூ. 20-00, குளுகுளு வசதியுடன்
ஒருவர் ரூ. 20-00, குளுகுளு வசதியுடன் இருவர் ரூ. 40-00
வசூலிக்கப்படுகிறது. அம் மாளிகைகளில் குறைந்த செலவில்
உணவும் வழங்கப் பெறுகிறது.</p>

<p>	தாஜ் கோரமண்டல், அடையாறு கேட் ஓட்டல்,
ஓட்டல் சோபு போன்றவை நட்சத்திர விடுதி஖ளாகும்.</p>

<p>	1978-க்கு முன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்஼று கூடத்
தமிழகத்தில் இல்லை. ஆனால் இன்று சென்னையில்
அத்தகைய ஓட்டல்கள் பல உள்ளன. அன்று சென்னை~
யிலேயே சுற்றுலாப் பயணிக்கேற்ற ஓட்டல்கள் ஒன்று
அல்லது இரண்டுதான் இருந்தன. ஆனால் இன்றோ ஒன்று
முதல் ஐந்து நட்சத்திரம் வரை பல்வேறு வகை ஓட்டல்கள்
-172-
சென்னையில் கட்டப்பட்டுள்ளன. இதைப் போலவே
15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மற்ற முக்கிய நகரங்~
களில் சுற்றுலாப் பயணிகளுக்கேற்ற ஓட்டல்கள் இல்லை
எனலாம். இன்று எல்லா இடங்களிலும் சுற்றுலாப் பயணி~
களுக்கேற்ற தரமான ஓட்டல் உணவு விடுதிகள்
ஏற்பட்டுள்ளன.</p>

<p>	சத்திரங்கள், திருமண மண்டபங்கள், சங்கக்
கட்டிடங்கள், தனியார் விடுதிகள், கோயில்களில் உள்ள
தங்கும் விடுதிகள், பயணிகள் விடுதிகள் போன்றவற்றில்
பயணிகள் தங்குகின்றனர். மதுரையில் உள்ள பாண்டியன்
ஓட்டல் நட்சத்திர ஓட்டலாகும்.</p>

<p>	நெடுஞ்சாலைப் பொதுப் பணித்துறை கேசனூரில்
(கோயம்புத்தூர்) ஒரு மோட்டலைக் கட்டியுள்ளது.
ரூ. 20 இலட்சம் செலவில் இன்னும் நான்கு மோட்டல்~
களைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு போக்கு~
வரத்துக் துறையும் 100 கி.மீ. ஒரு மோட்டலைக் கட்ட
திட்டமிட்டுள்ளது. 13 மோட்டல்களுக்குக் கட்டிட வேலை
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.</p>

<p>	வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் யாவரும் பெருஞ்
செல்வர்கள் அல்லர். சிக்கனமான வகையில் அவர்களின்
விருப்பத்திற்கொப்ப அதிகச் செலவில்லாத பயணிகள்
இல்லங்களை ஏற்படுத்தியாக வேண்டும். அத்தகைய
இல்லங்கள் இந்திய நாட்டிலுள்ள பயணிகளுக்கும் பயன்~
படும். தமிழ்நாட்டில் நடுத்தர வருமானம் உள்ளோரும்
தங்கும் வகையில் பயணிகள் இல்லங்க஼ள் உள்ளன.
இளைஞர் இல்லங்கள் அவ்வகையில் பெரிதும் பயன்~
தருகின்றன. அங்குத் தங்குபவர்களுக்கு எல்லா அடிப்படை
வசதிகளும் அளிக்கப்பட்டு ஒரு நாளைக்கு ரூ. 5 அல்லது
ரூ. 7.50 வாடகை வசூலிக்கப்படுகிறது.</p>

<p>	ஏற்காட்டில் 1981ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்களில்
ரூ. 4 இலட்சம் செலவில் ஓர் இள௅ஞர் விடுதியும், 1982ஆம்
-173-
ஆண்டு மே திங்களில் உதகமண்டலத்தில் ரூ. 12 இலட்சம்
செலவில் ஓர் இளைஞர் விடுதியும் திறந்து வைக்கப்
பெற்றுள்ளன. மண்டபம், பிச்சாவரம், ஒகேனக்கல்,
கொடைக்கானல், இராமேசுவரம், மாமல்லபுரம், கன்னியா~
குமரி போன்ற இடங்களில் இளைஞர் விடுதிகள் உள்ளன.</p>

<p>	த஼ஞ்சை, திருச்சி, மதுரை, குமரி, திருச்செந்தூர்,
இராமேசுவரம், உதகமண்டலம், கொடைக்கானல்,
மாமல்லபுரம் ஆகிய இடங்களில் ஓட்டல் தமிழ்நாடு
உள்ளது. மதுரையிலும் (ரூ. 58 இலட்சம்) கோவையிலும்
(ரூ. 40 இலட்சம்) புதுமையான முறையில் மூன்று நட்சத்திர
விடுதி கட்டப்பட்டுள்ளன.</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதி஖ள்
அனைத்தும் நகரின் மையப்பகுதியில் அமைக்கப் பெற்றுச்
சுற்றுலாப் பயணிகள் எளிதில் அணுகும் வண்ணம் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் தேவைக்~
கேற்பச் சுவையான உணவு வகைகள் சுகாதார முறையில்
தயாரிக்கப் பெற்றுக் கனிவாகப் பணிவுடன் வழங்கப்
படுகின்றன. அந்த விடுதிகளில் குளிர் சாதனம் பொருத்தப்~
பட்ட அறைகளும், கூட்டங்கள் நடத்த அரங்குகளும்
உள்ளன.</p>

<p>
படுக்கைகள்</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் விடுதிகள்,
பெருவழி ஓய்வு விடுதிகள், இளைஞர் விடுதிகள், நட்சத்திர
விடுதிகள், கடற்கரை வளாகம் ஆகியவற்றின் படுக்கை
எண்ணிக்கை வருமாறு:
-174-</p>

<p>	1971-72-ல் 5 விடுதிகளும், 1976-77-ல் 12 விடுதிக஼ளும்,
1979-80-ல் 14 விடுதிகளும், 1980-81-ல் 15 விடுதிகளும்,
1981-82-ல் 20 விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன.</p>

<p>
வருமானம்</p>

<p>	1971-72-ல் ரூ. 4.50 இலட்சமும், 1975-76-ல் ரூ. 14.27
இலட்சமும், 1976-77-ல் ரூ. 40 இலட்சமும், 1979-80-ல்
ரூ. 30.08 இலட்சமும், 1980-81-ல் ரூ. 46.84 இலட்சமும்,
1981-82-ல் ரூ. 70.04 இலட்சமும் விடுதிகளில் இருந்து
வருமானம் கிடைத்துள்஼ளது.</p>

<p>
கண்காட்சிகள்</p>

<p>	ஆண்டுதோறும் உதகமண்டலத்தில் மலர்க் கண்காட்சி
நடைபெறுகிறது. சென்னையிலும் மலர்க் கண்காட்சி
நடைபெறுகிறது. கொடைக்கானலில் கோடை விழாவும்,
குற்றாலத்தில் சாரல் விழாவும் அரசால் கொண்டாடப்
படுகிறது. அரசால் பொங்கல் சுற்றுலா வாரம்
கொண்டாடப்படுகிறது. இக்கண்காட்சிகளையும் விழாக்~
களையும் காண உள்நாட்டுப் பயணிகளும், வெளிநாட்டுப்
பயணிகளும் தமிழ்நாட்டிற்குள் வருகின்றனர்.</p>

<p>
அண்டை மாநிலத்திற்குச் செல்பவர்கள்</p>

<p>	தேக்கடி, கொச்சின் போன்ற கேரள மாநிலச் சுற்றுலா
மையங்களுக்குச் செல்பவர்களுக்கு தமிழ்நாட்டின் வழியாகச்
செல்கின்றனர். அப்பொழுது அவர்கள் தமிழ்நாட்டுச்
சுற்றுலா மையங்களைக் கண்டு களிக்கின்றனர். ஶ்ரீலங்கா
போன்ற அண்டை நாடுகளுக்குச் செல்பவர்களில் சிலர்
தமிழ்நாட்டின் வழியாகச் செல்கின்றனர். அதனால்
தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைகிறது.</p>

<p>
பொருட்காட்சி</p>

<p>	12ஆவது அனைத்திந்தியச் சுற்றுலாப் பொருட்காட்சி
22 ஏக்கர் நிலப்பரப்பில், சென்னையில், போர் வீரர்
நினைவுச் சின்னத்திற்கு எதிரில், தீவுத்திடலில் 
-175-
அமைந்திருந்தது. அது இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கும்
முறையில் இருந்தது. ஏறத்தாழ 50 இலட்சம் மக்கள்
கண்டு களித்தனர். அதில் 316 அரங்குகள் இடம் பெற்~
றிருந்தன. 1984 ஆம் ஆண்டு இந்தப் பொருட்காட்சியில்
294 அரங்குகள் இடம் பெற்றிருந்தன. தமிழ்நாடு சுற்றுலா
வளர்ச்சிக் கழகத்தின் நிரந்தர உணவு விடுதியான `ஓட்டல்
தமிழ்நாடு' சுவையான உணவு வகைகளைப் பரிமாறியது.</p>

<p>	நடந்த பொருட்காட்சியில் பங்கேற்றவர்களிடமிருந்து
இனி நடைபெறும் பொருட்காட்சிகளை மேலும் நல்ல
முறையில் மாற்றியமைக்க யோசனைகள் கோரிப் பெறப்~
பட்டுள்ளன. பங்கேற்றவர்களுக்கும் பார்வையாளர்~
களுக்கும் மேலும் வசதி செய்து தருதல், அரங்குகளை
மாற்றி நல்ல முறையில், அமைத்தல், பொருட்காட்சி நேரங்~
களில் மாற்றம் செய்தல், பொருட்காட்சி காண வருபவர்~
களுக்கு அதிக அளவில் போக்கு வரத்து வசதிகள் அளித்தல்
போன்றவை அவர்கள் அளித்த யோசனைகளாகும்.
சுற்றுலா பற்றி நிரந்தரப் பொருட்காட்சி அமைக்கும்
யோசனை பரிசீலனையில் உள்ள஥ு. எந்த முறையில்
அமைத்தால் நன்கு அமையும் என்பதனை அறிய நாட்டி~
லுள்ள பல வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்
பட்டுள்ளது. பத்திரிகைகளில் விளம்பரம் செய்து மற்ற~
வர்களின் அறிவுரைகளையும் பெறப்பட்டன. சிறந்த
வடிவமைப்புகளை அனுப்பி வைத்துள்ளவர்களுக்கும் பரிசுத்
தொகை வழங்கி அவர்களின் ஆலோசனையின் அடிப்படை~
யில் நிரந்தரப் பொருட்காட்சி உருவாக்கத் திட்டமிடப்
பெற்றுள்ள஥ு.</p>

<p>
விளம்பரம்</p>

<p>	தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டில்
உள்ள சுற்றுலாச் சிறப்புப் பெற்ற இடங்஖ளை விளம்பரப்
படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணி~
களை ஈர்க்க, சுற்றுலா இடங்கள், அவற்றின் சிறப்புக்கள்,
-176-
அங்குக் கிடைக்கும் வசதிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய
வெளியீடுகள், ஆண்டுதோறும் கொண்டு வரப்பட்டு அவை
அயல்நாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வழங்கப்படு~
கின்றன. செய்தித்தாள்களில் விளம்பரங்கள் கொடுக்கப்படு~
கின்றன. புகைப்படங்கள், வண்ணப்படங்கள், ஸ்லைடுகள்,
சுவரொட்டிகள் போன்றவை விளம்பரத்திற்காகப் பயன்~
படுத்தப் படுகின்றன. சுற்றுலாப் பற்றிய திரைப்படங்களும்
பயன்படுத்தப்படுகின்றன. ஏற்கெனவே சுற்றுலா மையங்~
களைப் பற்றி இரண்டு படங்கள் தயாரித்து வெளியிட்~
டுள்ளது. மூன்றாவது படம் தயாராகிக் கொண்டிருக்~
கிறது. இந்திய அரசு சுற்றுலாத்துறை ஒத்துழைப்புடன்
அயல்நாட்டு நிபுணர்கள், எழுத்தாளர்கள், சுற்றுலாத்
துறையில் ஈடுபட்டுள்ளோர்களை வரவழைத்துத் `தென்~
னகம் நோக்கி' என்னும் திட்டத்தின்கீழ் தமிழகத்தையும்
பிற மாநிலங்களையும் சுற்றிக்காட்டி அனுப்பியுள்ளது.
தமிழக அரசு `தமிழரசு' என்னும் இதழை வெளியிடுகிறது.</p>

<p>
படிப்பு</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவ~
ராய் இருந்த ஏ. வி. பி. ஆசைத்தம்பியும் மற்றும் இரண்டு
மூத்த அதிகாரிகளும் சிங்கப்பூர், மலேசியா சென்று
சுற்றுலாத்திட்டங்஖ளைக் கண்டு வந்தனர். இன்று
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் `சுற்றுலாவியல்,
பாடமாக அமைந்துள்ள஥ு.</p>

<p>
வெளிநாட்டுப் பயணிகள்</p>

<p>	வெளிநாட்டுப் பயணிகளை ஒரு சேர அமைத்துச்
செல்லும் சுற்றுலாத் திட்டத்தைத் தமிழ்நாடு சுற்றுலா
வளர்ச்சிக் கழகம் சிறப்பான முறையில் செயல்படுத்தி
வருகிறது. அத்திட்டம் வெளிநாட்டுப் பயணிகளுக்குப்
பெரிதும் உதவுகிறது. இந்தியாவிற்குள் வரும் சுற்றுலாப்
பயணிகளில் 25% பயணிகளே தமிழ்நாட்டிற்குள் வரு~
கின்றனர். 1979 ஆம் ஆண்டிற்குப்பின் தமிழகத்திற்கு
-177-
வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
20% உயர்ந்துள்ளது. பல்வேறு வரலாற்றுச் சுற்றுலாச்
சிறப்பினைத் தமிழகம் பெற்றிருந்தும் 1981 ஆம் ஆண்டு
2.22 இலட்சம் வெளிநாட்டுப் பயணிகளே தமிழகம்
வந்துள்ளனர்.</p>

<p>	தமிழ் நாட்டிற்குள் வந்த பயணிகளைத் தமிழகம்
நன்றாகக் கவர்ந்துள்ளது. "மாமல்லபுரம் பகுதிக்கு
எங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் ஏராளமாக
வருவதன்மூலம் இந்த வட்டாரத்தில் உள்ள மக்கள் வாழ்வு
வளம் பெறும். எங்களால் என்றும் மறக்க முடியாத
இந்த இடத்திலேயே நீண்ட நாள் தங்கிவிட மாட்டோமா
என்ற ஏக்கம் எங்கள் எல்லோருக்கும் உண்டு" என்று
22-7-84 ஆம் நாளன்று மாமல்லபுரத்தில் ஓட்டல் திறப்பு
விழாவில் வெளிநாட்டுப் பயணிகள் பேசியுள்ளனர்.</p>

<p>
மேம்பாட்டுத் திட்டங்கள்</p>

<p>	1. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அ஦ன்
திட்டங்களோடு தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின்
திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. சென்னையில்
மத்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தொடர்புடன்
மூன்று நட்சத்திர விடுதி ஒன்றினை நிறுவ முனைந்துள்ளது.</p>

<p>	2. சென்னை நகரில் `சுற்றுலா முகாம்' என்ற
புதுமையான திட்டத்தைச் செயல்படுத்த நினைத்துள்்ளது.
ரூ. 12.50 இலட்சம் செலவில் உருவாக்கப் பெறவிருக்கும்
அந்த முகாமில் சென்னை நகருக்குப் பேருந்துகள்மூலம்
வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கும்,
பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும், பேருந்துகளில் பயணி~
களை அனுப்பி வைப்பதற்கும் வசதியாக அமைக்கப்படும்.</p>

<p>	3. மாமல்லபுரம் சுற்றுலா முகாம் மேம்பாட்டுத்
திட்டத்தின்கீழ் ரூ. 5 இலட்சம் செலவில் மேலும் 6 குடில்கள்
கட்டப்படவிருக்கின்றன. மாமல்லபுரம் கடற்கரை
-178-
வளாகத்தில் ரூ. 48.50 இலட்சம் செலவில் 28 குடில்கள், நீச்சல்
குளம் மற்றும் உணவு விடுதி அமைக்கப் பெற்று முடியும்
நிலையில் உள்ளன. மேலும் அங்குக்கட்டப்பட்ட கடற்~
கரைச் சுற்றுலா வளாகக் குடில்கள், நீச்சல்குளம் உண~
வகம் ஆகி௟வை 22-7-84 ஆம் நாளன்று திறந்து வைக்கப்
பெற்றன. இந்தச் சுற்றுலாப் பயணிகள் முகாம் இந்தியா~
விலேயே முதன்மையானதாகும்.</p>

<p>	பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுச் செழுமையினை~
யும், கலை வளர்த்த பல்லவர்களையும் அயல் நாட்டினர்
அறிந்து மகிழ மாமல்லபுரத்தில் கடற்கரையருகில்
ரூ. 40 இலட்சம் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம்
அமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலை, கோவில் கட்டிடக்
கலையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாய் இந்தியத்
துணைக் கண்டத்திலேயே அவ்வகையில் முதலாவதாக
அக்காட்சியகம் அமையும். அது 25 ஏக்கர் நிலத்தில்
அமையும். 1980-81 -ல் ரூ. 9.80 இலட்சமும், 1981-82-ல்
ரூ. 10 இலட்சமும் செலவிடப்பட்டது.</p>

<p>	1982 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் மதுரைத்
திருமலை நாயக்கர் மகாலில் ரூ. 40 இலட்சம் செலவில்
ஒலி ஒளிக் காட்சியினை அமைத்துள்஼ளது. மாமல்ல
புரத்தில் ஒலி ஒளிக் காட்சி ஒன்று அமைக்கும் பொருட்டு
ரூ. 47 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது. பழைய சின்ன஼ங்~
களைப் பயன்படுத்தி அந்நிகழ்ச்சியை நடத்தியிருப்பதால்,
மத்திய அரசு தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின்
ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. ஒப்புதல் பெற்றவுடன்
ஒலி-ஒளிக்காட்சி நடைபெறும்.</p>

<p>	மாமல்லபுரத்தின் மேப்பாட்டிற்காக ரூ. 6 கோடி
செலவில் மாபெரும் திட்டம் ஒன்று வகுக்கப்பெற்றுள்ளது.
மாமல்லபுரத்தின் குடவரைக் கோவிலும் கடற்கரைக்
கோவிலும், வெண்மணற் பரப்பும், அழகிய கடற்கரையும்
உலகிலுள்ள சிறந்த சுற்றுலா இடங்களுள் ஒன்றாக 
-179-
ஆக்குகின்றன. மாமல்லபுரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்~
கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு முன்னுமை அடிப்படையில்
முதல் கட்டமாகப் பின்வரும் ஐந்து திட்டங்களை நிறை~
வேற்றுவதெனக் கருதியுள்஼ளது:</p>

<p>	(i)	சுற்றுலாச் சாலை அமைத்தல்.
	(ii)	வாகனங்கள் நிறுத்துமிடத்தை உருவாக்குதல்.
	(iii)	ஒழுங்கு முறையில் அங்காடிகளை ஏற்படுத்துதல்.
	(iv)	எழில் வளாகம் உருவாக்குதல்.
	(v)	பொழுதுபோக்கு வசதிகளைச் செய்து தரல்.</p>

<p>	இந்த ஐந்து திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக
முதல் தவணையாக ரூ. 25 இலட்சம் வழங்குமாறு தமிழக
அரசு மத்திய அரசைக் கேட்டுள்ளது. கடைகள் பிரிவு,
திறந்தவெளிக் கலையரங்கு போன்றவை கட்டப்
பட்டுள்ளன.</p>

<p>	4. பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழப்பட்ட
பிச்சாவரம் மேம்பாட்டிற்காக இதுவரை ரூ. 12.50
இலட்சம் செலவில் இளைஞர் விடுதி, குடில்கள், உணவு
விடுதி, படகு குழாம் ஆகியவை முடியும் தறுவாயில்
உள்ளன. மேலும் 4 குடில்கள் கட்டவும், உல்லாசப்
படகுகள் வாங்கவும் ரூ. 5 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்
பட்டுள்ளது.</p>

<p>	5. பெருகிவரும் சுற்றுலாப் பயணிகளின் தேவை~
களையும் பொழுதுபோக்கு வசதிகளையும் மனத்திற்~
கொண்டு மண்டபம், உதகமண்டலம், ஏர்க்காடு போன்ற
இடங்களில் `படகு குழாம்' அமைக்கவுள்ளது. உதகைப்
படகுக்குழாம் மேம்பாட்டிற்காக ரூ. 20.5 இலட்சம்
செலவில் ஒருதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. மண்டபத்தில்
படகுத்துறை, துயிற்கூடம் அமைக்க ரூ. 5.30 இலட்சம்
செலவிடப்பட்டுள்ளது.
-180-</p>

<p>	கொச்சியில் உள்ள இரண்டு படகுக் கம்பெனிகள் உயர்~
தரப் படகுகளைத் தயாரித்துள்ளன. அவை சப்பான்
நாட்டின் எ஋ஞ்சின்களால் உருவானவை. அவை மண்~
ணெண்ணெயில் ஓடக் கூடியவை. ஒரு படகின் விலை
ரூ. 40,000 ஆகும். அவை படகு விளையாட்டுக்கும்,
பயணிகள் மகிழ்ச்சியாகப் படகில் செல்வத஼ற்கும் பயன்~
படும். இந்தியாவில் மீன்பிடிக்க விரும்புபவர்களுக்கான
சுற்றுலா இன்னும் முன்னேறவில்லை. அது ஆரம்ப
நிலையில் உள்஼ளது.</p>

<p>	6.  உதகமண்டலம் மலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,
சிறுவர்களுக்கான புகைவண்டி வாங்கவும், அதற்கான
இருப்புப் பாதைகள் அமைக்கவும், சிறுவர் பூங்கா
அமைக்கவும் ஏறத்தாழ ரூ. 20 இலட்சம் செலவிடப்படு~
கிறது.</p>

<p>	7. மிகத் தொலைவில் உள்ள இயற்கைக் காட்சி~
களைக் கண்டு களிப்பதற்காகத் தமிழ்நாடு சுற்றுலா
வளர்ச்சிக் கழகம் கொடைக்கானலில் இரண்டு தொலை
நோக்கி இல்லங்களையும் ஏர்்க்காட்டில் ஒரு தொலை
நோக்கி இல்லத்தையும் இயக்கி வருகிறது. உதகை
தொட்ட பெட்டாவில் ரூ. 2 இலட்சம் செலவில் தொலை
நோக்கி இல்லம் ஒன்றினை அமைப்பதற்கான வேலைகள்
தொடங்கப் பெற்றுள்ளன. ஏர்க்காட்டில் ஒரு கூடம்
அமைக்க ரூ. 1.10 இலட்சம் செலவிடப்பட்஼ட விருக்கிறது.</p>

<p>	8. இராமேசுவரத்தின் அமைப்பு ஒரு சர்வதேச
சுற்றுலா மையமாக அமைய எல்லா வைகைகளிலும் தகுதி
பெற்றுள்ளது. அதன் வளர்ச்சிக்கு ரூ. 28 கோடி செலவிடப்
பட்டுள்ளது. அங்குப் பயணிகள் வசதியாக஼க் குளிப்பதற்கு
`குளியல் பகுதி' ஒன்றையும், ஆடைமாற்றும் அறைகள்
நிறைந்த பகுதி ஒன்றையும் ஏறத்தாழ ரூ. மூன்று இலட்சம்
செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு ரூ. 8 இலட்சம்
செலவில் உணவு விடுதி ஒன்றும், ரூ. 12 இலட்சம்
-181-
செலவில் 12 குடில்களும், ரூ. 10 இலட்சம் செலவில் ஓர்
இளைஞர் விடுதியும் கட்டப்பட்டு வருகின்றன.</p>

<p>	9. மண்டபத்தில் ரூ. 3 இலட்சம் செலவில் உணவு
விடுதி ஒன்று கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.</p>

<p>	10. திருச்சியில் ரூ. 15 இலட்சம் செலவில் ஓர்
இளைஞர் விடுதி கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள஥ு.</p>

<p>	11. கன்னியாகுமரியில் ஒரு கலையரங்கும் ஓர்
இளைஞர் விடுதியும் கட்டப்படவுள்஼ளது.</p>

<p>	12. முதுமலையில் ஓர் உணவு விடுதியும், ஓர் இளைஞர்
விடுதியும் ரூ. 7 இலட்சம் செலவில் கட்டப்படுகின்றன.</p>

<p>	13. கொடைக்கானலில் ரூ. 11.95 இலட்சம் செலவில்
ஓர் உணவு விடுதியும், ஓர் இளைஞர் விடுதியும் கட்டி
முடிக்கும் தறுவாயில் உள்ளன.</p>

<p>	14. காஞ்சிபுரத்தில் ரூ. 44.50 இலட்சம் செலவில்
20 அறைகள் கொண்ட புதிய பயணிகள் விடுதி ஒன்றினைக்
கட்டத் திட்டமிடப்பட்டுள்஼ளது.</p>

<p>	15. புதுக்கோட்டையில் சுற்றுலா விடுதி ஒன்றினைக்
கட்டத் திட்டமிடப்பட்டுள்ள஥ு.</p>

<p>	16. ஒகேனக்கல்லில் ரூ. 5 இலட்சம் செலவில்
தொங்கு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒகேனக்~
கல்லில் காவிரியின் குறுக்கே ரூ. 7.50 இலட்சம் செலவில்
நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் தர்மபுரி
மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த சிறப்பான
இடமாகும். அது காவிரிநதி தமிழ் நாட்டில் முதன் முதலில்
புகும் இடமாகும். அங்குள்ள தமிழ்நாடு ஓட்டலில்
74 படுக்கைகள் உள்ளன. மேலும் 42 படுக்கைகள் கொண்ட
இளைஞர் விடுதி ஒன்று ரூ. 5.42 இலட்சம் செலவில் கட்டப்
பட்டுள்ள஥ு.</p>

<p>	17. தஞ்சை மாவட்டம் பூம்புகார் கலைக் கூடத்தின்
மேம்பாட்டிற்காகக் குடிதண்ணீர் வசதி, மேல்நிலை
-182-
நீர்த்தேக்கத் தொட்டி, சாலைகள் அமைத்தல் போன்ற~
வற்றிற்காக ரூ. 7.20 இலட்சம் ஒதுக்கப்பட்டுப் பணிகள்
நடந்து வருகின்றன.</p>

<p>	18. சுற்றுலா கிராமங்களை ஏற்படுத்தும் திட்டத்தைத்
தமிழ்நாடு அரசு வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட
இடங்களில் அத்தகைய கிராமங்களை ஏற்படுத்தத்
தேவையான வசதிகளை அளிக்கத் தமிழ்நாடு அரசு
விருப்பம் தெரிவித்துள்ள஥ு. மாமல்லபுரம் மேம்பாட்டுத்
திட்டத்தில் அதையும் ஒரு பகுதியாகத் தமிழக அரசு
இணைத்துள்஼ளது.</p>

<p>	19. ஒவ்வொரு சுற்றுலா மையத்திலும் சுற்றுலாப்
புகார் நிலையம் அமைத்து, ப௟ணிகள் சுட்டிக் காட்டும்
குறைகளை உடனடியாகப் போக்க முயற்சி மேற்஼கொள்ளப்
படுகிற஥ு.</p>

<p>	20. 6 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ்சுற்றுலா
வளர்ச்சிக்காகக் குறைந்தது இரண்டு பெரிய "பயண
வட்டங்களைத்" தமிழகத்தில் தேர்ந்தெடுக்குமாறு மைய
அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் கீழ்க் கண்ட மூன்று
பயண வட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அப்~
பயண வட்டங்களின் மேம்பாட்டிற்கென மைய அரசும்
மாநில அரசும் செய்யவிருக்கும் முதலீடு நல்ல பயனை
விளைவிக்கும்.</p>

<p>	1. சென்னை - மாமல்லபுரம் - திருக்கழுக்குன்றம் -
காஞ்சிபுரம் - திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் - புதுக்
கோட்டை - மதுரை - இராமேசுவரம் - கன்னியாகுமரி -
குற்றாலம் - திருவனந்தபுரம்.</p>

<p>	2. சென்னை - கிருஷ்ணகிரி - ஒகேனக்கல் - ஏற்காடு
- கோயம்புத்தூர் - உதகமண்டம் - முதுமலை - மைசூர் -
பெங்களூர்.</p>

<p>	3. இராமேசுவரம் - மதுரை - கொடைக் கானல் -
புதுக்கோட்டை - திருச்சிராப்பள்ளி ௃- தஞ்சாவூர் - மாமல்லபுரம்
-183-
- சென்னை. இம்மூன்று பயண வட்டங்களின் மேம்~
பாட்டிற்கென ரூ. 70 கோடி செலவினைக் கொண்ட
பெரும் திட்ட வரைவு ஒன்றும் வரையப்பட்டு மைய
அரசின் நிதி உதவியைப் பெறுவதற்கென அனுப்பப்
பட்டுப் பரிசீலனையில் இருந்து வருகிறது.</p>

<p>	21. பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம்,
பாஞ்சாலங் குறிச்சி போன்ற இடங்கள் மக்களைக் கவர்ந்~
துள்ளன. மெரினாக் கடற்கரையை அழகுபடுத்துதல்,
மகாபலிபுரக் கடற்கரையை உலகளவுக் கடற்கரையாக
மாற்றுதல் போன்ற ப஼ணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு இந்தியாவின் தென்பகுதியில் உள்ளது. எனவே
சென்னை வழியாகச் சிங்கப்பூர் மலேசியாவிற்கு அடிக்கடி
விமானங்கள் விடவேண்டும். சென்னை - சப்பான் பாதை~
யைத் திறக்கவேண்டும். சுற்றுலா நிபுணர்கள் வெளி
நாடுகளுக்கு அனுப்பிப் பார்த்துப் படித்துவரச் சொல்ல
வேண்டும். பொங்கல் விழாவைத் தமிழகம் முழுவதும்
கொண்டாட வேண்டும். 1973 முதல் சென்னை ஓட்டல்~
களில் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவை
அயல்நாட்டுப் பயணிகளைக் கவருவதால், தமிழ்நாட்டின்
பிற பகுதிகளிலும் நடத்தப்பட வேண்டும். அயல்நாட்டுப்
பயண முகவர்கள், எழுத்தாளர்கள், போன்றோரை
அழைத்துத் தமிழ்நாட்டைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும்.
சுற்றுலா மையங்களையும் சுற்றுலாப் பயணிகளையும்
இணைப்பவர்கள் பயண முகவர்கள் ஆவர். அவர்கள்
தமிழ்நாட்டின் சுற்றுலா மையங்களை நன்கு அறிந்திருக்க
வேண்டும். எனவே இந்தியாவில் உள்ள எல்லாச் சுற்றுலா
முகவர்களையும் அழைத்து 1975-ல் சென்னையில் ஒரு
மாநாடு நடத்தப்பட்டது. 1971-ல் தென் மாநிலச்
சுற்றுலா அமைச்சர்களின் மாநாடு சென்னையில் நடந்தது.</p>

<p>
பணியாளர்கள்</p>

<p>	தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிற்பபு,
அதன் ஊழியர்களின் பண்பை ஊக்குவிப்பதாகும். எனவே
-184-
இக்கழகம் தொழிலாளர் நலனைப் பேணிக்காக்கிறது.
ஊழியர்களின் சேவை மனப்பான்மையை வளர்த்து
வருக஼ிறது. அதன் அடிப்படையில் அக்கழகம் ஊழியர்~
களுக்கு வழங்கப்படும் ஊதியம்,
	
	1972-'73-ல் ரூ. 5.37 இலட்சமாகவும்,
	1976-'77-ல் ரூ. 14.02 இலட்சமாகவும்,
	1979-'80-ல் ரூ. 26. 29 இலட்சமாகவும்,
	1981-'82-ல் ரூ. 38. 18 இலட்சமாகவும்,</p>

<p>	1981-'82-ல் ரூ. 50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்~
டுள்ளது.</p>

<p>	1952 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் உற்பத்தித்
திறன் அடிப்படையில் ஊழியர்களுக்குச் சிறப்புப் போனசு
அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. உற்பத்தித்
திறனை அடிப்படையாகக் கொண்டு `ஊக்க போனசு'
அளிக்கப் பெறுகிறது.</p>

<p>	சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் 650 பேர் பணியாற்று~
கிறார்கள். அவர்கள் சென்னைத் தலைமை அலுவலகத்~
திலும், போக்குவரத்துத் துறையிலும், மாநிலத்திலுள்ள
எல்லாச் சுற்றுலா மாளிகைக஼ளிலும், நெடுஞ்சாலை ஓய்வு
விடுதிகளிலும் பணியாற்றுகிறார்கள். ஊழியர்களின்
நலனைப் பேணிக்காக்கவும், அவர்களுடைய குறைகளை
அறிந்து உடனடியாகச் செயல்படவும், `ஊழியர் நலக்குழு,
ஒன்று அமைக்கப்பெற்று நல்ல முறையில் செயல்பட்டு
வருகிறது. அக்குழுவில் ஊழியர்களின் உறுப்பினர்களும்,
அலுவலர்களும் உறுப்பினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.</p>

<p>	31-3-1980 முதல் (எம்பிளாய்ஸ் கிராஜுடி டிரஸ்ட்)
ஊழியர்பணிக் கொடைநிதி அமைப்பு உருவாக்கப்
பட்டுள்ளது. சுற்றுலா மாளிகைகள் மற்றும் ஓய்வு விடுதி~
களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டு வசதி செய்து
-185-
கொடுக்கத் திட்டம் ஒன்று வகுக்கப்பெற்றுப் பல கட்டங்~
களாக அது நிறைவேற்றப்பட்டு வருகிற஥ு.</p>

<p>	ஊழியர்களுக்கான சம்பள விகிதங்களை மாற்றி~
யமைக்கவும், மற்றும் பல சலுகை஖ள் வழங்கவும், நிறுவனத்~
தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு பரிந்துரை
செய்யத் தனிக்குழு ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது.
அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஊழியர்களுக்கு
ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து, மற்றும் பல சலுகை~
களையும் வழங்கியுள்ளது. ஏற்கெனவே இயங்கிவரும்
சுற்றுலா அலுவலகங்களை வலுப்படுத்துவதோடு குறைந்த
பட்சம் இளநிலை உதவியாளர்கள் போன்றவர்களை
ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.</p>

<p>	களப்பணி ஆற்றும் சுற்றுலா அலுவலர்கள் சுற்றுலாத்
துறை மேற்கொள்ளும் மேம்பாடு, விளம்பரம் மற்றும்
திட்டப் பணிகள் செயலாக்கத்தில் மிக முக்கியப் பங்கேற்க
வேண்டியவர்களாக இருக்கிறார்கள். மாவட்ட அளவில்
அவர்கள் மாவட்ட ஆட்சியர், பிறதுறை அலுவலர்கள்,
பயண முகவர்கள் போன்றவர்களோடு சுற்றுலா வளர்ச்சிப்
பணிக்஼காக இணைந்து செயலாற்ற வேண்டியுள்ளது.
அவர்கள் பயன்மிக்க முறையில் செயலாற்஼ற வேண்டு~
மானால் சுற்றுலாத் தொழிலில் ஏற்பட்டு வரும் புதிய
மாறுதல்கள், வளர்ச்சிகள் ஆகியவற்றை நன்கு அறியச்
செய்ய வேண்டுவது மிகத் தேவையாகிறது. அதற்காக
அவர்களுக்குப் புத்தறிவுப் பயிற்சி அளிக்கத் தீர்மானிக்கப்
பட்டது. அத்திட்டத்தின் ஓர் உறுப்பாக முதல் அணி
சுற்றுலா அலுவலர்கள் 1983 அக்டோபர்஼த் திங்கள் வட
இந்தியாவில் புது தில்லி, ஆக்ரா, சண்டிகர், சிம்லா,
ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயிற்சிப் பயணம் சென்று
வந்தனர்.</p>

<p>
பயண முகவர்கள்</p>

<p>	சுற்றுலாப் பயணிகளையும் சுற்றுலா இடங்களையும்
இணைப்பவர்கள் பயணமுகவர்கள் ஆவர். எனவே
-186-
சுற்றுலா முகவர்களுக்குத் தமிழ்நாட்டின் சுற்றுலா
மையங்களைப் பற்றி நன்றாகத் தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் அச்செய்தியை அயல்நாட்டினருக்குக் கூறுவர்.
அதனால் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் தமிழ்
நாட்டிற்குள் வர வாய்ப்பு உள்஼ளது. பயணமுகவர்களே
சுற்றுலாவை வணிகமாக்குகிறார்கள். பயண முகவர்கள்
பயணிகளிடம் சுற்றுலா மையங்களைப் பற்றிக் கூறிப்
பரப்புகிறார்கள். அவர்கள் குழுச் சுற்றுலாவையும் நடத்திப்
பல்வேறு இடங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
1982ஆம் ஆண்டில் இந்தியப் பயண முகவர்களின் 31 ஆவது
ஆண்டுவிழா (டி. எ. எ. ஐ) சென்னையில் சிறப்பாக
நடைப்பெற்றது.</p>

<p>	தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்யும் சுற்றுலாப்
பயணத் திட்டங்கள் மிகவும் பாராட்டுப் பெற்றவையாக
உள்ளன. அப்பகுதியிலிருந்து பெரும்பகுதி பயணிகளைக்
கவரும் பொருட்டும், வெளிநாட்டுப் பயணிகளின் வேண்டு~
கோளுக்கு இணங்கவும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும்
பொது விற்பனை முகவர்களை அண்மையில் நியமித்~
துள்ளது. இந்தியத்துணைக் கண்டத்திலேயே சுற்றுலாவிற்~
கென வெளிநாட்டு முகவர்களை நியமித்துள்ள முதல்
சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்
கழகமாகும்.</p>

<p>	சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றுலாப் பயணச் சீட்டுகள்
எளிதில் கிடைக்க வகை செய்யும் பொருட்டுச் சென்னை~
யிலுள்ள பெரிய ஓட்டல்களும், சுற்றுலாப் பயணமுகவர்
அமைப்புகள் 1979 அக்டோபர்த் திங்கள் முதல் அக்கழகத்~
தின் பயணச்சீட்டு விற்கும் முகவர்களாக ஆக்கப்பெற்றனர்.
பம்பாய், தில்லி போன்ற பெருநகரங்களிலும் தமிழ்
நாட்டுச் சுற்றுலாப் பயண ஊர்தியில் பயணம் செய்வதற்~
கெனப் பயணச் சீட்டுகள் கிடைக்கின்றன.
-௃187-</p>

<p>பிற</p>

<p>	தமிழ்நாட்டில் நன்கு பேணிக் பாதுகாக்கப்பட்ட
சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டுச் சாலைகளை வெளி
நாட்டினரும் புகழ்கின்றனர். பருவகாலங்களில் அரசு
உடைமையாக்கப் பெற்ற பேருந்துக் கழகங்கள் சிறப்புப்
பேருந்துகளை விடுகின்றன.</p>

<p>	தமிழ்நாடு அரசு 3, 4, 5 நட்சத்திர விடுதி஖ளைக்
கட்டுகின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து கொடுத்துத்
தேவையான வசதிகளையும் செய்து தருகிறது.</p>

<p>	தமிழ்நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களை அகற்றி~
யுள்ளது. அவர்கள் மறுவாழ்வுக்குத் தனி வாரியம்
அமைத்துள்ளது. தமிழக அரசு கைவண்டி ரிக்ஶாக்களை
ஒழித்துள்ளது.</p>

<p>	அயல் நாட்டினருக்காக விளம்பரத்தாள்கள், புதிய
சுற்றுலா பற்றிய விளக்கங்கள், செலவில்லாத வரை
படங்கள், வெளியீடுகள், படங்கள், சுவரொட்டிகள்,
இலக்கியம், ஒலி ஒளிக்காட்சிகள், செய்தித்திரைப் படங்கள்
போன்றவற்றைச் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் வெளி~
யிட்டுள்ள஥ு. 1973, 1974 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாக
விளம்பரம் செய்ததற்காகத் தமிழ்நாடு அரசு இருமுறை
நற்சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. அதனை இந்தியச்
சுற்றுலா முகவர்஼கள் கழகம் வழங்கியது.</p>

<p>	சுற்றுலாவை அரசு மட்டும் மேம்படுத்த முடியாது.
அரசு, பயணமுகவர்கள், மக்கள் ஆகிய மூவரும் சேர்ந்தே
அதனை மேம்படுத்த முடியும். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய
நாடுகளில் `சுற்றுலா' ஒரு சிறந்த தொழிலாகவும்,
மக்களிடையே ஒருமைப்பாட்டு எண்ணத்தை உருவாக்கும்
கருவியாகவும் கருதப்படுகிற஥ு. அரசுடன் மக்களும்
முழுமையாகச் சுற்றுலாத் துறையில் ஈடுபடுகிறார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலை தமிழ்நாட்டிலும் உருவாக
வேண்டும்.
-188-</p>

<p>	5. பன்னாட்டுப் பலவகைப் பயணிகள்</p>

<p>	கிறித்து பிறப்பதற்கு முன்பே தமிழர் சுமேரியா, கீரிசு,
உரோமம், எகிப்து, சீனம், பாலத்தீனம் மெசபொ~
டேமியா பாபிலோனியா போன்ற நாடுகளுடன் வாணிகத்
தொடர்புகொண்டுள்ளனர். யூதர்களின் தலைவர் மோசசு,
தாம் நடத்திய வழிபாட்டில் தமிழகத்து ஏலக்காயைப்
பயன் படுத்தியுள்ளார். அக்காலம் க஼ி.மு. 1490 என்பர்.
சுமேரியாவிலுள்ள சந்திரன் கோயில் சிதைவுகளில் சேர
நாட்டுத் தேக்கு மரத்துண்டுகள் காணப்பெறுகின்றன.
"அரேபிய, கிரேக்கக் கப்பல்கள் முசிறியில் நிறைந்~
திருந்ததாகப் பெரிப்புளுசு கூறுகிறது. இப் பாலசு என்னும்
கிரேக்க அறிஞர் (கி. பி. 45) முதலில் தென்மேற்குப் பருவக்
காற்றின் தன்மையைக் கண்டறிந்தார் என்பர். அதனால்
வாணிகம் சிறப்படைந்தது. உரோமரின் கடல் வாணிகம்
அகஸ்டசுவின் காலத்தில் நல்ல வளர்ச்சியுற்றது.
ஸ்டிராபோவின் கூற்றுப்படி ஆர்மசு துறைமுகத்திலிருந்து
சுமார் 120 கலங்கள் புறப்பட்டன. பாண்டிய மன்னன்
தூதுவர் இருவரை அகஸ்டசுவின் அவைக்கு அனுப்பினான்.
தமிழகத்தில் உரோமர்கள் நிலையாகக் குடியேறி
இருந்தனர். பிளினி அவர்கள் வழியாகவே தமிழகம்
பற்றி அறிந்தார்." முத்தும் பவளமும், ஆரமும் அகிலும்,
வெண் துகிலும், சங்கும், மிளகும் யவனரைக் கவர்ந்தன.
யனவர் என்பார் அயோனியா பகுதியைச் சார்ந்தவர்.
அவர்கள் பொன்னொடு வந்து மிளகொடு பெயர்ந்தனர்.
-189-</p>

<p>	பண்டைத் தமிழர் சமயத்தின் பொருட்டும் பயணம்</p>

<p>செய்துள்ளனர். குடமலை நாட்டிலுள்ள மாங்காட்டு
மறையோன் திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய இடங்களில்
உள்ள திருமாலை வணங்குவதற்காகச் சென்றான்.
-190-௃
மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன் திருமகளும்
விரும்பும் காவிரிப் பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற
பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்ற~
வனாகிய பூமாலையை யுடைவனும், மணிமாலையை 
யுடையவனும், பொற்பூணினை யுடையவனும், பூமி~
யிலுள்ளோர் காணலாகாத பலரும் தொழும் தெய்வ
வடிவினை யுடையவன் என்றும் சீத்தலைச்சாத்தனார்
பகருகின்றார். சங்ககால மக்கள் இவ்விரு காரணங்~
களுக்காக வெளியிடங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
சங்க காலப் பயணிகள் எழுதி வைத்த குறிப்புகள் கிடைக்க~
வில்லை. இனி உலகப் பயணிகளைப் பற்றிக் காணலாம்.</p>

<p>
தாலமி</p>

<p>	தாலமி யவன நாட்டைச் சார்ந்தவர். அவர்
கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தார்.
எகிப்தில் துறைமுகப் பட்டினமாக உள்ள அலைக்சாந்திரி~
யாவில் நெடுங்காலம் வாழ்ந்தவர். எட்டுத் தொகுதிகளை
உடைய உலக நூலையும், நிலவியலுக்கு வழிகாட்டி
என்னும் நூலையும் எழுதியுள்ளார். அவர் ஒரு வான
நூலறிஞர். பூம்புகாரைந் தாலமி கபேரிஸ் என்று
வழங்குகிறார். தமது நூலில் காவிரிப்பூம்பட்டினத்தையும்,
காவிரியாற்றையும் குறிப்பிட்டு உள்ளார். நீண்ட஼நாள்
வாழ்ந்த தாலமி கொற்கைத் துறைமுகத்தைப் பற்்றியும்
எழுதியுள்ளார். அவர் வரைந்த படங்களில் கொற்கையும்
இடம் பெற்றிருக்கிறது. கொற்கை ஒரு மாபெரும் வணிகத்
துறையென்றும், சிறந்த துறைமுகப்பட்டினம் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.</p>

<p>	தாலமியின் காலத்தைச் சார்ந்த வணிகர்க஼ள்
பயணிகள் போன்றோர் தாங்கள் கண்டவற்றைப் பற்றிய
செய்திகளையும், அவற்றைப் பற்றித் தங்களுக்குத்
தோன்றிய எண்ணங்களையும் எழுதி வைத்தனர். தாலமி
அவற்றை அறிவியல் முறைப்படித் தொகுத்தார். தாலமிக்குப்
-191-
பின்னர் வந்த ஆசிரியர்கள் முன்னரேயிருந்த செய்தி~
களைப் பார்த்தெழுதுவதிலும், திரட்சித் தொகுப்~
பதிலுமே ஈடுபட்டனர்.</p>

<p></p></body></text></cesDoc>