<cesDoc id="tam-w-legislation-6nadu15" lang="tam">
<cesHeader type="text">
<fileDesc>
<titleStmt>
<h.title>tam-w-legislation-6nadu15.txt</h.title>
<respStmt>
<respType>Electronic file created by</respType>
<respName>Central Institute for Indian Languages, Mysore</respName>
<respType>transferred into Unicode and CES format by</respType>
<respName>"Unicodify" software by Andrew Hardie</respName>
</respStmt></titleStmt>
<publicationStmt>
<distributor>UCREL (on behalf of CIIL)</distributor>
<pubAddress>Department of Linguistics, Lancaster University, Lancaster, LA1 4YT, UK</pubAddress>
<availability region="WORLD"></availability>
<pubDate>03-07-04</pubDate>
</publicationStmt>
<sourceDesc>
<biblStruct>
<monogr>
<h.title>தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள் செயலக வெளியீடு</h.title>
<h.author>****</h.author>
<imprint>
<pubPlace>India</pubPlace>
<publisher>Unknown - Book</publisher>
<pubDate>1988</pubDate>
</imprint>
<idno type="CIIL code">6nadu15</idno>
</monogr></biblStruct></sourceDesc></fileDesc>
<encodingDesc>
<projectDesc>Text collected for the CIIL Corpus, subsequently integrated into the EMILLE/CIIL Monolingual Written Corpora.</projectDesc>
<samplingDesc>Simple written text only has been transcribed. Diagrams, pictures and tables have been omitted. Sampling begins at page 8.</samplingDesc>
<editorialDecl><conformance level="1"></conformance></editorialDecl>
</encodingDesc>
<profileDesc>
<creation><date>03-07-04</date></creation>
<langUsage>Tamil</langUsage>
<wsdUsage>
<writingSystem id="ISO/IEC 10646">Universal Multiple-Octet Coded Character Set (UCS).</writingSystem>
</wsdUsage>
<textClass>
<channel mode="w">print</channel>
<constitution type="composite"></constitution>
<domain type="public"></domain>
<factuality type="fact"></factuality>
</textClass>
<translations></translations>
</profileDesc>
<revisionDesc></revisionDesc>
</cesHeader>

<text><body>

<p>-1-
		1. இரங்கற் குறிப்புகள்.</p>

<p>	(அ) முன்னாள் உறுப்பினர்கள் மறைவு.</p>

<p>	மாண்புமிகு பேரவைத் தலைவர் : தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையின் முன்னாள் உறுப்பினர்களான திரு. ம. ஆபிரகாம்
அவர்கள் 2-12-1987 ஆம் தேதியன்றும், திரு. ஆர். சுப்ப ஐயர்
அவர்கள் 9-1-1988 ஆம் தேதியன்றும் மறைந்தமை குறித்து
இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-2-
	திரு. ம. ஆபிரகாம் அவர்கள் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற
பொதுத் தேர்தலில் செங்கற்பட்டு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி~
யிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்~
கப்பட்டு பணியாற்றினார்.</p>

<p>	திரு. ஆர். சுப்ப ஐயர் அவர்கள் 1946 ஆம் ஆண்டிலிருந்து
1952 ஆம் ஆண்டு வரை செங்கற்பட்டு பொது கிராமப்புற தொகுதி~
யிலிருந்து அன்றைய ஒருங்கிணைந்த சென்னை சட்டமன்றப்
பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றி~
யுள்ளார்.</p>

<p>	அன்னார்களின் மறைவு குறித்து அவர்களை இழந்துவிட்ட
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும்,
இரங்கலையும் இப்பேரவையின் சார்பிலும், என் சார்பிலும்
தெரிவித்துக் கொள்கிறேன்.</p>

<p>	இயற்கை எய்தியவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகை~
யில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள்
மௌனமாக எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.</p>

<p>	(உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன~
மாக எழுந்து நின்றனர்.)</p>

<p>
	(ஆ) முன்னாள் உறுப்பினர் திரு. பி. இராமமூர்த்தி மறைவு.</p>

<p>	மாண்புமிகு பேரவைத் தலைவர் : தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையின் முன்னாள் உறுப்பினரான திரு. பி. இராமமூர்த்தி
அவர்கள் 15-12-1987 ஆம் தேதியன்று மறைந்தமை குறித்து
இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-3-
	திரு. பி. இராமமூர்த்தி அவர்கள் 1952 ஆம் ஆண்டிலிருந்து
1957 ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்டம், மதுரை வடக்குத்
தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குத் தேர்ந்~
தெடுக்கப்பட்டு நல்ல முறையில் பணியாற்றியுள்ளார். மேலும்
1953 ஆம் ஆண்டிலிருந்து 1957 ஆம் ஆண்டு வரை சட்டமன்றப்
பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.
1967 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற
மக்களவை உறுப்பினராகவும், 1960 ஆம் ஆண்டிலிருந்து 1966 ஆம்
ஆண்டு வரையும் மற்றும் 1977 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம்
ஆண்டு வரையும் இருமுறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்~
பினராகவும் நல்ல முறையில் பணியாற்றியுள்ளார். மேலும் 1952
ஆம் ஆண்டிலிருந்து 1956 ஆம் ஆண்டு வரையும் மீண்டும் 1964
ஆம் ஆண்டிலிருந்து சமீப காலம் வரையில் மார்க்சிஸ்ட் கம்௟ூ~
னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலீட் பீரோ)
உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.</p>

<p>	அன்னாரின் மறைவு குறித்து அவரை இழந்துவிட்ட குடும்~
பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும்,
இரங்கலையும் இப்பேரவையின் சார்பிலும், என் சார்பிலும் தெரி~
வித்துக் கொள்கிறேன்.</p>

<p>	இயற்கை எய்தியவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில்
மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள்
மௌனமாக எழுந்து நிற்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.</p>

<p>	(உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன~
மாக எழுந்து நின்றனர்).
-4-
  (இ) எல்லை காந்தி திரு. கான் அப்துல் கபார்கான் மறைவு.</p>

<p>	மாண்புமிகு பேரவைத் தலைவர் : எல்லை காந்தி என
அன்புடன் அழைக்கப்பட்ட திரு. கான் அப்துல் கபார்கான்
அவர்கள் 20-1-1988 ஆம் தேதியன்று மறைந்தமை குறித்து
இப்பேரவைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>

<p>	நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் தலைவர்களில் ஒருவ~
ராவார். இவர் மாகாத்மா காந்தி அவர்களுடன் தோளுடன்
தோள் சேர்ந்து இந்தியத் துணைக் கண்டத்தின் சுதந்திரப்
போராட்டத்திற்காகப் போராடிய புகழ் பெற்ற வீரர்களில் ஒருவ~
ராவார். தாம் மேற்கொண்ட சுதந்திரப் போராட்டத்தின்
காரணமாக தமது வாழ்நாளில் 30 ஆண்டுகள் சிறையில் அடைக்~
கப்பட்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர் ஆற்றிய
தொண்டிற்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ""பாரத
ரத்னா"" விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.</p>

<p>	அன்புவழி, அறவழி ஆகிய காந்திய லட்சியங்களுக்காக
இறுதி மூச்சு வரை வாழ்ந்தவர். காந்தியடிகளின் தத்துவங்~
களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கியவர். மதங்களின் பெயரால்
மக்களைப் பிளவுபடுத்தும் தீயசக்திகளை வாழ்நாள் முழுவதும்
அவர் எதிர்த்துப் போராடினார். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய
இரு நாடுகளுக்கும் இடையில் அன்பு வழியிலும், அமைதி வழியி~
லும் நல்லுறவு நிலவிட அயராது தொண்டாற்றினார்.</p>

<p>	பக்தூன் சமூகத்தினருக்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற
தொண்டு காரணமாக அவருக்கு ""பாட்ஷாகான்"" என்ற பட்டம்
வழங்கப்பட்டது. மனித சமுதாயத்தை அழிக்கும் ஆயுதங்களை
ஒழித்துவிட வேண்டும் என்பதே திரு. கபார்கான் அவர்கள்
உலகுக்கு விடுத்த கடைசிச் செய்தியாகும்.
-5-
	அன்னாரின் மறைவு குறித்து அவரை இழந்துவிட்ட குடும்~
பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும் இரங்~
கலையும் இப்பேரவையின் சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்~
துக் கொள்கிறேன்.</p>

<p>	இயற்கை எய்தியவருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில்
மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள்
மௌனமாக எழுந்து நிற்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.</p>

<p>	(உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌனமாக
எழுந்து நின்றனர்.)</p>

<p>			(முற்பகல் 10-10)</p>

<p>
		     2. இரங்கல் தீர்மானம்.</p>

<p>மாண்புமிகு டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன், முதல் அமைச்சர்
		அவர்களின் மறைவு குறித்து.</p>

<p>	மாண்புமிகு திரு. ஆர். எம். வீரப்பன் : மாண்புமிகு பேரவைத்
தலைவர் அவர்களே, நான் கீழ்க்கண்ட தீர்மானத்தை மொழி~
கிறேன் :</p>

<p>	"" தமிழகத்தின் நாயகராகவும், உலகெங்கும் வாழுகிற தமிழ்
மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், கலைத்தாயின் தலை
மகனாகவும், ஒப்பற்ற மனிதாபிமானியாகவும், உயிருக்கு இறுதி
நேருகிறவரை வற்றாது வழங்குகிற ஜீவநதியாகவும், தமிழக்
திரைப்பட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்து மாபெரும்
சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவராகவும், பேரறிஞர் அண்ணா~
வின் இலட்சியங்களைத் தொடர்ந்து காப்பாற்ற அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிறி஼ அரசியல்
-6-
அமைப்பைக் கண்டு, அந்த இயக்கத்தை வியக்க வைக்கிற
வேகத்தில் வெற்றிபெற வைத்து, அதன் மூலம் அண்ணாவின்
அரசை அமைத்து, பத்தாண்டுக் காலத்திற்குமேல் தமிழகத்தின்
முதல்வர் பொறுப்பில் இருந்து, இந்தியாவின் புகழ் மிக்க முதல்வ~
ராக நல்லாட்சி நடத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில்
செலுத்தியவரும், கடைக்கோடி ஏழைகளின் கண்ணீரைத்
துடைத்து ஏழைகளைச் சிரிக்க வைப்பதையே தனது ஆட்சியின்
முழுமுதல் இலட்சியமாகக் கொண்டவரும், சத்துணவு படைத்த
சரித்திர நாயகனாக விளங்கியவரும், எந்த முடிவை எடுத்தாலும்,
எந்த நடவடிக்கையை மேற்கொண்டாலும் இந்தியத் துணைக்
கண்டத்தின் இறையாண்மைக்கு ஊறுநேராமலும், நாட்டு
ஒற்றுமைக்குப் பழுது வந்துவிடாமலும் காத்தவரும், இலங்கைத்
தமிழ் மக்களின் இன்னல்தீர இறுதிநாள்வரை உழைத்தவரும்,
பாதங்களையே சாதகங்களாக்கிக் கொண்டு வறுமை, வசதி~
யின்மை, உயர் கல்வியின்மை. பின்னணியின்மை ஆகியவை ஒரு
தலைவனின் வளர்ச்சியைத் தடுத்துவிட முடியாது என்பதற்குக்
கண்கண்ட உதாரணமாகத் திகழ்ந்தவரும், இந்தியாவிலும்
உலகின் பல பாகங்களிலும் வாழும் இலட்சோபலட்சம் மக்களின்
அளவற்ற அன்பைப் பெற்றவரும் வாழும்போதே வரலாறு
ஆனவரும் பேரறிஞர் அண்ணா அவர்களால் இதயக்கனி என்றும்,
நாட்டு மக்களாலும், நல்லோர்களாலும் புரட்சித் தலைவரென்றும்
பொன்மனச் செம்மலென்றும், மக்கள் திலகமென்றும் வாழ்஼த்தப்
பெற்றவரும், இரண்டுமுறை மரணத்தையே வென்றவருமான
மாண்புமிகு டாக்டர் எம்.ஜி.ஆர்., அவர்கள் எதிர்பாராமல்
திடீரென்று 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் இயற்கை
எய்தியது குறித்து இப்பேரவை ஆற்றொணாத் துயரத்தையும்,
ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதோடு அவரது மறைவால்
தாங்கொணாத துயருறும் தமிழக முதல்வர் மாண்புமிகு அன்னை
ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்~
தினருக்கும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிற அவரது இலட்சோப
லட்சம் தம்பிமார்களுக்கும் தங்கள் வீட்டுப்பிள்ளையாய் அவரை
நேசித்த தமிழகத்தின் தாய்மார்களுக்கும் உலகம் முழுவதிலு~
முள்ள தமிழ் அன்பர்களுக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிற஼து.""
-7-
	மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எங்களைப்
போன்றவர்களுடைய வாழ்க்கையில் இனிமேல் இப்படி ஒரு
தீர்மானத்தை முன்மொழிகின்ற இந்தக் கொடுமையான காரியத்~
திற்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று இயற்கையை வேண்டிக்
கொண்டு, துதித்துக்கொண்டு, இந்தத் தீர்மானத்தை இந்தப்
பேரவையிலே முன்மொழிகிறேன்.</p>

<p>	மறைந்த தமிழகத்தின் நாயகன், டாக்டர் புரட்சித் தலைவர்
அவர்கள், இன்றைக்கு உலகப் புகழ் பெற்ற ஒரு மாபெரும் மனித~
ராக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். 71 ஆண்டுக்காலம் தமிழ~
கத்திலே வாழ்ந்து, மிகச் சிறந்த தொண்டினை, பணியினை இந்த
நாட்டினுடைய இலட்சோபலட்சம் ஏழைகளுக்காக, குறிப்பாகத்
தாய்மார்களுக்காக அவர்஼கள் நிறைவேற்றியிருக்கிறார்கள்.</p>

<p>	உங்களுடைய அனுமதியோடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
யார் என்பதைச் சுருக்கமாக நான் சொல்ல விழைகிறேன்.
அவர்கள் மிகச் சாதாரண ஒரு குடும்பத்திலே பிறந்தவர் என்று
சொல்ல முடியாத ஒரு சூழ்நிலையில் நல்ல உத்தியோகத்திலே
இருக்கிற தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், அன்றைக்கு
இருந்த ஒரு சூழ்நிலை அவருடைய அன்னையார் அவரைப் பெற்~
றெடுத்த தெய்வமாக விளங்கிய சத்தியபாமா அவர்கள் இந்தக்
குழந்தைகள் வறுமைச் சூழ்நிலையிலே வளர்ப்பதற்கான ஒரு
நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள்.</p>

<p>	எழுபத்தோரு ஆண்டுகாலம் வாழ்ந்திருக்கிறார்கள் ; சுமார்
65 ஆண்டுக்காலம் மக்களோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள்;
அதிலே 15 ஆண்டுகாலம் மக்கள் யார் என்று தெரிந்துகொள்ள
முடியாத அளவிற்குத் தொடர்பு கொண்டு இருந்தார்கள். அதற்குப்
பிறகு 15 ஆண்டுக்காலம் மக்கள் அவரைத் தெரிந்து கொள்கிற
அளவிற்குத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு
சுமார் 20 ஆண்டுக்காலம் மக்கள் அவரைத் தெரிந்து கொள்கின்ற
அந்தச் சூழ்நிலை மாத்திரமின்றி மக்களை அவர்கள் தெரிந்து
கொண்டு, அந்தப் புகழையும், பெருமையையும் மக்களுக்குத்
தொண்டாற்றுவதற்குத்தான் - இந்த மண்்ணிலே இறைவன் மனித~
னைப் படைப்பது௃ மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்குத்~
தான் - என்கிற தமிழச் சாதியினுடைய அந்த இலக்கணத்தை
நிறைவேற்றுகின்ற இலக்கியமாக அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்~
கிறார்கள். அதற்குப் பிறகு கடந்த பத்தாண்டுக் காலம் உலகம்
-8-
முழுவதும் இந்தியாவை உற்று நோக்குகிற நேரத்தில், இந்தியா~
வுக்கு உள்ளே தமிழ் மாநிலத்தை உற்று நோக்கி, அங்கே ஒரு
மாபெரும் தலைவன் பிறந்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்~
கிறான் என்ற உணர்வினைத் தெரிந்து கொள்கிற வாய்ப்பினை
அவர்கள் பெற்றார்கள்.</p>

<p>	அவர்கள் பிறந்த நேரத்திலே வறுமையோடு அந்தத் தாய்
போராடியதைத்தான், உலகமே வியக்கின்ற சத்துணவுத் திட்ட~
மாக, மாண்புமிகு முதலமைச்சராக அவர்கள் இருந்து நிறை~
வேற்றுகிற வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் முதலமைச்சர்
ஆனார்கள் என்பதினாலே அவருக்குப் பெருமை வந்துவிடவில்லை.
மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்கள் இந்த
நாட்டினுடைய முதல்வர் ஆனார் என்பதினாலே தமிழ்நாட்டிற்குப்
பெருமை கிடைத்தது. அப்படிப்பட்ட ஒரு முதல்வரைக்
கொண்ட தமிழகம் இந்தியாவுக்குள்ளே இருக்கிறது என்பதி~
னாலே இந்தியத் துணைக்கண்டத்திற்கும் பெருமை கிடைத்தது.</p>

<p>
",0
               0 
</p></body></text></cesDoc>