<cesDoc id="tam-w-arts-drawing-6vore" lang="tam">
<cesHeader type="text">
<fileDesc>
<titleStmt>
<h.title>tam-w-arts-drawing-6vore.txt</h.title>
<respStmt>
<respType>Electronic file created by</respType>
<respName>Central Institute for Indian Languages, Mysore</respName>
<respType>transferred into Unicode and CES format by</respType>
<respName>"Unicodify" software by Andrew Hardie</respName>
</respStmt></titleStmt>
<publicationStmt>
<distributor>UCREL (on behalf of CIIL)</distributor>
<pubAddress>Department of Linguistics, Lancaster University, Lancaster, LA1 4YT, UK</pubAddress>
<availability region="WORLD"></availability>
<pubDate>03-07-04</pubDate>
</publicationStmt>
<sourceDesc>
<biblStruct>
<monogr>
<h.title>ஒரே மாதத்தில் ஒவியராகலாம்</h.title>
<h.author>ஒவியர் ஆழி</h.author>
<imprint>
<pubPlace>India</pubPlace>
<publisher>Unknown - Book</publisher>
<pubDate>1987</pubDate>
</imprint>
<idno type="CIIL code">6vore</idno>
</monogr></biblStruct></sourceDesc></fileDesc>
<encodingDesc>
<projectDesc>Text collected for the CIIL Corpus, subsequently integrated into the EMILLE/CIIL Monolingual Written Corpora.</projectDesc>
<samplingDesc>Simple written text only has been transcribed. Diagrams, pictures and tables have been omitted. Sampling begins at page 76.</samplingDesc>
<editorialDecl><conformance level="1"></conformance></editorialDecl>
</encodingDesc>
<profileDesc>
<creation><date>03-07-04</date></creation>
<langUsage>Tamil</langUsage>
<wsdUsage>
<writingSystem id="ISO/IEC 10646">Universal Multiple-Octet Coded Character Set (UCS).</writingSystem>
</wsdUsage>
<textClass>
<channel mode="w">print</channel>
<constitution type="composite"></constitution>
<domain type="public"></domain>
<factuality type="fact"></factuality>
</textClass>
<translations></translations>
</profileDesc>
<revisionDesc></revisionDesc>
</cesHeader>

<text><body>

<p>-5-</p>

<p>		ஒரேமாதத்தில் ஓவியராகலாம்</p>

<p>	ஓவியப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், முதலில்
உங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச உபகரணங்களைத்
தெரிந்து கொள்ளுங்கள்.</p>

<p>
தேவையான பொருள்கள்</p>

<p>	மிருதுவாக எழுதக் கூடிய பென்சில் B, 2B பென்சிலாக
இருந்தால் நல்லது. இல்லாவிட்டால் சாதாரண HB பென்சிலே
போதும்.</p>

<p>	மென்மையாக அழிக்கக் கூடிய ரப்பர். சில ரப்பர்கள்
காகிதத்திலுள்ள பென்சில் கோடுக஼ளை அழிப்பதற்குப் பதிலாகக்
காகிதத்தையே சுரண்டி எடுத்துவிடும். எனவே, நல்ல ரப்ப~
ரையே பயன்படுத்துங்கள்.</p>

<p>	வரைவதற்குக் காகிதம்: Drawing Cartridge Paper
என்னும் காகிதம் போதும். அதிலேயே மெல்லிய ரகம், அழுத்த~
மான ரகம் எனப் பல ரகங்கள் இருக்கின்றன. அந்தக் காகிதம்
கிடைக்கவில்லை என்றால் `இந்தியன் ஆர்ட் பேப்பர்' என்று
காகிதம் விற்கும் கடைகளில் கேட்டால் கிடைக்கும். அந்தக்
காகிதம் மெல்லியதாக இருந்தாலும் இந்தியன் இங்கினால் வரை~
வதற்கு நன்றாக இருக்கும். வரைந்து பார்த்தால் அச்சுமாதிரி
இ஼இருக்கும்.</p>

<p>	பிரஷ்கள்: 00, 0, 1, 2, 3, என பல எண்கள் உள்ள பிரஷ்கள்
இருக்கின்றன. எண்கள் அதிகமாக ஆக பிரஷ் தடிப்பாக
இருக்கும். மெல்லிய கோடுகளுக்கு No. 0 போதும். அதிலேயே
இரண்டு பிரஷ்கள் தேவை. கறுப்பு இங்கிற்கு ஒன்று, வெள்ளை
வர்ணத்திற்கு ஒன்று. தடிப்பான கோடுகளுக்கு No. 3 பிரஷ்
ஒன்று இருந்தால் வசதியாக இருக்கும். `ஆர்ட்டிஸ்ட் பிரஷ்,
என்று கேட்டால் கிடைக்கும். சாதாரண விலையில் உள்ள
பிரஷ்ஷே போதும்.</p>

<p>	டிராயிங்: இவற்றில் கடைசியாகச் சொல்லப்பட்ட நிப்
-6-
ஆரம்ப சித்திரக்காரர்களுக்கு நீடித்து உழைக்கும். நன்றாக
இருக்கும். நிப் செருகிக்கொள்ள ஹோல்டர்களும் கிடைக்கும்.</p>

<p>	கறுப்பு இங்க்: இது `இந்தியன் இங்க்' என்னும் கறுப்பு
இங்க். சிறிய பாட்டில்களில் கிடைக்கும்.</p>

<p>	வெள்ளைப் பசை: `போஸ்டர் ஒயிட்' என்னும் வெள்ளை
வர்ணம். பசை போன்று இருக்கும். இந்தியன் இங்கினால் வரை~
யும்போது தவறு நேர்ந்து விட்டால் இந்தப் போஸ்டர் ஒயிட்
பசையை பிரஷ்ஷால் எடுத்துத் தடவி மறைத்து விடலாம்.</p>

<p>	இந்தியன் இங்க் கேக்: கறுப்பாக, கட்டியாக, நீளவடிவில்
இருக்கும். நீரில் கரையும். `வாஷ் டிராயிங்' என்னும் சித்திரங்கள்
வரையத் தேவைப்படும்.</p>

<p>
சில குறிப்புகள்</p>

<p>	இந்தியன் இங்கை உபயோகிப்பதற்கு முன்் ஒரு குச்சியால்
நன்றாகக் கலக்கிக் கொள்ள வேண்டும். அடியில் கட்டியாகப்
படிந்து கிடக்கும். அதே மாதிரி போஸ்டர் ஒயிட்டையும் ஒரு
குச்சியால் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.</p>

<p>	பிரஷ்ஷை இந்தியன் இங்கில் தொட்டு வரைந்த பிறகு
அப்படியே வைத்து விடாதீர்கள். உடனுக்குடன் நீரில் கழுவி
விடுங்கள். வெள்ளை வர்ணத்தைப் பயன்படுத்தினாலும் அப்படித்
தான்.</p>

<p>	டிராயிங் நிப்பை இங்கில் தொட்டு வரைந்து கொண்டிருக்~
கும் போது, சில சமயம் அந்த இங்க், நிப்பில் படிந்துவிடும்.
சரியாக வரைய முடியாது. அப்போதெல்லாம், படிந்திருக்கிற
இங்கை, பிளேடால் சுரண்டி விடவும். வரைந்து முடித்து விட்டு
எழும்போது, பிரஷ், நிப் முதலியவற்றை ஒரு தடவை நன்றாகச்
சுத்தம் செய்து வைத்து விடவும். மிக மெல்லிய கோடுகளுக்கு
நிப்பையும், தடித்த கோடுகளுக்கு பிரஷ்஼ஷையும் பயன்படுத்தவும்.</p>

<p>	ஂமுதலில் பென்சிலால் வரைந்து கொள்ளுங்கள். நீங்கள்
ஒரு திறமையான ஓவியராக விரும்பினால் நிதானத்தை இழந்து
விடாதீர்கள்.
-7-</p>

<p>	பென்சிலின் முனை கூர்மையாக இருக்கட்டும். பென்சிலால்
இலேசாக வரையுங்கள். அழுத்தியோ, கறுப்பாகவோ வரைந்~
தால் அழிப்பது சிரமம்.</p>

<p>	பிரஷ்ஷால் இங்கைத் தொட்ட பின், வரைவதற்கு முன்,
தனியாக ஒரு சிறு காகிதத்தில் கோடு இழுத்துப் பார்த்துக்
கொள்ளுங்கள். அப்போதுதான், கோடுகளில் பிசிறு இல்லாம~
லும், அதிக இங்க் கோட்டிவிடாமலும் இருக்கும்.</p>

<p>	பல தடவைகள் பிரஷ்ஷைப் பயன்படுத்திய பின், சில
சமயம் அதன் உரோமங்கள் ஒன்று சேராமல் பிசிறாக நிற்கும்.
எழுத வராமல் போகக்கூடும். அப்போது பிரஷ்ஷை நன்றாகக்
கழுவி விட்டு, உரோமக் கற்றையின் அடியில் மெல்லிய நூலால்
நாலைந்து சுற்றுகள் சுற்றிக் கட்டிவிடவும்.</p>

<p>
பயிற்சி முறை</p>

<p>	ஒரு மாதத்தை நான்கு வாரங்களாகப் பிரித்துக் கொண்டு
ஒவ்வொரு வாரத்திற்கும் கீழ்க்கண்டவாறு பாடங்களை
எடுத்துக் கொள்ளுங்கள்.</p>

<p>முதல் வாரம்: பக்கம் 8</p>

<p>	தலை, கண்கள், மூக்கு, வாய், காதுகள்.</p>

<p>இரண்டாவது வாரம்: பக்கம் 20</p>

<p>	தலை பல கோணங்கள், கழுத்து, முகபாவங்கள், பல்வேறு
	முகங்கள், முகங்க஼ளை வித்தியாசப் படுத்துதல்.</p>

<p>மூன்றாவது வாரம்: பக்கம் 30</p>

<p>	கைகள் - விரல்கள், கால்கள் - பாதங்கள், உடல், உடலை
	எளிதாக வரைதல், உடலின் தசைகள், உடலும் உடையும்</p>

<p>நான்காவது வாரம்: பக்கம் 58</p>

<p>	பென்சிலும் பிரஷ்ஷும், உடலின் வேக நிலைகள், ஒளியும்
நிழலும், வாஷ் டிராயிங், கதைகளுக்குப் படம் வரைதல், சில
வித்தியாசமான முறைகள் அச்சிடுவதற்கான படங்களை
வரைதல்.
-8-</p>

<p>முதல் வாரம்:</p>

<p>			தலை</p>

<p>	ஒவியத்தில் தலை மிக முக்கிய பங்கேற்கிறது. ஏனென்றால்
படம் தலையிலிருந்தே துவங்குகிறது.</p>

<p>	படம் 1. தலையின் பக்க அமைப்பைச் சதுரமான பகுதிக்குள்
வரையலாம். தலையின் பக்கத்தோற்றம் சற்று சாய்ந்த
முட்டை வடிவமாக உள்ளது. முகத்தைக் கவனியுங்கள். முன்
பக்கத்தை 4 பகுதிகளாகப் பிரித்தால், முதல் பகுதியில் தலை
முடி. அடுத்தது நெற்றி. இரண்டாவது பகுதியும் மூன்றாவது
பகுதியும் சந்திக்கும் இடத்தில் கண். கண்கள் தலையின் உச்சிக்~
கும். தாடைக்கும் இடையே உள்ள தூரத்தில் சரிபாதியில்
இருக்கும். கண்களுக்குச் சற்று மேலே புருவம். மூக்கின் அடிப்
பக்கம், மூன்றாவது பகுதியின் கடைசியில் இருக்கும். தாடை
நான்காவது பகுதியின் அடியில் இருக்கும். வாய், மூக்கின்
அடிப்பக்கத்திற்கும் தாடையின் அடிப்பக்கத்திற்கும் இடையே
உள்ள தூரத்தில் 1/3 பங்கில் அமையும். காது, சதுரத்தை
நான்காகக் குறுக்கே வெட்டும் கோட்டில் ஆரம்பிக்கும். மூன்றா~
வது பகுதியில் இருக்கும்.</p>

<p>	படம் 2. அதே வீதத்தில் வரையப்பட்ட பெண்ணின் தலை
	படம் 3. தலை செங்குத்து நீண்ட சதுரத்தில் வரையப்
பட்டிருக்கிற஥ு. நேர்த்தோற்றம். தலையின் நீளம் 9 அங்குல~
மாக இருந்தால், அகலம் 6 அங்குலமாக இருக்கும். அதாவது
அகலத்தை விட நீளம் 1/2 மடங்கு அதிகம். தலை முட்டை வடிவ~
மாக இருக்கிறது. ஒரு கண்ணுக்கும் இன்னொரு கண்ணுக்கும்
இடையே உள்ள இடைவெளி ஒரு கண்ணின் அளவு இருக்கும்.
புருவத்துக்கும் மூக்கின் அடிப்பகுதிக்கும் உள்ள நீளத்தில் காது
அமைந்திருக்கும். அதாவது, புருவமும் காதின் மேல் மட்டமும்
சரியாக இருக்கும். மூக்கின் அடிமட்டும் காதின் அடிமட்டமும்
சரியாக இருக்கும்.</p>

<p>	படம் 4. அதேமுறையில் வரையப்பட்ட பெண்ணின் தலை.
	படம் 5. குழந்தை படிப்படியாக வளர்ந்து பெரியவளாக
ஆகும்போது, முக உறுப்புகளில் அடையும் மாறுதல்கள், மூக்கு
படிப்படியாகவும் நோராகவும் நீளமாகவும் ஆகும். காதுகள் நீள~
மாகின்றன. கண்கள் மேலே அமைகின்றன.</p>

<p>	இப்போது இது மாதிரி கட்டம் போட்டு வரைந்து பாருங்~
கள். ஓர் ஓவியர் படம் வரையும்போது இதுமாதிரி ஒவ்வொன்~
றுக்கும் கட்டம் போட்டுக் கொள்வதில்லை. நீங்கள் அளவு
முறைப்படி வரைந்து பழகிக் கொண்டால், பிறகு சாதாரண~
மாக வரையும் போது தவறே வராது.
-10-</p>

<p>			கண்கள்</p>

<p>	முன் பக்கங்களில் தலையைப் பற்றிப் பொதுவாகத்
தெரிந்து கொண்டீர்கள். இப்போது உறுப்புகள் ஒவ்வொன்~
றையும் தனித்தனியாக வரைந்து பழகப் போகின்றீர்கள். கண்,
காது, மூக்கு, வாய், தலை, கை, கால் என்று ஒவ்வொன்றையும்
சிறப்பாகக் கவனித்து வரைந்து பழகிய பிறகு, மனித உருவத்தை
முழுவதாக வரைவது உங்களுக்கு எளிதாக இருக்கும்.</p>

<p>	முதலில் கண்களை வரையலாம். கண்களை `ஆத்மாவின்
வாசல்' என்பார்கள். மனிதனின் உணர்ச்சிகளைப் பிரதிபலித்துக்
காட்டுவதில் கண்கள் சிறப்பான இடம் பெறுகின்றன.</p>

<p>	ஆண்களின் கண்கள், பெண்களின் கண்கள், குழந்தை~
களின் கண்கள் என கண்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக்
கொள்ளலாம்.</p>

<p>	1. என்ற வரிசையில் இருப்பவை ஆண்களின் கண்கள்.
முதலில் இருப்பது ஒரு வாலிபனின் பக்கத் தோற்றக் கண்.
சீரான புருவம், சுருக்கம் விழாத இமை. அதை அடுத்து
இருப்பது நடுத்தர வயதுக்காரரின் கண். அடர்ந்த புருவம்
இமையின் மேலேயும், விழியின் கடைசியிலும், கொஞ்சம்
சுருக்கம் விழுந்து விட்டது. மூன்றாவதாக இருப்பது வயதான~
வரின் கண். புருவம் நரைக்கத் தொடங்கி விட்டது. (எனவே
புருவத்தின் கோடுகளை நெருக்கமாக வரையாதீர்கள்) இமை~
யின் மேலேயும், கீழேயும் சுருக்கங்கள் விழியின் கடைசியிலும்
சுருக்கம். கண் இடுங்கி விட்டது.</p>

<p>	சாதாரண நிலையில் கண்களை வரையும் போது கரு விழி~
களை முழுவட்டமாக வரையாதீர்கள். முக்கால் வட்டமாக
இருக்க வேண்டும். வட்டத்தின் கால் பகுதி மேல் இமைக்குள்
மறைந்திருக்க வேண்டும்.</p>

<p>	கண்களை வரையும் போது நீங்கள் முக்கியமாக ஒன்றை
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கண்ணின் மேல்கோடு,
கீழ்க்கோட்டைவிடத் தடிப்பாக வரையப்பட வேண்டும். இரு
கோடுகளையும் மெலிந்த கோடுகளாக஼வே வரைந்தால்
கண்ணின் அழகே கெட்டுவிடும்.
-12-</p>

<p>	2 என்ற படம் ஒரு வாலிபனின் கண்கள். நேர்த்தோற்றம்,
கண்களின் மேல்பக்கக் கோடுகள் தடிப்பாக இருப்பதைக்
கவனியுங்கள். கரு விழிகளை வரையும்போது விழிகளில் நடுவில்
ஒரு வெள்ளைப் புள்ளி வையுங்கள். அப்போதுதான் விழி~
களுக்கு ஒளி உண்டாகும். அடுத்து இருப்பது கண்ணை முதலில்
வரைந்து கொள்ளும் முறை.</p>

<p>	3 என்ற வரிசையில் முதலில் இருப்பது நேர்த் தோற்றத்~
திற்கும் பக்கத் தோற்றத்திற்கு இடைப்பட்ட கண். அதற்குக்
கோடுகளை எப்படி வரைந்து கொள்ள வேண்டும் என்பதைக்
காட்டுகிறது. அடுத்து இருப்பவை நடுத்தர வயது மனிதன்
கண்கள். கண்களின் அகலம் குறைந்திருப்பதையும் இமை~
களில் சுருக்கம் விழுந்திருப்பதையும் பாருங்கள். (சுருக்கம்
என்பது இரண்டு மெல்லிய கோடுகளால் காட்டப்பட்஼டிருக்~
கிறது.)</p>

<p>	புருவங்களைப் பற்றியும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
புருவங்களை வரையும் போது, இடப் பக்கத்துப் புருவத்தின்
உரோமங்களை இடப்பக்கம் சாய்த்தும், வலப்பக்கத்துப் புருவத்~
தின் உரோமங்கள் வலப்பக்கம் சாய்ந்தும் வரைய வேண்டும்.</p>

<p>	4 என்ற வரிசை பெண்களின் கண்கள். பக்கத் தோற்றம்,
வில் புருவம் என்றும், வண்டு விழிகள் என்று வர்ணிப்பார்~
களே! ஆண்களின் கண்களைவிடக் கொஞ்சம் பெரிதாகப் பெண்~
களின் கண்களை வரைய வேண்டும். கருவிழிகளையும் பெரிதாக
வரைய வேண்டும். இமை உரோமங்களையும் நீளம் நீளமாக
வரைந்தால் நன்றாக இருக்கும். விழிகளின் கடைசியில் சற்று
நீளமான கோட்டை மேல்நோக்கி இழுங்கள். பெண்கள் தங்கள்
கண்களுக்கு மை இடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதுதான்
இந்தக் கோடு. இந்த 4வது வரிசையில் முதலில் இருப்பது
இளம் வயதுப் பெண்மணியின் கண். இரண்டாவது நடுத்தர
வயதுப் பெண்மணியின் கண். இமையின் மேலே சுருக்கங்கள்.
நடுத்தர வயதுப் பெண்ணின் கண்ணின் கடைசியில் மைக்
கோடு வரைய வேண்டாம். கடைசியில் இருப்பது குனிந்து
கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் விழி. கருவிழி, மேல் இமையில்
பாதி மறைந்து கொண்டிருக்கிறது. குனிந்து கொண்டிருக்கும்
போது மேல் இமையை அகலமாகக் காட்டுங்கள். இமை,
உரோமங்஼ளைக் கீழ்நோக்கி வரைய வேண்டும்.</p>

<p>	5 என்ற படம் இளம் பெண்ணின் நேர்த்தோற்றத்தில்
தெரியும் கண்கள். பாருங்கள். எவ்வளவு குறுகுறு என்ற
-13-
விழிகள்! விழிகளில் இளமை துள்ள வேண்டும். பெண்களின்
கண்களை மாவடு கண்கள் என்று சொல்வார்களே! மாவடு~
வைப் பிளந்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்
பெண்களின் கண்கள். அகன்ற பெரிய விழிகள். பெரிய கரு
விழிகள். அடர்ந்த இமை உரோமங்கள் (சிறுபடங்கள் வரையும்
போது இந்த உரோமங்களைக் காட்ட வேண்டியதில்லை.) ஆண்~
களுக்கு வரையும் புருவங்களைவிட பெண்களுக்கு மெலிந்தும்
நீண்டும் வரைய வேண்டும்.</p>

<p>	6 என்ற வரிசை குழந்தைகளின் கண்கள். முதலில் இருப்பது
பக்கத் தோற்றம். அடுத்து இருப்பது நேர்த்தோற்றம். குழந்தை~
களின் கண்களை வரையும் போது புருவங்களைச் சிறிதாகவும்
அடர்த்தி இல்லாமலும் வரைய வேண்டும். இப்போதுதானே
உரோமங்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன.</p>

<p>	குழந்தைகளின் கண்களைச் சற்று உருண்டையாக வரைய
வேண்டும். கருவிழிகள் பெரிய வட்டமாக க஼ண்களின் மேல்
கோட்டிலும் கீழ்க் கோட்டிலும் பதிந்திருக்க வேண்டும்.
கண்களில் குறுகுறுப்பும் கபடமில்லாத தன்மையும் காட்டப்பட
வேண்டும்.</p>

<p>	நினைவு வைத்திருக்கிறீர்களா? இரண்டு கண்களுக்கும்
இடையில் ஒரு கண்ணின் அளவு இடைவெளி இருக்க
வேண்டும்.</p>

<p>	உங்களுக்கு ஒரு சிறிய பரீட்சை: நடுத்தர வயதுப் பெண்~
மணியின் கண்களை நேர்த் தோற்றத்தில் வரையுங்களேன்!
-14-</p>

<p>			மூக்கு</p>

<p>	முகத்தை வரையும் போது எல்லா உறுப்புகளையும் அக்~
கறையுடன் வரைய வேண்டும் - மூக்கைக் கூடத்தான். மூக்கிலே
தான் எத்தனை வகைகள் இருக்கின்றன! கொடை மிளகாய்
மூக்கு, கிளிமூக்கு, சப்பை மூக்கு, மொந்தை மூக்கு.... உலகில் எந்த
இரண்டு மனிதனுக்கும் ஒரே மாதிரியான மூக்கு இருக்காது
என்பார்கள்.</p>

<p>	1 என்ற வரிசையில் நான்கு வித மூக்கு அமைப்புகள்
காட்டப்பட்டிருக்கின்றன. பக்கத்தோற்றம், நேர்த்தோற்றம்,
குனிந்த தோற்றம், அண்ணாந்த தோற்றம். குனிந்த தோற்றத்~
தில் மூக்கின் நுனி கீழ்நோக்கி இருக்கும். அண்ணாந்த
தோற்றத்தில் மூக்குத் துவாரங்கள் தெரியும்.</p>

<p>	2 என்ற வரிசை ஆண்களின் மூக்குகள். ஆண்களின்
மூக்குகள் நீண்டும் உருண்டு திரண்டிருக்க஼ும் மூக்கின் நடுவில்
ஒரு மேடும் இருக்கும். இரண்டாவது படம் வயதானவரின்
மூக்கு. வயதானவர்களுக்கு முகத்தில் சுருக்கம் விழுவதாலும்
பற்கள் விழுந்து விடுவதாலும் மூக்கின் பக்கத்திலும் சுருக்கம்
விழுவதாலும் மூக்கு தொங்கியதுபோல் ஆகிவிடும். கடைசிப்
படம் ஒரு வாலிபன் மூக்கின் நேர்த் தோற்றம். நேர்த்தோற்றத்~
தில் மூக்கு வரையும் போது முகம் எந்தப் பக்கம் சாய்ந்திருக்~
கிறதோ அந்தப்஼பக்கம் மூக்கில் ஒரு கோடு இழுத்தால் போதும்.</p>

<p>	3 என்ற வரிசை பெண்களின் மூக்குகள். பெண்களின்
மூக்கை எள்ளுப்பூ நாசி என்பார்கள். அழகாகச் சரிந்து உயர்ந்~
திருக்கும். ஆண்களின் மூக்கைப் போல் கரடு முரடாக இருக்~
காது. குழைவாக இருக்கும். அடுத்த படம் நேர்த் தோற்றம்.
கடைசியில் இருப்பது குழந்தையின் மூக்கு, சற்று மேல்நோக்கி
இருக்கும். அதிக நீளம் இருக்காது. அரும்புபோல் இருக்கும்.</p>

<p>	4 என்ற வரிசையில் முதலில் இருப்பது அண்ணாந்த
நிலையில் இருப்பது. மூக்குத் துவாரங்கள் தெரிகின்றன.
அடுத்து, குனிந்து கொண்டிருக்கும்போது மூக்கின் நுனி கீழ்
நோக்கி இருப்பது.</p>

<p>	அண்ணாந்து கொண்டிருக்கும்போது, அல்லது குனிந்து
கொண்டிருக்கும் போது, மூக்குடன், கண்கள், வாய் முதலி~
யவையும் மாறுதலடைகின்றன. எனவேதான் இங்கே மூக்குடன்
கண், வாய் முதலியவையும் சேர்த்து வரையப்பட்டிருக்கின்றன.</p>

<p>	பரிட்சைக்கு: மூக்குத்தி அணிந்த பெண்ணின் மூக்கு
வரையுங்கள் பார்க்கலாம்.
-16-</p>

<p>			வாய்</p>

<p>	மனிதனின் உணர்ச்சிகளை வெளியிடுவதில் வாயும் பங்~
கேற்கிறது. வாயைப் பார்த்தே, அவன் அழுகிறானா, சிரிக்கி~
றானா என்பதைச் சொல்லிவிடமுடியுமே!</p>

<p>	1 வது வரிசையில், முதல் படத்தில் உதடுகள் நீளத்தில்
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசை
ஆண்களின் வாய்கள், நேர்த்தோற்றுமும், பக்கத்தோற்றமும்.
மேல் உதட்டை விட கீழ் உதடு பெரிதாக இருக்கும். அதே
சமயத்தில், மேல் உதட்டை விட கீழ் உதடு உள் அடங்கி இருக்கும்.
அதைத்தான் கடைசிப் படம் காட்டுகிறது.</p>

<p>	2 வது வரிசையில் முதலில் இருப்பது வயதானவரின்
வாய். மேல் உதட்டில் சுருக்கம். கீழ் உதடு தொங்கிவிட்டது.
அடுத்தது புன்னகை புரியும் வாய்.</p>

<p>	3 வது வரிசை, பெண்களின் உதடுகள். நேர் தோற்றமும்,
சற்றே திரும்பிய தோற்றமும், பக்கத் தோற்றமும். ஆண்களின்
உதடுகளில் இருக்கும் தடிப்பு. பெண்களின் உதடுகளில் இருக்~
காது. மென்மையான வளைவு கோடுகளால் வரைய
வேண்டும்.</p>

<p>	4 வது வரிசை, இளம் பெண்ணின் கவர்ச்சியான சிரிப்புகள்.
முதலில் இருப்பது வாய்திறந்து சிறிப்பது. சாதாரண நிலையில்
மகிழ்ச்சியைக் காட்டும் போது, உதடுகளின் கடைசிப்
பகுதிகள் மேல் நோக்கி இருக்க வேண்டும். சிரிப்பதாக வரையும்
போது, பற்களைத் தனித்தனியாகக் குறுக்குக் கோடுகளிட்டு
வரையாதீர்கள். விகாரமாக இருக்கும்.</p>

<p>	5 வது வரிசையில் முதலில் சற்றே மேல் நோக்கிச் சிரிக்கும்
வாய். அடுத்ததைக் கவனியுங்கள். அவள் பயத்தினால்
வாயைப் பிளக்கிறாள். அடுத்தது புன்சிரிப்பு. பக்கத்தோற்றம்.</p>

<p>	6 வது வரிசையில் முதல் படம் சோகமான உதடுகள்.
துயரத்தின் போது உதடுகளின் கடைசிப் பகுதிகள் கீழ்
நோக்கி வளைந்து விடும். அடுத்தது, நடுத்தர வயதுப் பெண்~
மணியின் உதடுகள். மேல் உதட்டில் சுருக்கம் விழத் தொடங்கி
விட்டது.</p>

<p>	7 வது வரிசையில் முதலில் இருக்கும் உதடுகளுக்குரிய
பெண்ணுக்கு என்ன வேதனையோ? உதடுகள் துடிப்பது தெரிய~
வில்லையா? அடுத்து, குழந்தையின் வாய்கள், ஒன்று மூடிய
வாய், மற்றும் மழலை பேசும் திறந்தவாய்!</p>

<p>	8 வது வரிசை, சிரிக்கும் வாய்கள் இரண்டு.</p>

<p>	உங்கள் பரிட்சைக்கு: பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு
வாலிபனின் வாயை வரையுங்கள்.
-18-</p>

<p>			காதுகள்</p>

<p>	காதுகளை வரைவதில் பெரும்பான்மையினர் அவ்வளவாக
அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு வளைவு கோடு;
அதனுள் S போன்ற ஒரு கோடு; அவ்வளவுதான்; காதுவரைந்~
தாகி விட்டது என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால், காதில்
எவ்வளவு வளைவு நெளிவுகள் இருக்கின்றன! காதுகளில்தான்
எவ்வளவு ரகங்கள்! முறம் போன்ற பெரிய காதுகள், எலிக்
காதுகள், தலையோடு அமுங்கிய காதுகள், முன்பக்கம் விரிந்த
காதுகள் இப்படி பல வகைகள்.</p>

<p>	இங்கே 1 வது வரிசையில் உள்ளவை ஆண்களின் காதுக஼ள்,
ப஼லவித தோற்றங்கள். கோடுகளில் உள்ள முரட்டுத்தனத்தைக்
கவனியுங்கள். இப்போது கிருதா வைப்பது நாகரிகம்
அல்லவா? எனவே, நாகரிக இளைஞனை வரையும்போது
மறக்காமல் காதுக்கு அருகே கிருதாவையும் வரையுங்கள்.</p>

<p>	2 வது வரிசை, பெண்களின் காதுகள். பலவிதத் தோற்றங்~
கள். கோடுகள் குழைவானவை. காதுகளுக்கு அருகே ஏழெட்டு
உரோமங்களை வரையுங்கள். கவர்ச்சியாக இருக்கும். காதுக்கே
தனி அழகு வந்துவிடும். காதுகளில் அணிகள் வரையும்
போது, வயதுக்குத் தகுந்தவாறு வரையுங்கள். 70 வயதுக்
கிழவியின் காதுகளில், இளம் பெண்கள் அணிந்து கொள்ளும்
வளையங்களை மாட்டி விடாதீர்கள்.</p>

<p>	3 என்ற படத்தில் காதின் பெரும்பகுதி மறைக்கப்பட்டிருக்~
கிறது. இப்போது பெண்கள் பலர் காதுகளை மறைத்துத்
தானே தலை அலங்காரம் செய்து கொள்கிறார்கள்! காதணி~
களைக் காலத்துக்குத் தகுந்தவாறு புதுமையாக வரையுங்கள்.
(இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் பலவிதமான காதணிகள்
பயன் படுத்தப் பட்டிருக்கின்றன.)</p>

<p>	4 என்ற படங்கள் குழந்தையின் காதுகள். கொஞ்சம்
அகலப் பரப்பில் இருக்கும்.</p>

<p>	5 என்ற படம் வயோதிகரின் காது. காதில் சுருக்கங்கள்
விழுந்து விட்டன.</p>

<p>	இங்கேயுள்ள காதுகளைப் பலதடவைகள் வரைந்து பழகுங்~
கள்.</p>

<p>	கண், மூக்கு, வாய், காது ஆகியவற்றைத் தெரிந்து கொண்~
டிருக்கிறீர்கள் அல்லவா? இப்போது உங்களுக்கு இந்தப்
பரீட்சைதான்:</p>

<p>	இளம் பெண் ஒருத்தியின் நேர்முகம். முத்துப்பற்கள்
தெரியச் சிரிக்கிறாள். கண்கள் மூக்கு காது எல்லாம் சேர்ந்~
திருக்க வேண்டும். காதுகளின் வளையங்கள் வரையுங்கள்.
-20-</p>

<p>இரண்டாவது வாரம்:</p>

<p>		தலை - பல கோணங்கள்</p>

<p>	தலையைப் பற்றி முன்பே கூறப்பட்டிருக்கிறது. இப்போது
இன்னும் விளக்கமாகப் பார்க்கலாம்.</p>

<p>	1 வது வரிசையில், ஆணின் தலை. திரும்பும்போது,
கண்கள், மூக்கு, வாய், காதுகள் முதலியவை எப்படியெல்லாம்
மாறித் தோன்றுகின்றன என்பதைப் பார்க்கிறீர்கள். மேலி~
ருந்து கீழாக வரும் கற்பனை வளைவு கோட்டை ஒட்டியே கண்~
கள், மூக்கு, வாய் ஆகியவை அமைவதைக் கவனியுங்கள்.</p>

<p>	2 வது வரிசை, பெண்ணின் முகம் அண்ணாந்திருக்கும்
போது, சற்று குனிந்திருக்கும்போது, தலை மிகத் தாழ்ந்திருக்கும்
போது, முக உறுப்புகள் எவ்வாறெல்லாம் தெரியும் என்று
காட்டப்பட்டிருக்கிறது. படுக்கை வசத்திலுள்ள வளைவுக்
கோட்டை ஒட்டியே அவை அமைந்திருக்கின்றன.</p>

<p>	3 வது வரிசையும், 4 வது வரிசையும் பல்வேறு நிலைகளில்
தலை திரும்பும்போது தோன்றும் விதங்கள் காட்டப்பட்டிருக்~
கின்றன. தலை திரும்பும்போது கழுத்தும் மாறுதலடையும்.
படங்களைக் கவனிக்கவும். தலையை எந்த அளவுக்குத் திருப்ப
முடியும் என்பதைப் பார்க்கவும். கழுத்தைப் பற்றி இன்னோர்
இடத்தில் இன்னும் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.</p>

<p>	ஆண்களின் தலையை வரையும்போது, நெற்றி உயரமாக~
வும், பரந்த நெற்றியாகவும் வரைய வேண்டும். பரந்த நெற்றி~
யாகப் பெண்களுக்கு வரைந்தால் நன்றாக இருக்காது. இப்போ~
தெல்லாம் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும்
தலையின் முன் மயிரை, நெற்றியை மறைக்கும்படி வாரி விட்டுக்
கொள்ளுவதுதான் "பாஷனாக" இருக்கிறது. எனவே, காலத்~
துக்குத் தகுந்தபடி படத்தை வரையுங்கள். தலை மயிர் முகத்தில்
வந்து விழுவதுபோல, அல்லது காற்றில் பறப்பதுபோல வரைந்~
தால் கவர்ச்சியாக இருக்கும். முடியில் சில இடங்களில் ப஼ள~
பளப்பாகத் தோன்றுமல்லவா? அதை வரையும்போது அந்த
இடத்தில் கறுப்பு மை படாமல் விட்டுவிட்டு வரையவும்.
அல்லது, போஸ்டர் ஒயிட்டை பிரஷ்ஷில் குழைத்து வரை~
யவும். இந்தப்புத்தகத்தில் பல இடங்க஼ளில் பல மாதிரியான
தலை அலங்காரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது
பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.</p>

<p>	உங்கள் கற்பனைக்கு ஒரு பரீட்சை: 3 வது வரிசையில்
முதலில் இருப்பதுபோல் அண்ணாந்து தோற்றத்தின் ஒரு வாலி~
பனின் தலையை வரையுங்கள்.
-22-</p>

<p>			கழுத்து</p>

<p>	தலையை மட்டும் அழகாக வரைந்துவிட்டால் போதாது.
அந்தத் தலையை உடலுடன் பொருத்தமாக இணைக்க
வேண்டும். அதற்கு கழுத்தை வரையும் முறையையும் தெரிந்து
கொள்ள வேண்டும்.</p>

<p>	ஆண்களுக்குக் கழுத்து குட்டையாகவும் பருத்தும் காணப்~
படும். பார்க்கும்போதே முரட்டுத்தனம் தெரியும். மேல் பக்கத்~
தின் சுற்றளவு சிறிது அதிகமாகவும் இருக்கும். அத்துடன் கழுத்~
தின் முன் பக்கம், தாடைக்குக் கீழே ஒரு புடைப்பும் இருக்கம்.</p>

<p>	பெண்களுக்குக் கழுத்தின் சுற்றளவு ஒரே சீராக
இருக்கும். கழுத்து சிறிது நீளமாக இருக்கும். ஆண்களுக்கு
இருக்கிற புடைப்பான கண்டம் பெண்களுக்கு வெளியில்
எடுப்பாகத் தெரியாது.</p>

<p>	1 வது வரிசையில் முதலில் குழந்தையின் கழுத்து.
குழந்தைகளுக்கு கழுத்து வெளியில் தெரியாது. நீளம் மிகக்
குறைவாக இருக்கும். தலையும் உடலும் ஒட்டினது போல இருக்~
கும். குழந்தை வளர வளரத்தான் கழுத்தும் நீண்டு வளரு~
கிறது. இரண்டாம் படம் ஓர் இ஼இளைஞனின் கழுத்து. கழுத்தி~
லுள்ள கம்பீரமும் உறுதியும் சிறப்பான அம்சங்கள் வயதாக
ஆக கழுத்தில் சுருக்கம் விழுந்து, நரம்புகள் புடைக்கின்றன.
தாடைச் சதையும் கீழே தொங்கி விடுகிறது. அதைத்தான்
கடைசிப் படம் காட்டுகிறது.</p>

<p>	2 வது வரிசை, பெண்களின் கழுத்துகள். பக்கத் தோற்றமும்
நேர்த் தோற்றமும். கழுத்தில் அதிகமாகக் கோடுகளை
காட்டாதீர்கள்.</p>

<p>	3 வது வரிசையில் முதல் படம் கழுத்தின் பின்பக்கத்
தோற்றம், அடுத்தப் படம் மனிதனுக்கு அதிகமான சதை
விழுந்தால் கழுத்தின் நீளம் மிகக் குறைந்து விடும் என்பதைக்
காட்டுகிறது.</p>

<p>	உங்களுக்கு பரீட்சைக்கு: (1) ஒரு வாலிபனின் நேர்முகத்
தோற்றம், கழுத்தும் வரையப்பட வேண்டும். (2) வழுக்கைத்
தலைக் கிழவர் ஒருவர் இடப்பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார்.
(3) குண்டான மனிதனின் சற்று திரும்பிய முகம் - அமுங்கிய
கழுத்துடன்.</p>

<p>	வரைந்து பருங்கள்.
-24-</p>

<p>			முக பாவங்கள்</p>

<p>	மனிதனின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பது முகம்தான்.
முக பாவங்களைத் தெரிந்து கொள்ளாமல் படம் வரைந்தால்
எல்லா முகங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கதை~
களில் பாத்திரங்களின் குணங்களையும், சம்பவங்களையும் கதா~
சிரியர் வர்ணித்து விடுவார். அந்தக் கதைக்குப் படம் வரைகிற
ஓவியருக்குப் பலவித முகபாவங்களும் தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் படம் பொருத்தமாக அமையும்.</p>

<p>
மாதிரிக்குச் சில :</p>

<p>	படம் 1 பயம். பயத்தின்போது, புருவங்கள் மேலே
உயர்ந்து விடும். விழிகள் அகலமாகும். அதனால் கருவிழி தனி~
யாகத் தெரியும். வாய் கொஞ்சம் திறந்து விடும். (வாயில் கீழ்
வரிசைப் பற்களை மெல்லிய வெள்ளைக் கோட்டால் காட்டவும்)</p>

<p>	படம் 2 ஆச்சரியம், மேலே உயர்ந்த புருவங்கள். அகல஼மாக
விழிக்கும்போது கருவிழிகள் தனியாகி விடும் (`அவள் விழிகள்
ஆச்சரியத்தால் அகல விரிந்தன' என்ற சில எழுத்தாளர்கள்
எழுதுவார்களே!) திறந்தவாய். மேலும் கீழும் இலேசாகத்
தெரியும் பற்கள்.</p>

<p>	படம் 3 துயரம். இருபுறமும் நெளிந்து தொங்கும்
புருவங்கள். மேலே ஏறிய கருவிழிகள். தொங்கிய உதடுகள்.</p>

<p>	படம் 4 மகிழ்ச்சி மலர்ந்த முகம். விழிகளில் தெளிவு,
சிரித்த வாய். (உதடுகளின் இரு பக்கங்களும், மேல் நோக்கி
உயர வேண்டும்.)</p>

<p>	படம் 5 சந்தேகம். நெளிந்த புருவங்கள். கடை விழிப்~
பார்வை. முகம் நேராக இருக்க வேண்டும்; பார்வைதான்
திரும்ப வேண்டும். தளர்ந்த உதடுகள்.</p>

<p>	படம் 6 அழுகை. கீழே நோக்கித் தொங்கும் புருவங்கள்.
திறந்த வாய், மூக்கின் இரு பக்கங்களிலிருந்தும் கீழே இறங்கும்
கோடுகள்.</p>

<p>	பெண்களின் முகத்தை வரையும் போது, முகத்தில் அதிக~
மாகக் கோடுகளை வரையாதீர்கள்.</p>

<p>	பரீட்சைக்குப் படங்கள்: (1) பயப்படும் ஒரு வாலிபனின்
முகத் தோற்றம், (2) சந்தேகப்படும் ஒரு கிழவரின் முகத்
தோற்றம்.
-26-</p>

<p>			பல்வேறு முகங்கள்</p>

<p>	உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும் ஒருவர்
முகம் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. நீண்ட தலை,
உருண்டைத் தலை, குண்டு முகம், சப்பை முகம், உயர்ந்த நெற்றி,
குறுகிய நெற்றி, நீண்டதாடை, குட்டையான தாடை என பல
வித்தியாசங்கள் இருக்கின்றன. கண்களில் இடுங்கிய விழிகள்,
முட்டைவிழிகள் என பல விசித்திரமான அமைப்பில்,
இருக்கின்றன. சிலருக்குப் புருவ மயிர் மிகக் குறைவாக இருக஼்~
கும். சிலருக்குக் கம்பளிப்பூச்சிபோல் அடர்த்தியாக இ஼இருக்கும்.</p>

<p>	மூக்கு பல விதமான அமைப்பில் இருப்பதைப் பார்த்திருப்~
பீர்கள். உதடுகளில் மெலிந்தும் தடித்தும் இருப்பதுண்டு.
நீக்ரோக்கள் என்னும்போது அவர்களுடைய தடித்த உதடுகள்
நினைவுக்கு வருமே! காதுகள் பலவிதமான அமைப்புகளிலும்
இருக்கின்றன.</p>

<p>	சிரிக்கும்போது. அல்லது அழும்போது, முகத்தில் சில
சுருக்கங்கள், மடிப்புகள், கோடுகள் விழுவதுண்டு. அந்தக்
கோடுகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.</p>

<p>	அழகிய பெண்ணையும், மிடுக்கான வாலிபனையும் மட்டும்
வரைந்து பழகினால் போதும் என்று நினைக்கிறவர்கள் எந்தக்
காலத்திலும் திறமையான ஓவியராக முடியாது. பல்வேறு
முகங்களையும் பல்வேறு முக பாவங்களையும் வரைந்து
பழக வேண்டும்.</p>

<p>	கழுத்துத் தசைகள் சுருங்க஼ித் தொங்கும் கிழவியையும்
பொக்கை வாய் திறந்து சிரிக்கும் குழந்தையையும் கூட
வரைந்து பழகுகிறவர்களே ஓவியத்தின் நுணுக்கங்களைத்
தெரிந்து கொண்டவர்களாவர்.</p>

<p>	தெருவில் போவோர் வருவோரைக் கவனியுங்கள். பள்ளி
செல்லும் குழந்தைகளைப் பாருங்கள். பிச்சைக்காரர்களையும்
சாமியார்களையும் நோக்குங்கள். தொழிலாளர்களையும் உத்தி~
யோகஸ்தர்களையும் காணுங்கள். மனத்தில் இருத்திக் கொள்~
ளுங்க஼ள். `கவனமே ஞாபகத்தின் தாய்' என்று சொல்஼லு~
வார்கள்.</p>

<p>	எனவே, எதிர்ப்படுகிற மனிதர்களைக் கவனித்து, மனதுக்~
குள் அவர்களுடைய முக பாவங்களை, உருவங்களைப் பதித்துக்
கொள்ளுங்கள், பிறக஼ு, நினைவுக்குக் கொண்டு வந்து வரைந்து
பாருங்கள்.
-27-</p>

<p>	இங்கே மாதிரிக்காகச் சில முகங்கள் இருக்கின்றன. முக
வித்தியாசங்கள், முக பாவங்களை, முகத்தில் விழும் சுருக்கங்~
களை, கோடுகளை கன்னங்களின் தசைகளை, கண்களை, மூக்கை,
வாயைக் கவனித்து வரைந்து பழகுங்கள்.</p>

<p>
உங்க஼ள் பரீட்சைக்கு:</p>

<p>	(1) குடுகுடு கிழவர். (2) மொட்டைத் தலை முரடன்.
முரடனுக்குத் தடித்த மீசை. (3) மூக்குக் கண்ணாடி அணிந்த
பெண்மணி, மூக்குத்தியுடன்.</p>

<p>	வரைந்து பாருங்கள்.
-28-</p>

<p>		முகங்களை வித்தியாசப் படுத்துதல்</p>

<p>	சிலர் வரைகிற படங்களில், எல்லா பெண்களின் முகங்~
க஼ளும் ஒரே மாதிரியாக இருக்கும். அதே மாதிரி எல்லா ஆண்~
களின் முகங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஏன் இப்படி?
முகங்களை வித்தியாசப் படுத்தி வரைய வேண்டும் என்று அவர்~
கள் முயற்சி செய்வதில்லை. அதுதான் காரணம்.</p>

<p>	ஒரு கதையின் மூன்று பெண்கள் வருகிறார்கள் என்று
வைத்துக் கொள்ளுவோம். அந்தக் கதைக்குப்படம் வரைகிற
ஓவியர், மூன்று பெண்களின் முக அமைப்பை மூன்று விதமாகக்
காட்ட வேண்டும். எப்படி என்பதைக் கவனிப்போம்.</p>

<p>	ஒரு பெண்ணின் முகத்தை நீண்ட வட்டமாக வரையலாம்.
மற்றொரு பெண்ணின் முகத்தை வட்டமாக வரையலாம்.
இன்னொரு பெண்ணின் முகத்தை சதுரமாக வரையலாம். அதே
மாதிரி கண்களில் வித்தியாசத்தைக் காட்டலாம். ஒருத்திக்குப்
பெரியகண்கள். மற்றொருத்திக்குச் சிறியகண்கள். இன்னொருத்~
திக்கு நீண்ட கண்கள். புருவத்தில் கூட நீளம், அடர்த்தி, மெலிவு
என்ற வித்தியாசத்தைக் காட்டலாம். மூக்கிலும், நீண்ட மூக்கு,
கூறிய மூக்கு, குட்டை மூக்கு என்று வேறுபடுத்தலாம். உதடு~
களில் தடித்த உதடு, மெலிந்த உதடு, சிறிய உதடு, மூக்கின் அடிப்~
பாகத்திற்கும், மேல் உதட்டிற்கும் உள்ள இடைவெளியை
அதிகப்படுத்தினாலோ, குறைத்தாலோ முகம் வித்தியாசப்படும்.
நெற்றியில் அகல நெற்றி, குறுகிய நெற்றி.</p>

<p>	காது அணிகளில், தலை அலங்காரத்தில், நெற்றித் திலகத்~
தில் இப்படிப் பல இடங்களில் வித்தியாசத்தைக் காட்டலாம்.
இப்படியே ஆண்களுக்கும்.</p>

<p>	அடுத்த பக்கத்தில் மூன்று பெண்களையும், மூன்று ஆண்~
களையும் வித்தியாசமாக தோற்றங்களில் பார்க்கலாம். எப்படி
நீங்கள் வித்தியாசங்களைக் காட்டினாலும் தோற்றம் விகாரமாகி
விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது மிக முக்கியம்.
-30-</p>

<p>மூன்றாவது வாரம்:</p>

<p>			க஼ைகள் - விரல்கள்</p>

<p>	பொதுவாகக் கையின் நீளம் - முழங்கையிலிருந்து விரல்
நுனிவரை - தலையின் அளவைப்போல இரண்டு மடங்கு
இருக்கும்.</p>

<p>	ஆண்கள் கடினமாக வேலை செய்வதால், கைகள் முரட்டுத்
தனமானவை. சிறு தட்டையான அமைப்புடையவை.
கைகளை மடக்கும்போது முழங்கைக்கு மேலே தசை உருண்டு
திரண்டு எழும்.</p>

<p>	பெண்களின் கைகள் மெலிந்து நீண்டவை. உருண்டையான
அமைப்புடையவை.</p>

<p>	குழந்தைகளின் கைகள் உருண்டையானவை. கொழு
கொழுவென்று சதைப் பிடிப்பானவை. மணிக்கட்டுக்கு
அருகே ஒரு தசை மடிப்பு விழும்.</p>

<p>	படம் 1: ஆணின் கை. தசை நார்கள் திரண்~
டிருப்பதைக் கவனியுங்கள்.</p>

<p>	படம் 2: பெண்ணின் கை. அதன் மென்மையான
அமைப்பைக் கவனியுங்கள்.</p>

<p>	படம் 3: குழந்தையின் கை.</p>

<p>	படம் 4: ஖஼ையை மடக்கும்போது முழங்கையில் ஏற்படும்
தசையின் மாறுதல். இது பெண்ணின் கை.</p>

<p>	படம் 5: குழந்தையின் கைவிரல்கள். குட்டையானவை
உருண்டையானவை.</p>

<p>	படம் 6: விரல்களின் நுனிகள். வளைந்த கோட்டுக்குள்
அமைகின்றன. மூட்டுகள் எங்கே அமைந்திருக்கின்றன
என்பதைப் புள்ளிக் கோடுகள் காட்டுகின்றன.</p>

<p>	படம் 7: விரல் எலும்புகள் வெண்மையான பகுதி எலும்பு~
கள். தசைப் பகுதி கறுப்பு நிறத்தில் காட்டப் பட்டிருக்கிறது.</p>

<p>	முழுவளர்ச்சி பெற்ற மனிதனின் கை - அதாவது, உள்ளங்~
கையும் விரல்களும் சேர்ந்த பகுதி - அவனது முகத்தின் நீளம்
இருக்கும். அதாவது தாடையிலிருந்து நெற்றி வரை இருக்கும்.</p>

<p>	கட்டை விரலைத் தவிர மற்ற நான்கு விரல்களும் மூன்று
எலும்புகளால் அமைந்தவை. கை விரல்களைப் பொருத்தமாக
வரைவது கொஞ்சம் சிரமமான காரியம்தான். நீங்கள் நிறையப்
பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆண்களின் கை
விரல்களுக்கும் பெண்களின் கை விரல்களுக்கும் வேறுபாடு~
களைக் காட்ட வேண்டும்.
-32-</p>

<p>	ஆண்களின் கைவிரல்கள் தடிப்பானவை, புறங்கையில்
நரம்புகள் புடைத்திருக்கும். நகங்கள் தட்டையானவை.</p>

<p>	பெண்களின் கைவிரல்கள் மெலிந்து நீண்டவை. நகங்கள்
நீண்ட வட்ட வடிவில் இருக்கும். விரல் நுனி வட்டமாகவும்
குவிந்தும் இருக்கும்.</p>

<p>	குழந்தைகளின் கைவிரல்கள் குட்டையானவை. நகங்கள்
மிகச் சிறியவை.</p>

<p>	வயதானவர்களின் கைவிரல்க஼ளை வரையும்போது நரம்புகள்
அதிகமாகப் புடைத்தும், விரல் மூட்டுகள் நன்கு தெரியும்
படியும் வரையுங்கள்.</p>

<p>	நாட்டியங்களில் காட்டப்படும் முத்திரைகளை நீங்கள் கவ~
னித்தீர்களானால், கைகளால், விரல்களால் எத்தனை விதமான
அர்த்தங்களை உணர்த்தமுடியும் என்பதைக் காண முடியும்.
ஓவியத்தில் முகபாவம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்~
கியம் கைவிரல்கள்.</p>

<p>	கைவிரல்களைக் கொண்்டே கருத்துக்களையும் தெரிவிக்க
முடியுமே! கைவிரல்களை மடக்கி `என்ன?' என்ற பாவனையில்
வினவுகிறோம். ஐந்து விரல்களையும் இறுக மடக்கி உயர்த்தி
உறுதி கூறுகிறோம். விரல்களை நீட்டி மடக்கி அழைக்கிறோம்.
கைகுலுக்கி நட்புரிமை காட்டுகிறோம். இரு கை குவித்து
வணங்குகிறோம். ஆள் காட்டி விரலை நீட்டிச் சுட்டிக் காட்டு~
கிறோம்.</p>

<p>	பேச முடியாதவர்கள் தங்கள் கைவிரல்களினால் எத்தனை
ஜாடைகள் காட்டுகிறார்கள்!</p>

<p>	எதிர்ப்பக்கத்தில் பல பாவனைகளில் கைகள் காட்டப்பட்~
டிருக்கின்றன. எது பெண்ணின் கை, எது ஆணின் கை எது
குழந்தையின் கை, என்பதைக் கண்டுபிடித்து விடுவீர்களே!
வரைந்து பாருங்கள்.</p>

<p>
உங்கள் பரீட்சைக்கு:</p>

<p>	(1) ஆள் காட்டி விரலை நீட்டிச் சுட்டிக்காட்டும் ஒரு
பெண்ணின் க஼ை.</p>

<p>	(2) புத்தகத்தைப் பிடித்திருக்கிற ஒரு ஆணின் கை.</p>

<p>	(3) டம்ளரைப் பிடித்திருக்கிற ஒரு பெண்ணின் கை.
-34-</p>

<p>			கால்கள் - பாதங்கள்</p>

<p>	கால்க஼ளை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று
பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுவோம்.</p>

<p>	ஆண்களின் கால்களை உறுதியாகவும், செதுக்கியெடுத்தது
போலவும் வரைய வேண்டும். பெண்களின் கால்களை மென்மை~
யான கோடுகளால் நளினமாக வரைய வேண்டும். ஆண்களின்
தொடைகளைவிட பெண்களின் தொடைகள் பருமனானவை.
பெண்களின் கால்கள் நீண்டு மெலிந்தவை. ஆண்களுக்கு முழங்~
காலுக்குக் கீழே உள்ள ஆடு சதைப் பகுதி திரட்சியாக இருக்கும்.
பெண்களுக்குக் கரைவு சரிவாக மொழுமொழு என்று இருக்கும்.</p>

<p>	இதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்: முழங்கால்
முட்டுக்கும் பாதத்தின் அடிப்பக்கத்திற்கும் உள்ள தூரம்
தலையின் அளவைப்போல இரண்டு மடங்குகள். தலைக்கும்
உடல் உறுப்புகளுக்கும் உள்ள அளவுத்தொடர்பு பற்றி பின்னால்
ஓரிடத்தில் பார்க்கலாம்.</p>

<p>	படம் 1: ஆணின் கால் உருண்டு திரண்ட தசைகள்.</p>

<p>	படம் 2: குழந்தையின் கால், அதன் தொடையில் தசை
மடிப்புகள் இருப்பதையும், கால்கள் மொத்தையாக இருப்பதை~
யும் பாருங்கள். வளர வளர, குழந்தையின் தொடைகளில்
உள்ள தசை மடிப்புகள் மறைந்துவிடுகின்றன.</p>

<p>	படம் 3: பெண்ணின் கால்.</p>

<p>	படம் 4: பாதத்தின் பக்கத் தோற்றம். பாதம் எந்த
அடிப்படைக் கோட்டில் வரையப்படுகிறது என்பதைக் காட்டு~
கிறது அந்தப் படம். பாதத்தின் எலும்புகள் எவ்வாறு அமைந்~
திருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டால் வரையும்போது
தவறு ஏற்படாது.</p>

<p>	படம் 5: பாதத்தின் நேர்த் தோற்றம். நேர்த் தோற்~
றத்தை எந்த அடிப்படைக் கோட்டில் வரையலாம் என்பதை
பார்த்துக்கொள்ளுங்கள். பாதத்தில் உள்ள விரல்கள் ஒரு வ஼ளை~
வான கோட்டுக்குள் அமைந்திருக்கும்.</p>

<p>	இப்போது, பாதங்களைப் பற்றி விளக்கமாகப் புரிந்துகொள்~
ளலாம். பாதங்கள் ஆண் பெண் இருவருக்கும் அமைப்பில்
ஒன்றுதான் என்றாலும் வெளித் தோற்றத்தில் எவ்வளவோ
வேறுபாடுகள் இருக்கின்றன.
-36-</p>

<p>	ஆண்களின் பாதங்கள் நரம்புகள் புடைத்தெழுந்து முரட்~
டுத்தனமானவை. கணுக்கால் எலும்புகள் முட்டிக்கொண்~
டிருக்கும். ஆனால், பெண்களின் பாதங்கள் மொழுமொழுப்~
பானவை. கணுக்கால் எலும்புகள் அவ்வளவாக வெளியில்
தெரியாது. நரம்புகளும் தெரிவதில்லை. இங்கே குறிப்பிடப்
படுகிறவை இளம் வயதுப் பெண்களுக்குத்தான். வயதான
ஒல்லியான பெண்மணிகளுக்குக் கணுக்கால் எலும்புகளும்
நரம்புகளும் புடைத்துக்கொண்டிருக்கும். குண்டான பெண்~
மணியாக இருந்தால் அது தெரியாது.</p>

<p>	குழந்தைகளின் பாதங்களின் அடிப்பக்கம் சமமாக இருப்ப~
துடன் புறப்பாதம் உப்பலாகவும் இருக்கும்.</p>

<p>	வளர்ந்த மனிதர்களுக்குப் பாதங்கள் கையைவிட 1/3 பங்கு
அதிகமாக இருக்கும்.</p>

<p>	படம் 1. ஆணின் கால். 2. பெண்ணின் கால். 3. காலைத்
தூக்கி வைக்கும்போது கால் விரல்கள் தெரியும் தோற்றம்.
4. நடக்கும்஼போது குதிகால் உயர்ந்தும் விரல்கள் பதிந்தும்
இருப்பது. 5 அப்படி நடக்கும்போது பக்கத் தோற்றம்
அடிப்பாதம் தெரிவது. பெண்ணின் கால். 6. பாதத்தை
இறுக ஊன்றியிருப்பது பக்கத்தோற்றம். 7. முன் பக்கம்
8. விரல்களை ஊன்றிக் குதிகாலைத் தூக்குவது. 9. பாதத்தின்
அடிபக்கம் விரல்களின் அடிப்பக்கம் வட்டமாகத் தெரிவது.
10, 11. சிறுவர்களின் பாதங்கள் குட்டையான விரல்கள்
நரம்புகளும் எலும்புகளும் புடைத்திருக்காது.</p>

<p>	இங்கேயுள்ள பாதங்களைப் பல தடவைகள் வரைந்து
பயிற்சி பெறுங்கள்.</p>

<p>ஒரு பரீட்சை:</p>

<p>	நேராகத் தெரியும் ஒரு பெண்ணின் இரு பாதங்களை வரை~
யுங்கள்.
-38-</p>

<p>			உடல்</p>

<p>	தலை, கண், மூக்கு, வாய், காது என்று தனித்தனியாகப்
பார்த்தீர்கள். இப்போது முழு உடலைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.</p>

<p>	உடலை `எண்சாண் உடம்பு' என்பார்கள். மனிதனுக்கு
அவன் சாணைப்போல எட்டு சாண்கள் இருக்கும். ஆனால்
மனிதனின் உடல் அதன் தலையைப்போல 7 1/2 மடங்கு இருக்கும்.
இதுதான் உலகில் பொதுவான அளவாகக் கருதப்படுகிற஥ு.</p>

<p>	தலை அளவு என்பது உச்சந்தலையிலிருந்து தாடையின் அடி
வரை ஆகும். அந்த அளவை ஒரு பாகமாக வைத்துக்கொள்~
ளுங்கள். அடுத்தது தாடையிலிருந்து மார்புக் காம்புகள்
வரை ஒரு மடங்கு. மார்புக் காம்புகளிலிருந்து தொப்புள்
(கொப்பூழ்) வரை ஒரு மடங்கு. தொப்புளிலிருந்து பால்
உறுப்புவரை ஒரு மடங்கு. (பால் உறுப்பிலிருந்து 1 1/2 மடங்கு
வைத்தால் முழங்கால் மூட்டுக்குச் சரியாக இருக்கும்.) பால்
உறுப்பிலிருந்து முழங்காலுக்கு மேல் ஒரு மடங்கு. அதிலிருந்து
முழங்காலுக்குக் கீழ்வரை ஒரு மடங்கு. அதிலிருந்து கணுக்~
காலுக்கு மேல்வரை ஒர் மடங்கு. அதிலிருந்து பாதத்தின் அடி
வரை 1 1/2 மடங்கு. ஆக 7 1/2 மடங்குகள்.</p>

<p>	மறுபடியும் படித்துப் பாருங்கள். படிக்கும்போது படத்தை~
யும் ஒப்பிட்டுப் பாருங்கள்.</p>

<p>	தாடையிலிருந்து முழங்கை வரை 2 மடங்குகள். அதாவது
முழங்கையும் தொப்புளும் ஒரே நேர்க் கோட்டில் அமைந்திருக்~
கும்.</p>

<p>	இதுவரை சொல்லப்பட்டவை ஆண், பெண் இருவருக்குமே
பொதுவான அளவு.</p>

<p>	ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள சில மாறுதல்களைப்
பார்ப்போம்.</p>

<p>	ஆண்களுக்குத் தோள்களின் அகலம்.... ஒரு பக்கத்திலிருந்து
இன்னொரு பக்கத்திற்கு - தலையைப்போல் 2 மடங்குகள்.
தோள்களின் அகலம் பெண்களுக்குச் சற்று குறையும். ஆண்~
களுக்கு இ஼இடை சற்று அகலம். பெண்களின் இடை குறுக~
லானவை. பின்பக்கத்திலுள்ள புட்டப் பகுதி ஆண்களுக்குக்
குறுகலாகவும் பெண்களுக்குச் சற்று அதிகமாகவும் இருக்கும்.
-40-</p>

<p>	தொடைகள் ஆண்களை விட பெண்களுக்குப் பரும~
னானவை - புட்டப் பகுதி அகலமாக இருப்பதால்.</p>

<p>	முழங்கை ஆண்களுக்கு இடுப்போடு ஒன்றியிருக்கும்,
பெண்களுக்கு இடுப்பு முழங்கைக்குச் சிறிது மேலே ஏறி~
யிருக்கும்.</p>

<p>	மறுபடியும் படத்தைப் பாருங்கள்.</p>

<p>	ஆண்களுக்குத் தோளிலிருந்து இடுப்புக்கு இடையே உள்ள
பகுதி நீளமானது. இடுப்பிலிருந்து தொடைக்கு இடையே
உள்ள பகுதி குட்டையாநது. கால்கள் நீளமானவை.</p>

<p>	பெண்களுக்குத் தோளிலிருந்து இடுப்புக்கு இடையே உள்ள
பகுதி குட்டையானது. இடுப்பிலிருந்து தொடைக்கு இடையே
உள்ள பகுதி நீளமானது கால்கள் சிறிது குட்டையானவை.</p>

<p>	ஆண்களின் உடம்பு அவர்கள் தலையைப்போல் 7 1/2 மடங்கு~
கள் இருப்பதைப் போல பெண்களுக்கும் அவர்கள் தலையைப்
போல 7 1/2 மடங்குகள்தான். ஆனால், ஆணையும் பெண்ணையும்
சேர்த்து வரையும்போது, பெண்ணின் தலையைச் சற்று சிறி~
தாக்கினால் உருவம் சிறிதாகி விடும். ஆனால், தலையைப்
போல் 7 1/2 மடங்குகள் இருக்கும்.</p>

<p>	நீங்கள் வரையும்போது இவற்றையெல்லாம் நினைவு வைத்~
துக் கொண்டால் வரைவது எளிதாகவும் பிழை இல்லாமலும்
இருக்கும்.</p>

<p>	உடலின் அளவைக் காட்டும் படங்களைப் போல் நீங்களும்
7 1/2 பகுதிகளாகப் பிரித்துக் கட்டம் போட்டுக் கொண்டு
வரைந்து பழகுங்கள்.</p>

<p>	தவிர, இங்கே மனிதனின் தசைக்குள்ளே இருக்கும் எலும்~
புக்கூடுகளை இரண்டு விதமான தோற்றங்களில் காணலாம்.
ஒன்று பக்கத் தோற்றம், மற்றது நேர்த் தோற்றம். மேலும்
மண்டை ஓடுகளையும் பார்க்கிறீர்கள். தசைப் பகுதிகள் கறுப்பு
நிறத்தில் காட்டப்பட்டுள்ளன.</p>

<p>	ஓவியம் கற்றுக் கொள்ளுகிறவர்கள், மனிதனின் எலும்புக்
கூட்டைப் பற்றி நுணுக்கமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய~
தில்லை என்றாலும் ஓரளவாவது தெரிந்திருப்பது நல்லது.</p>

<p>ஒரு பரீட்சை:</p>

<p>	தலையைப்போல் 7 1/2 மடங்கு வைத்துக்கொண்டு ஓர்
ஆணின் பக்கத் தோற்றத்தையும், ஒரு பெண்ணின் பக்கத்
தோற்றத்தையும் வரையுங்கள்.
-42-</p>

<p>		உடலை எளிதாக வரைதல்</p>

<p>	உடலை எளிதாக வரைவதற்கு, வரைந்து பழகுவதற்கு ஒரு
வழி இருக்கிறது. நாம் எந்த பாவனையில் உடலை வரைய விரும்பு~
கிறோமோ, அந்த பாவனையில் உடலில் அடிப்படைக் கோடுகளை
வரைந்து கொண்டு, அதன் பிறகு தசை அமைப்பை உருவாக்க~
லாம். இதில் தலை, மார்பு, இடுப்பு ஆகியவை வட்டங்களாகவும்,
கை கால் வெறும் குச்சிக் கோடுகளாகவும் இருக்கும்.</p>

<p>	கரும்பலகை மூலம் படங்களைப் போதிக்கிற ஆசிரியர்களில்
சிலர், இந்த மாதிரி வரைந்து, பாவனைகளை மாணவர்களுக்கு
விளக்குவார்கள். இந்த முறையில், ஓடுதல், நடத்தல், தாண்டுதல்
போன்ற பாவனைகளை மிக எளிதாக வரைந்து விடலாம்.</p>

<p>	மண்டை ஓடு, மார்புக்கூடு, இடுப்பு எலும்பு ஆகியவை
வட்டங்களாக இருக்கும். (வட்டங்கள் என்றால், நீண்டவட்டங்~
கள் இல்லை. உறுப்புக்களுக்குத் தகுந்தாற்போல், நீண்டவட்டங்~
களாகவும், முட்டை வடிவங்களாகவும் இருக்கும்.) அவற்றை
இணைத்து, குச்சுக் கோடுகள் இருக்கும்.</p>

<p>	நீங்கள் இந்த மாதிரி குச்சுப் படம் வரைந்து கொண்டு
அதற்கு தசை வடிவம் கொடுக்கவேண்டும்.</p>

<p>	முதலில் தலை, மார்பு, இடுப்பு ஆகியவற்றிற்கு வட்டங்களை
வரைதல், அவற்றை இணைத்து கழுத்து, கை கால்கள் வரைதல்.
இரண்டாவது அவற்றின் மேல், தசைகள் வரைதல், வரைந்து
கொண்டு வட்டங்களையும் குச்சுக் கோடுகளையும் அழித்து விடு~
தல், மூன்றாவதாக உருவத்தைச் சரிசெய்தல். நான்காவதாக
அதற்குப் பொருத்தமான உடை வரைதல். கடைசியாக ஒளி
நிழல் கொடுத்து ஒவியத்தைப் பூர்த்தி செய்தல்.</p>

<p>	இதிலும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. தலை
மார்புக்கூடு, இடுப்பு எலும்பு ஆகியவற்றிற்கு வரையப்படும்
வட்டங்கள், அந்தந்த அளவுப்படி பொருத்தமாக இருக்க
வேண்டும். தலை பெரியதாகவும், மார்புக்கூடு சிறியதாகவும்
இடுப்பு எலும்பு சிறியதாகவும் வரையப்பட்டு விட்டால் படம்
விகாரமாகி விடும்.</p>

<p>	மேலும், தலைக்கும் மார்புக்கூட்டுக்கும் உள்ள இடைவெளி
முதலியவற்றையும் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால்
உருவத்திற்கு கழுத்து நீளமாகவோ, குட்டையாகவோ, உடம்பு
நெட்டையாகவோ குட்டையாகவோ ஆகிவிடும்.
-44-</p>

<p>	தலை நேராக இருக்கும்போது, தலைக்கான வடிவத்தை
நேராக வரையவேண்டும். பக்கவாட்டத்தில் இருக்கும்போது
அந்த வடிவத்தைச் சாய்த்து வரைய வேண்டும்.</p>

<p>	நம்முடைய கணிப்பே, தலையைப் போல் உடம்பு ஏழரை
மடங்கு இருக்கவேண்டும் என்பதுதானே? அதையும் பார்த்துக்
கொள்ளுங்கள்.</p>

<p>	கொஞ்சம் பொறுமையுடன் இந்த மாதிரிச் சித்திரங்களை
வரைந்து பழகினால் உங்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரி
உற்சாகமாக இருக்கும்.</p>

<p>உங்கள் பரீட்சைக்கு:</p>

<p>	தரையைப் பெருக்குகிற பெண்.</p>

<p>	வேகமாக ஓடுகிற ஆண்.</p>

<p>	குச்சுப்படமாக வரைந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்
பார்ப்போம்.
-48-</p>

<p>			உடலின் தசைகள்</p>

<p>	உடலை வரையும் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும்
தசை அமைப்பில் வித்தியாசங்களைக் காட்ட வேண்டும்.</p>

<p>	ஆண்களுக்குத் தசை நார்கள் அதிகப்படியாக வெளியில்
தெரியும். உருண்டு திரண்டு கரணை கரணையாக இருக்கும்.
மூட்டை தூக்குகிறவர்கள், மரம் அறுக்கிறவர்கள், மண்வெட்டி~
கிறவர்கள் போன்ற உடல் உழைப்பு மிகுந்தவர்களிடம் இந்தத்
தசைநார்களை நன்கு பார்க்கலாம். தோள், மார்பு, முழங்கைக்கு
மேல் பகுதி, வயிற்றுக்கு மேல் பகுதி, தொடை, கெண்டைக்
கால் முதலியவற்றிலும்; பின்புறம் முதுகுப் பகுதி, புட்டங்கள்,
பின்பக்கத் தொடைகள் முதலியவற்றிலும் தசைத் திரள்களைப்
பார்க்கலாம். தசைத்திரள்கள் ஆண்களின் உடலுக்கு
அறுபுதமான அழகைத் தருகின்றன.</p>

<p>	ஆண்களைவிட பெண்களுக்கு உடலில் கொழுப்புச் சத்து
அதிகம். எனவே, பெண்களுக்கு இந்தத் தசை நார்கள் வெளியில்
தெரிவதில்லை. தோள்கள், புட்டங்கள், தொடைகள் ஆகிய~
வற்றில் தசைப் பகுதிகளைத்தான் காணலாம்.</p>

<p>	அடுத்துவரும் பக்கங்களில் சில படங்கள் இருக்கின்றன.
அவற்றைப் பற்றி இங்கே ஒன்று தெரிவிக்க விரும்புகிறோம்.
டாக்டருக்கு உடலில் உள் அமைப்பான எலும்பு, தசை, நரம்புகள்,
ஜீரண உறுப்புகள் முதலியவை பற்றி நன்கு தெரிந்திருக்க
வேண்டியது அவசியமாக இருப்பதுபோல, ஓர் ஓவியருக்கு உட~
லின் முழு அமைப்பும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது,
வெற்றுடம்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அதைப்
பற்஼றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல், முழு ஓவியராக விளங்க
இயலாது. எனவே, இப் புத்தகத்தில் வரையப்பட்டிருக்கும்
படங்கள் அனைத்தும் ஒரு பயிற்சிக்காகவே சேர்க்கப்பட்டிருக்~
கின்றன. என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுகிறோம்.</p>

<p>	இம்மாதிரியான படங்களை வரையும்போது ஒளி-நிழல்
பகுதியைக் கவனித்து வரையவேண்டும்.
-50-</p>

<p>	ஒளிபடும் இடத்திற்கு எதிர்பக்கம் நிழல் விழும் என்பதை
நீங்கள் அறிவீர்கள். எனவே, ஒளிபடும் இடங்களில் கறுப்பு
நிறத்தை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். நிழல் விழும்
இடத்தில்தான் பயன்படுத்த வேண்டும். ஒளிக்கும் நிழலுக்கும்
இடைப்பட்ட இடம் என்று ஒன்று இருக்குமல்லவா? அதாவது
இருளும் ஒளியும் சேரும் இடம். அங்கே கோடுகளால் காட்ட
வேண்டும். பக்கத்திலுள்ள படங்களைப் பார்த்தால் புரியும்.</p>

<p>	மனிதன் இருக்கும் நிலைகளுக்குத் தகுந்தபடி, தசை
அமைப்புகளில் மாற்றம் நிகழும் கையை மேலே தூக்கும்
போது, தோள்களிலும் விலாப் பக்கங்களிலும் தசைகள் மாற்ற~
மடையும். கைகளில் சுமை தூக்கும்போது முழங்கைக்கு
மேலே உள்ள பகுதியில் தசைகள் திரண்டு எழும். உடலை
முறுக்கிக் கொள்ளும்போது தசைகள் மாற்றமடையும்.
இவற்றை யெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
உடலில் ஒளி௃-நிழல் பகுதி என்பது படத்துக்கே உயிர் கொடுக்கக்
கூடியது.</p>

<p>	அடுத்து வரும் பக்கங்களில் சில சிறு படங்கள் இருக்கின்றன.
எளிமையான கோடுகளை மட்டும் கொண்ட படங்கள்
பல்வேறு செய்கைகளைக் காட்டுகின்றன. குனியும்போது
கைகளை மேலே தூக்கும்போது, உடலை முறுக்கிக் கொள்ளும்
போது, சாதாரணமாக நிற்கும்போது, உட்காரும்போது
படுக்கும்போது என உடலின் பல நிலைகளைப் பார்க்கிறீர்கள்.
அவற்றை வரைந்து பாருங்கள்.</p>

<p>	இப்போது பரீட்சைக்கான குறிப்பு என்ன தெரியுமா?
	அடுத்த பக்கங்களிலுள்ள படங்களை யெல்லாம் ஒளி-
நிழல் முறையில் வரைந்து, தசைப்பகுதிகளை நன்கு வெளிப்~
படுத்துங்கள். ஒவ்வொரு படத்தையும் பெரிதாக வரைந்து
கொள்ளுங்கள். ஒரு தடவை இடப் பக்கமிருந்து வெளிச்சம்
வருவதாக வரையுங்கள். இன்னொரு தடை வலப் பக்க~
மிருந்து வெளிச்சம் வருவதாக வரையுங்கள். அப்போதுதான்
உங்களுக்குத் தேவையான பயிற்சி கிடைக்கும்.
-54-</p>

<p>			உடலும் உடையும்</p>

<p>	ஆண்-பெண் உடல் அமைப்புகள் எப்படி இருக்கின்றன
என்பதை முன்பு தெரிந்து கொண்டீர்கள். இப்போது, உடல்~
களுக்கு உடைகள் வரையும்போது கவனத்தில் கொள்ள
வேண்டியவை யாவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.</p>

<p>	உடையில் சுருக்கங்கள் விழும் இடங்களைத் தெரிந்து
கொண்டால் படத்தை எளிதாகவும் அழகாகவும் வரையலாம்.
படமும் இயற்கையாக இருக்கும். கை, அக்குள், (விலைப்
பக்கமும் கையின் மேல் பகுதியும் சேரும் இடம்), முழங்கை
இடுப்பு, இரு தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதி. முழங்கால்
முதலியவற்றில்தான் பெரும்பாலும் சுருக்கங்கள் விழும்.</p>

<p>	நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது சுருக்~
கங்கள் விழுவதை அக்கறையுடன் வரைய வேண்டும்.</p>

<p>	நாகரிகமான மனிதனின் உடையை வரையும்போது மொட~
மொடப்பாகவும் சலவை மடிப்பு தெரியும்படியும் வரையவும்;
கோடுகளில் அதிக வளைவுகள் இருக்கவேண்டாம். பெண்களின்
உடையாக இருந்தால் அது உடலோடு ஒட்டியிருக்கும்படியும்
உடலின் மேடுபள்ளங்களுக்குத் தகுந்தாற் போலவும் கோடுகளை
வரையவும். அதிகமான சுருக்கங்கள் விழும் இடங்களில் கோடு~
களை அதிகமாகவும் பட்டையாகவும் வரையவும், புடைப்பான
பகுதிகளில் கோடுகளே வரையக்கூடாது.</p>

<p>	மிகக் குறைந்த உடையுடன் இருக்கும் ஒரு பெண், ரவிக்~
கையும் புடவையும் உடுத்தினால் எப்படி இருப்பாள் என்பதைப்
பக்கத்தில் உள்ள படத்தில் காணலாம்.</p>

<p>	ஒரு கிராமத்து ஆசாமியை வரையும்போது அவனுக்கு
மொடமொடப்பான சலவைமடிப்புள்ள துணி மாதிரி வரையா~
தீர்கள். அவன் உடையில் அதிகமான சுருக்கங்கள் இருக்கும்.
அதனால் அதிகமான கோடுகளை வரையவேண்டும்.</p>

<p>	ஒருவன் அல்லது ஒருத்தி, நீரில் நனைந்து விட்டதாக
வைத்துக் கொள்ளுவோம்; அப்போது உடையை எப்படி
வரையவேண்டும்? ஈரத்தில் உடை, உடலுடன் ஒட்டிக்
கொண்டது மாதிரியும், அதே சமயம் சுருக்கங்களுடனும்
வரையவேண்டும்.
-56-</p>

<p>	இங்கே இருக்கும் படங்களைப் பாருங்கள். உடையில் சுருக்~
கங்கள் எங்஼கெங்கே விழுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள~
லாம்.</p>

<p>	மிக மெல்லிய ஆடைக஼ளாக இருந்தால் சுருக்கங்கள் அதிக~
மாக இருக்கும். தடிப்பான ஆடைகளாக இருந்தால் சுருக்கங்~
க஼ள் குறைவாக இருக்கும்.</p>

<p>	மெல்லிய ஆடைகளின் சுருக்கங்களை மெலிந்த கோடு~
களால் காட்ட வேண்டும். கம்பளி போன்ற மிகத் தடிப்பான
ஆடைக஼ளை வரையும்போது சுருக்கங்களைத் தடிப்பான பெரிய
வளைவு கோடுகளால் காட்டவேண்டும்.</p>

<p>
பரீட்சைக்கு:</p>

<p>	52, 53 ஆம் பக்கங்களில் உள்ள கோடுப் படங்களுக்குத்
தசை அமைப்பையும் ஒளி௃-நிழல் பகுதியையும் வரைந்து பழகி
இருப்பீர்கள். இப்போது அந்தப் படங்கள் ஒவ்வொன்றையும்
பெரிதாக வரைந்து கொண்டு, நீங்கள் விரும்பிய உடைகளை
வரையுங்கள்.
-58-</p>

<p>நான்காவது வாரம்:</p>

<p>			பென்சிலும் பிரஷ்ஷும்</p>

<p>	படத்தை இங்கினால் வரைவதற்குமுன், அதை எப்படி
பென்சிலால் வரைந்து கொள்வது? வரைய வேண்டிய~
வற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் பென்சிலால் வரைந்து
கொள்ள வேண்டுமா என்னும் சந்தேகங்கள் சிலருக்குத்
தோன்றக் கூடும்.</p>

<p>	மனதில் கற்பனை செய்த உருவங்களைக் காகிதத்தில் பென்சி~
லால் இலேசாக வரைந்து கொள்ளுங்கள். அதிகமாக ரப்பரால்
அழித்து வரைந்த படங்களை இங்கினால் வரைந்து பூர்த்தி செய்~
தால் படம் நன்றாக இருக்காது.</p>

<p>	முதலில் தலையிலிருந்து தொடங்குங்கள். முகம் வலது பக்கம்
பார்த்துக் கொண்டிருந்தால், கோட்டை வலப்பக்கத்திலிருந்து
தொடங்குங்கள். இடப்பக்கம் பார்த்துக்கொண்டிருந்தால், இடப்~
பக்கத்திலிருந்து தொடங்குங்கள். நேராகப் பார்த்துக் கொண்~
டிருந்தால், கோட்டை வலப்பக்கமே தொடங்குங்கள்.</p>

<p>	பக்கத்திலுள்ள படங்களை கவனியுங்கள். முதலில் தலை,
மார்பு, கைகள், இடுப்பு, தொடைகள், கால்கள் என்று
இறங்கு வாருங்கள்.</p>

<p>	முதல் படம், தலை, மார்பு, கைகள் வரை வரையப்பட்டது.
இரண்டாவது படம், இடுப்பு, தொடைகள், கால்கள் வரை
வரைந்து முடிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலும்
கண்கள், மூக்கு, வாய், விரல்கள் உடையின் சுருக்கங்கள்
முத஼லியவை தெளிவாக காட்டப்படவில்லை. இரண்டாவது
படம் ஒரு குறிப்புப் படம்தான் தெளிவான஼ படம் இல்லை.</p>

<p>	இந்தக் குறிப்புப் படத்தையேதான், பிறகு, கண்கள்,
மூக்கு, வாய், கை விரல்கள், அணி மணிகள், உடையின்
சுருக்கங்கள் முதலியவற்றைத் திருத்தமாகப் பென்சிலால்
வரைந்து கொள்ள வேண்டும். தலைமுடி, புருவம், கருவிழி
நிழல் முதலியவற்றிலுள்ள கருமையை அதில் காட்டவேண்டிய~
தில்லை.</p>

<p>	கடைசிப் படத்தைப் போல் இங்கினால் முடிக்கும் போது
வரைந்து கொண்டால் போதும்.
-60-</p>

<p>		உடலின் வேக நிலைகள்</p>

<p>	உடலின் செய்கைகளில் வேக நிலையைக் காட்டும் போது,
உறுப்புகள் எப்படி இருக்கும் என்பதை இங்கே காணலாம்
உடல் இயக்கத்தின்போது, அந்தந்த இயக்கத்திற்குத் தகுந்த~
வாறு உறுப்புகளை வரைந்தால்தான் படத்தில் துடிப்பைக்
காட்டமுடியும்.</p>

<p>	ஓடும்போது கால்கள் தரையில் படிவதில்லை. நடக்கும்
போதும் ஓடும் போதும், வலக்கால் பின்னே இருந்தால்
இடக்கை பின்னே இருக்கும். இடக்கால் முன்னே இருந்தால்
வலக்கை முன்னே இருக்கும். அதாவது கைகளும் கால்களும்
மாறி மாறி வரும். ஓடும் போது உடலின் முன் பக்கம் முன்னே
சாய்ந்திருக்கும்.</p>

<p>	செங்குத்தான நிலையில் ஒரு மனிதன் ஓடுவதாக வரையப்~
பட்ட படம் சிரிப்பைத்தான் வரவழைக்கும்.</p>

<p>	ஒரு பெண் மிக வேகமாகச் செல்வதாக வரையும்போது
அவள் கைகள் மடிந்திருக்க வேண்டும். கைகளைத் தொங்கப்
போட்டுக் கொண்டு அவள் வேகமாக நடக்கமாட்டாள்.</p>

<p>	ஒரு பெண் சாதாரணமாக நடக்கும்போது அவள் அடி~
யெடுத்து வைப்பது மெதுவாகத்தான் இருக்கும். எனவே,
கால்களுக்கு ௃இடையே உள்ள தூரத்தைக் குறைவாக வரையப்
படவேண்டும். ஓர் ஆண் நடக்கும்போது அவன் அடியெடுத்து
வைப்பது விரைவாக இருக்கும். எனவே, கால்களுக்கு
இடையே உள்ள தூரத்தை அதிகமாக வரைய வேண்டும்.</p>

<p>	நிற்கும் போது பெரும்பாலான மனிதர்கள், வலக் காலைத்
தான் அதிகமாக ஊன்றிக் கொண்டு நிற்கிறார்கள். மிகக்
குறைந்த மனிதர்களே இரண்டு கால்களையும் சமமாக ஊன்றி
நிற்கிறார்கள்.</p>

<p>	ஒருவன் தாண்டும் போது தன் சக்தி முழுவதையுமே பயன்~
படுத்துகிறான். அதனால் அவன் கால்களை முன்னும் பின்னுமாக
எவ்வளவு இடைவெளி விட்டு வரைய முடியுமோ அவ்வளவு
இடை வெளி விட்டு வரைய வேண்டும்.
-61-</p>

<p>	விரைவாக நீந்தும்போது, உடலின் குறைவான பகுதிதான்
நீருக்கு மேலே தெரியும். அப்படி இல்லாமல், முழு உடலையும்
நீரின் மேல் காட்டினால், அது ஓர் அசாத்தியமான காரியமாக
தான் தெரியும். இயற்கைத் தன்மையும் கெட்டுவிடும்.</p>

<p>	முன் பக்கம் திமிறிக் கொண்டு ஓடும் ஒருமாட்டை ஒருவன்
பிடித்து இழுப்பதாக வைத்துக் கொள்வோம். அவன்
கால்கள் தரையில் உறுதியாகப் படிந்திருக்கும். அதே சமயம்
அவன் இடுப்பு, மார்பு தலை முதலியவை பின்பக்கமாக
இருக்கும். அப்படி வரைந்தால்தான் அவன் மிகப் பிரயாசைப்~
பட்டு இழுப்பதாகத் தோன்றும்.
-62-</p>

<p>	வலக்கையில் ஒருவன் ஒரு வாளி நிறையத் தண்ணீரைத்
தூக்கிக்கொண்டு போவதாக வைத்துக் கொள்வோம். வாளி
வலக்கையில் இருந்தால் இவன் உடல் இடப்பக்கம் சாய்ந்~
திருக்கும். வாளி இடக்கையில் இருந்தால் உடல் வலப்பக்கம்
சாய்ந்திருக்கும். அப்படியின்றி வாளியை வைத்துக் கொண்டு
நேராக நின்றால், அந்த வாளியின் ஒன்றுமே இல்லாதது
போலத்தான் இருக்கும்.</p>

<p>	ஒரு பெண் ஓடுகிறாள். அப்போது அவளது உடை காற்றில்
பறக்கும். அது அவள் ஓடுகிற திசைக்கு எதிர்த் திசையில் -
அதாவது, அவள் பின்பக்கம் - பறக்கும். எப்போதும் போல
உடையைத் தொய்வலாக விட்டு, அவள் ஓடுகிற பாவனையைக்
காட்டினால், அந்தப் படத்தில் விரைவு தெரியாது. ஏதோ
புகைப்படத்துக்காகப் பாவனை காட்டுகிற மாதிரிதான்
தோன்றும்.</p>

<p>	இந்தப் பகுதியில், ஓடுவது, தாண்டுவது, எறிவது ஆகிய
படங்கள் இருக்கின்றன. கவனித்துப் பாருங்கள்.</p>

<p>
பரீட்சைக்கு:</p>

<p>	ஒரு மனிதன் - வேட்டி அணிந்தவன் - பின் பக்கமாகச்
சறுக்கிக் கொண்டு விழுவதாகக் கற்பனை செய்து வரையுங்கள்.
-63-</p>

<p>			ஒளியும் நிழலும்</p>

<p>	ஒரு படத்திற்கு கனபரிமாணத்தைக் கொடுப்பது ஒளியும்
நிழலும்தான். ஒளி-நிழல்படி வரைந்தால்
படத்தின் பின்னணி பகலா இரவா என்பதைக் கண்டு பிடித்து
விடலாம். ஒளி-நிழல்படி வரைந்தால் படம் அழகாக இருக்கும்.
மேலும், வாஷ் டிராயிங் வரைகிறவர்களுக்கும் ஒளி-நிழல் பற்றி
நன்கு தெரிந்திருக்க வேண்டும்.</p>

<p>	படம் வரைகிறவர்களுக்கு ஒளி-நிழல் பற்றி முக்கியமாகத்
தெரிந்திருக்க வேண்டியது ஐந்து விதமான முறைகள்.</p>

<p>	1. உருவத்தின் முன்னே இருந்து வெளிச்சம் வருவது.
	2. உருவத்தின் பின்னே இருந்து வெளிச்சம் வருவது.
	3. உருவத்தின் இடப்பக்கம் இருந்து வெளிச்சம் வருவது.
	4. உருவத்தின் வலப்பக்கம் இருந்து வெளிச்சம் வருவது.
	5. உருவத்தின் ஒருபக்கமாக சாய்வாக இருந்து வெளிச்சம்
	வருவது. அதிகமாகப் பயன்படுவது இதுதான்.</p>

<p>	இவற்றில் 2 வது, 4 -வது முறை அவ்வளவாகப் பயன்~
படுவதில்லை. மிக அரிது. ஒளி-நிழல்படி படம் வரையும்போது
முகத்தில் அதிகமாக நிழல் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிகமாக நிழல் வந்தால் படத்தின் அழகு கெடும்.</p>

<p>	திருடர்கள், கொலைகாரர்கள், வஞ்சகர்கள் போன்றவர்களை
வரையும்போது நிழல் அதிகமானால் பரவாயில்லை. அது
அவர்களது இயற்கைத் தன்மையை வெளிப்படுத்த உதவும்.</p>

<p>	அடுத்த பக்கத்தில் ஐந்து விதமான ஒளி-நிழல் முறை஖ள்
விளக்கப் பட்டிருக்கின்றன.</p>

<p>
உங்கள் பரீட்சைக்கு:</p>

<p>	படத்தில் உள்ளது போல் பக்கவாட்டத்தில் நிற்கும்
பெண் ஐந்து விதமான ஒளி-நிழல் முறைகளில் வரையுங்கள்.
-65-</p>

<p>			வாஷ் டிராயிங்</p>

<p>	இதுவரை நீங்கள் தெரிந்து கொண்டதெல்லாம் `லைன்
டிராயிங்' என்னும் கோட்டுச் சித்திரங்கள். இப்போது `வாஷ்
டிராயிங்' என்னும் சித்திரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள~
லாம்.</p>

<p>	இந்த வகைச் சித்திரம் புகைப்படம் மாதிரித் தோன்றும்.
இதற்கு `இந்தியன் இங்க் கேக்' என்னும் கறுப்பு வர்ணக்கட்டி
தேவைப்படும். தட்டையான சிறிய எனாமல் கோப்பைகளில்
அல்லது பீங்கான் கோப்பைகளில் தண்ணீரைத் தொட்டுத்
தேய்த்தால், `இந்தியன் இங்க் கேக்' கறுப்பாக இந்தியன்
இங்க் போல வரும். இரண்டு மூன்று கோப்பைகளில், ஆழ்ந்த
கறுப்பு, நடுத்தர கறுப்பு, மிக இலேசான கறுப்பு என்கிற மாதிரி
கொஞ்சம் கொஞ்சம் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.</p>

<p>	முதலில் வாஷ் டிராயிங் செய்யப்போகிற காகிதத்தில்
நீங்கள் கருதிய படத்தைப் பென்சிலால் வரைந்து கொள்~
ளுங்கள். பிறகு, தடிப்பான பிரஷ்ஷைத் தண்ணீரில்
நனைத்து, வரையப் போகும் காகிதப் பரப்பில் தடவி
விடுங்கள். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் தடவும்
வர்ணம், காகிதத்தில் நன்றாக ஒட்டும். நீர் முழுவதும் காய்ந்த
பிறகே நீங்கள் வர்ணத்தால் வரைய ஆரம்பிக்க வேண்டும்.
காய்வதற்கு முன் வரைய ஆரம்பித்தால் காகிதம் முழுவதும்
வர்ணம் பரவி விடும்.</p>

<p>	இந்த மாதிரிச் சித்திரங்கள் வரைய `இந்தியன் ஆர்ட்
பேப்பர்' ப஼யன்படாது. Drawing Cartridge Paper அல்லது Kent
paper நல்லது. அல்லது சாதாரண காகிதம் விற்கும் கடைகளில்
White Cardboard என்னும் வெள்ளை அட்டைகள் கிடைக்கும்.
அதை உபயோகித்துக் கொள்ளுங்கள். அதில் பளபளப்பான
அட்டை கூடாது.</p>

<p>	எடுத்ததுமே ஆழ்ந்த கறுப்பு வர்ணத்தைப் பயன் படுத்தா~
தீர்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கறுப்பு வர்ணத்தை
அதிகப்படுத்த வேண்டும். ஏனெனில், வர்ணத்தைப்
பயன்படுத்தி விட்டால் மறுபடி நீரைத் தொட்டு அதை
அழிப்பது சிரம஼ம்.</p>

<p>	வர்ணம் பயன்படுத்துவதற்கு முன் ஒரு வெள்ளைக் காகிதத்~
தில் தடவிப் பார்த்துக் கொண்டு, கறுப்பு அதிகமாக இருக்க
வேண்டுமா, குறைவாக இருக்க வேண்டுமா என்பதை நிர்ண~
யித்துக் கொள்ளவும்.
-66-</p>

<p>	வர்ணம் மேலும் இலேசாக இருக்க வேண்டுமானால் நீரைக்
கலந்து கொள்ளவும்.</p>

<p>	இந்தியன் இங்க் கேக் கிடைக்காதவர்கள் இந்தியன்
இங்கையே நீர் கலந்து கோப்பையில் வைத்துக் கொண்டு
உபயோகிக்கலாம்.</p>

<p>	1 வது படம் நீங்கள் முதலில் வரைந்து கொள்ளும் பென்சில்
கோட்டுப் படம்.</p>

<p>	2 வது படம் இலேசான கறுப்பு வர்ணத்தைப் பயன்படுத்திய
படம். முகத்தில் நிழல் படும் இ஼இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்~
கிறது. ஒளிபடும் இடங்களில் வர்ணத்தைப் பயன்படுத்த
வேண்டாம்.</p>

<p>	3 வது படம் கொஞ்சம் கருமையான வர்ண஼ம். தலைமுடி,
புருவம், விழிகள், வாய், கழுத்து, சட்டையில் நிழல் உள்ள
இடங்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.</p>

<p>	4 வது படம் முடிக்கப்பட்ட படம். இதில்தான் ஆழ்ந்த
கறுப்பு வர்ணத்தைப் பயன்படுத்த வேண்டும். தலைமுடி,
கண்கள் நிழல் முதலியவற்றை நல்ல கறுப்பாக வரையுங்கள்.
மிகவும் கறுப்பாக இருக்கவேண்டும் என்று தோன்றுகின்ற இடங்~
களில் இந்தியன் இங்கை உபயோகித்துக் கொள்ளலாம்.</p>

<p>	கண்மணிகளில் தோன்றும் வெள்ளையான ஒளிப்புள்ளி,
தலைமுடியின் பளபளப்பு, சட்டையில் வெளிச்சம் படுகிற இடம்
ஆகியவற்றில் கறுப்பைப் பயன்படுத்த வேண்டாம். தவறிப்
பயன்படுத்தி விட்டால் போஸ்டர் ஒயிட்டை வைத்துச் சரி
செய்து விடலாம்.</p>

<p>	லைன் டிராயிங் வரையும்போது காட்டுகிற நிதானத்தை
விட இதற்கு அதிக நிதானம் காட்ட வேண்டும. நேரமும்
அதிகம்தான் தேவைப்படும். ஆனால், வரைந்து முடித்து
விட்டுப் பார்த்தால் புகைப்படம் மாதிரியே தோன்றும்.</p>

<p>	இந்த வாஷ் டிராயிங்கில் இன்னொரு முறையும் இருக்கிறது.
முதலில் பிரஷ்ஷினாலும் பேனாவினாலும் எப்போதும் போல
லைன் டிராயிங்காக வரைந்து கொண்டு, அதன் பிறகு, இந்தியன்
இங்க் கேக்கால் முன் சொன்ன முறையில் வாஷ் பண்ணி
விடலாம். இதில் நேரம் கொஞ்சம் மிச்சமாகும்.</p>

<p>	இந்தப் பக்கத்திலுள்ள படங்களை வரைந்து பாருங்கள்.</p>

<p>
பரீட்சைக்கு:</p>

<p>	நீங்களாக ஒரு படத்தைக் கற்பனை செய்து வாஷ் டிராயிங்
முறையில் வரையுங்கள்.
-69-</p>

<p>	வாஷ் டிராயிங்கில், முன் சொன்னதைத் தவிர இன்னும்
சில முறைகள் இருக்கின்றன. இந்தியன் இங்க் கேக்குடன்,
அல்லது கறுப்பு போஸ்டர் கலருடன் போஸ்டர் ஒயிட்
சேர்த்துக்கொண்டு வரையலாம். இந்தப்படம் `கிரே' கலரில்
இருக்கும். போஸ்டர் கறுப்பு, அல்லது இந்தியன் இங்க் கேக்
இல்லாவிட்டால், இந்தியன் இங்கையே சில துளிகள் போஸ்டர்
ஒயிட்டுடன் கலந்து கொண்டு வரையலாம். இந்த முறையில்
அவசரப்படாமல் நிதானமாக வரையலாம். இந்த கோடுகள்
தெரியாது. சுத்தமாக இருக்கும். இந்த முறையில் வரையப்
பட்டதுதான் எதிரே உள்ள முழுப்பக்க படம்.</p>

<p>	இன்னொரு முறை கீழே இருப்பது. முதலில், வேண்டிய
படத்தை இந்தியன் இங்கினால் சுத்தமாக வரைந்து கொண்டு,
அதன்மேல், இந்தியன் இங்க் கேக்கினால், அல்லது, நீரில் இந்தி~
யன் இங்க் கலந்துகொண்டு வாஷ் செய்யலாம். இது மிகச்
சுலபமான முறை.
-70-</p>

<p>		கதைகளுக்குப் படம் வரைதல்</p>

<p>	பத்திரிகைகளில் கதைகளுக்குப் படம் வரைகிறார்களே,
அது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள்.</p>

<p>	கதையை அச்சுக்கோத்த பின், பத்திரிகை ஆசிரியர் அக்~
கதையின் அச்சிட்ட பிரதி ஒன்றை ஓவியருக்குத் தருவார்.
அதற்கு `ஆர்டிஸ்ட்புரூப்' என்பது பெயர். அக்கதையைப்
படித்துப் பார்த்துவிட்டு, அதில் வருகிற சம்பவங்களில்
ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓவியர் படம் வரைவார். அல்லது,
பத்திரிகை ஆசிரியர் இன்஼ன முறையில் படம் வரைய
வேண்டும். கதாபாத்திரங்கள் இப்படி இப்படி இருக்க
வேண்டும், இந்த முறையில் சம்பவம் இருக்க வேண்டும் என்று
குறிப்புகள் மட்டும் தருவார். அதைக் கொண்டு படம் வரைய
வேண்டும்.</p>

<p>	ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு `சஸ்பென்ஸ்'
இருக்கும். கதையின் கடைசியில்தான் அது தெரியும்; தெரிய
வேண்டும். அந்தக் கதைக்குப் படம் வரைகிறபோது, மேற்படி
சஸ்பென்ஸ் காப்பாற்றப்படவேண்டும். கதையைப் பாதி
படித்துக் கொண்டிருக்கிறபோதே, அந்தப் பக்கத்தில் அச்சிடப்
பட்டிருக்கிற படத்தைப் பார்த்ததுமே முடிவு இப்படித்
தான் இருக்கும் என்று ஊகித்துவிடும்படி படத்தை வரைந்து
விடக்கூடாது.</p>

<p>	கதாபாத்திரங்கள் எப்படி உடை உடுத்தியிருக்கிறார்கள்
என்பதை யெல்லாம் சில எழுத்தாளர்கள் வர்ணித்திருப்~
பார்஼கள். அவற்றை யெல்லாம் கவனமாகச் சித்திரத்தில் காட்ட
வேண்டும்.</p>

<p>	"... வீட்டில் யாரும் இல்லை. சுஜாதா மட்டும் கன்னத்தில்
கையை வைத்தப்படி சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
பின்னால் வந்து கொண்டிருந்த ஆனந்தனைக்கூட அவள்
கவனிக்கவில்லை. அப்படி என்னதான் யோசனையோ
அவளுக்கு? ...."</p>

<p>	கதையில் இப்படி ஓர் இடம் இருப்பதாக வைத்துக்
கொள்ளுவோம். அதை வரைய நீங்களும் முடிவு செய்து
விட்டீர்கள்.</p>

<p>	வரைவதற்கு முன், அவர்கள் எந்த கோணத்தில் இருக்க
வேண்டும்? முகபாவனை எப்படி இருக்க வேண்டும்? படத்தின்
-71-
பின்னணியில் எவற்றைக் காட்டவேண்டும்? (அவர்கள் இருப்~
பது வீடு.) அவர்கள் எப்படி உடை உடுத்தியிருக்க வேண்டும்.
என்பனவற்றை யெல்லாம் மனதுக்குள் கற்பனை செய்து
கொள்ளுங்கள். கற்பனை செய்து கொள்ளாமல் எடுத்ததும்
காகிதத்தில் வரைய முயற்சி செய்யாதீர்கள். அப்படிச் செய்~
தால் காட்சி பிடிபடாமல், பல தடவைகள் பென்சிலால்
வரைந்து வரைந்து அழிக்க நேரிடும். கற்பனை செய்து
முடிவுக்கு வந்ததும் வரையத் தொடங்கலாம்.</p>

<p>	ஒரு காட்சியை மனதில் கற்பனை செய்து கொண்ட பிறகு
வரையத் தொடங்கினால், கோடுகள் மளமளவென்று வரும்.
பென்சிலால் தெளிவாக வரைந்து கொண்டதும் இங்கினால்
பூர்த்தி செய்யலாம். பிறகு சில இடங்களில் தெரிகிற பென்சில்
கோடுகளை அழித்து விடலாம்.</p>

<p>	முன்னே சொல்லப்பட்ட ஒரு சம்பவத்திற்காக வரையப்~
பட்ட படம் இது:
-72-</p>

<p>	வேறொரு கதையின்படி நான்கு பேர்கள் உள்ள ஒரு
காட்சி. முதல் இரண்டு பேர்கள் சமமாக நின்று பேசிக்கொண்~
டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒருவர் நின்று அவர்~
களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது சற்று தொலை~
வில் நான்காவதாக ஒரு கிழவர் வந்து கொண்டிருக்கிறார்.</p>

<p>	சமமாக நின்று பேசிக் கொண்டிருக்கிற இருவரையும் ஒரே
அளவில் வரையவேண்டும். அவர்களுக்குப் பின்னால் மூன்றாவ~
தாக நின்று கொண்டிருப்ப்பவரை, இருவரையும், விடச் சற்று
சிறிய உருவத்தில் வரையவேண்டும். அடுத்து, நான்காவதாக
வந்து கொண்டிருக்கும் கிழவரை, மூவரையும்விடச் சிறிய உரு~
வத்தில் வரையவேண்டும். அப்போதுதான் காட்சியை நேரே
பார்ப்பதுபோல இருக்கும்.</p>

<p>	ஒரு மின்சாரக் கம்பத்தின் அடியில் நின்று கொண்டு
அந்த வரிசையிலுள்ள மின்சாரக் கம்பங்களைப் பார்த்தால்
எப்படித் தெரிகின்றன஼? முதலில் உள்ள மரத்தைவிட அடுத்த
மரம் சிறியதாகவும், அதற்கு அடுத்த மரம் அதைவிடச் சிறிய~
தாகவும், படிப்படியாகச் சிறியவையாகத் தோன்றுகின்றன
அல்லவா?</p>

<p>	ஒரு பொருள் அல்லது ஓர் உருவம் நம் கண்களை விட்டுத்
தொலைவில் சொல்லச் சொல்ல, அந்தப் பொருள் அல்லது, உருவம்
சிறியதாகத் தோன்றும். இதற்குத் `தொலைத்தோற்றம்' என்று
பெயர்.</p>

<p>	சரி. முதலில் சமமாகப் பேசிக்கொண்டிருக்கும் மனிதர்களை
மிகத் தெளிவாக வரையவேண்டும். அவர்களுக்குப் பின்னால்
நின்று கொண்டிருக்கும் மூன்றாவது மனிதரை வரையும்போது
அவ்வளவு பளிச்சென்று வரைய வேண்டியதில்லை. கடைசியில்
நான்காவதாகத் தொலைவில் வந்து கொண்டிருக்கிற கிழவரை
இலேசான கோடுகளால் காட்டினால் போதும். எதிரே உள்ள
படம் `தொலைத்தோற்ற' முறைப்படி வரையப்பட்டது.</p>

<p>	இதோ உங்களுக்குப் பரீட்சை:</p>

<p>	`பூங்காவில் சித்திராவும் கலாவும் சிரித்துப் பேசிக்கொண்~
டிருந்ததைத் தூரத்தில் இருந்தபடி ராமு கவனித்துக்கொண்~
டிருந்தான் ..."</p>

<p>	வரையுங்களேன்!
-74-</p>

<p>		சில வித்தியாசமான முறைகள்</p>

<p>	ஒரே படத்தைப் பல வித்தியாசமான முறை~
களில் வரையலாம். அப்படி வரைந்து பழகுவது நல்லது. ஒரு
பத்திரிகையில் ஒரே ஓவியர் பல கதைகளுக்குப் படம்
வரையும் போது, ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பாணியில்
வரைவார். அடுத்த பக்கத்தைக் கவனிக்கவும்.</p>

<p>1.	பிரஷ், பேனா இரண்டையும் பயன்படுத்தி வரையப்பட்டது.
	எல்லோரும் பின்பற்றுகிற பொதுவான பாணி.</p>

<p>2.	ஒளி படும் இடங்களில் கோடுகளை மெல்லியதாகவும், இருள்
	உள்ள இடங்களில் பட்டையாகவும் வரையப்பட்டது. அதிக
	ஒளிபடும் இடங்களில் கோடுகளை வரையாமல் கூட விட்டு
	விடலாம். துப்பறியும் கதை, பேய்க்கதை முதலியவற்றிற்கு
	இந்த பாணியில் வரையலாம்.</p>

<p>3.	இந்த பாணியில் ஒளி-நிழலைக் காட்ட முடியாது. படம்
	தட்டையாகத் தெரியும். ஆனாலும் கவர்ச்சியாக இருக்கும்
	படம் முழுவதும் வெறும் கோடுகளால் மட்டும் இல்லாமல்,
	சில இடங்களில் பட்டைபட்டையாக கறுப்பு பயன்
	படுத்தினால்தான் படம் பளிச்சென்று இருக்கும். தலை
	முடியைக் கொடுகளால் வரைவது சிறப்பு.</p>

<p>4.	இந்தப் படம் வரைவதற்கு `லினன்கார்டு' என்னும் அட்டை
	பயன்படும். அந்த அட்டையில் பேனாவால் அல்லது பிரஷ்~
	ஷால் திருத்தமாக வரைந்து முடித்துக் கொண்டு அதன்மேல்
	`க்ரையான் பென்சில்' கொண்டு ஒளி-நிழல் முறையில் தீற்஼ற
	வேண்டும். `க்ரையான் பென்சில்' இல்லாவிட்டால் `ஐப்ரோ
	பென்சில்' பயன்படுத்தலாம். படம் புதுமையாக இருக்கும்.
	(இதைப்பற்றி விளக்கமாக நமது உருவப்படங்கள் வரைவது
	எப்படி? என்னும் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.)
-76-</p>

<p>	இந்த அரைப்பக்கப்படம், சரித்திரக்கதைகளுக்கு, இலக்கிய
சம்பந்தமான காட்சிக஼ளுக்கு வரையும் முறையை விளக்குகிறது.
இந்தபாணியில் பிரஷ், பேனா இரண்டும் பயன்பட்டிருக்கின்றன.
இதைக் கொஞ்சம் மெனக்கெட்டு, அக்கறையுடன் வரைய
வேண்டும். பலவித ஆபரணங்களை, உடைகளை, அந்தந்த
சரித்திரக் காலப் பின்னணிக்கேற்ப அலங்காரமாக வரைய
வேண்டும். தரை, சுவர், தூண் கட்டடம் முதலியவற்றைப் பூ
வேலைப் பாடுகளுடன் வரையவேண்டும். ஒளி-நிழல் அவ்வள~
வாகக் காட்ட வேண்டியதில்லை. இரவு அல்லது இருள் காட்சி~
களுக்கு மட்டும் காட்டலாம். படம் சிறிதாக இருந்தால்
முழுவதும் பேனாவால் மட்டுமே வரையலாம்.
-77-</p>

<p>		அச்சிடுவதற்கான படங்களை வரைத஼ல்</p>

<p>	சாதாரணமாக ஒரு படம் அச்சில் வர வேண்டுமானால்
அச்சில் வரவேண்டிய அளவைவிடப் பெரிதாக வரைய
வேண்டும். அப்படி வரைந்து, அச்சி தயாரித்து
அச்சிட்டால்தான் படம் நன்றாக விழும்.</p>

<p>	எடுத்துக்காட்டாக, 4 செ.மீ. அகலமும் 6 செ.மீ.
நீளமும் உள்ள படம் அச்சில் வர வேண்டுமென்றால் அதை
விட (நீள-அகலத்தில்) அரை மடங்காவது அதிகம் வைத்து
வரைந்தால்தான் நல்லது. அதாவது, 4 செ.மீ. அகலம்,
6 செ. மீ. நீளம் என்பதை, 6 செ. மீ, அகலம், 9 செ.மீ.
நீளம் என்ற வீதத்தில் வரையவேண்டும். 1/4 மடங்கு அதிகம்
வைத்து வரைந்தால், 5 செ. மீ. அகலம், 7 1/2 செ. மீ. நீளம்
என்று வரும். அகலத்தை எந்த வீதத்தில் அதிகப்படுத்து~
கிறோமோ அதே வீதத்தில் நீளத்தையும் அதிகப்படுத்த
வேண்டும்.</p>

<p>	புரிகிறதா?</p>

<p>	ஆனால், படம் சரியான அளவுக்கு உட்படவில்லை என்று
வைத்துக்கொள்ளுவோம். அதாவது, 4 1/4 செ. மீ. அகலமும்,
7 1/4 செ. மீ. நீளமும் உள்ள படமாக அச்சிடப்பட வேண்டும்
என்றால் அதற்கு எந்த வீதத்தில் வரைய வேண்டும்?
அகலத்தை எவ்வளவு அதிகப்படுத்த வேண்டும்? நீளத்தை
எவ்வளவு அதிக஼ப்படுத்த வேண்டும்? 4 1/4 செ. மீ.ஐ எவ்வாறு
1/4 மடங்கு அல்லது 1/2 மடங்கு அதிகப்படுத்துவது?</p>

<p>	சரியாக வராதல்லவா? அதற்கு ஒருமுறை இருக்கிறது.
-78-</p>

<p>	மேலேயுள்ள படத்தைப் பார்த்துக்கொண்டு இதைப்
படியுங்கள்.</p>

<p>	படம் வரைய வேண்டிய காகிதத்தில் ஒரு படுக்கைக் கோடு
வரையுங்கள். இடப் பக்கம் செங்குத்தாக ஒரு கோடு வரை~
யுங்கள். (செங்குத்துக் கோடு வரைய மூலமட்டத்தை
உபயோகிப்பது முக்கியம்.) இந்த இரு கோடுகளையும் ஆதார~
மாகக் கொண்டு, அதாவது பக்கங்களாகக் கொண்டு, அந்த
மூலையில் 4 1/4X7 1/4 அளவுக் கோடுகளை வரையுங்கள். (இது ஒரு
நீண்டசதுரம் இல்லையா? இந்த 4 1/4X7 1/4 என்பது அச்சில் வர
வேண்டிய அளவு,) பிற஖ு, உங்களுக்கு வசதிப்பட்ட அகலத்தை
அல்லது நீளத்தைக் குறித்துக்கொண்டு, அதிலிருந்து செங்~
குத்துக் கோடு வரையுங்கள்.</p>

<p>	பின்பு, முதலில் வரைந்த அளவுக் கோட்டின் (நீண்ட
சதுரத்தின்) மூலைகள் வழியே ஒரு சாய்வு கோடு வரையுங்கள்.
அந்தச் சாய்வு கோடு, செங்குத்துக் கோட்டை வெட்டுகிற
இடத்திலிருந்து ஒரு கோட்டைச் செங்குத்தாகத் திருப்பி
விடுங்கள். இதற்கும் மூலைமட்டத்தை உபயோகிக்க வேண்டும்.
இந்த அளவுக்குள் நீங்கள் படம் வரையலாம்.</p>

<p>	இப்படி வரைந்தால், அச்சு தயாரிப்பவர், அச்சிடத்
தேவையான அளவுக்குச் சுருக்கிக் கொள்ளுவார். படமும்
நன்றாக இருக்கும்.
-79-</p>

<p>வேறு சில குறிப்புகள்:</p>

<p>	இப்போது 71 வது பக்கத்தில் உள்ள படத்தைப் பார்த்துக்
கொள்ளுங்கள்.</p>

<p>	அதில் உள்ள வாலிபனின் உடைகளில், கருமையாகப்
புள்ளி புள்ளியாக விழுந்திருக்கிறதே, அது எப்படி என்னும்
சந்தேகம் சிலருக்கு எழலாம்.</p>

<p>	அதற்கு `ஸ்கிரீன்' என்பது பெயர். படம்
வரைந்த பிறகு, எந்த இடத்தில் அதுமாதிரி ஸ்கிரீன் வர
வேண்டும் என்று கருதுகிறீர்களோ அந்த இடத்தில் நீலப்
பென்சிலால் தீற்றி, படத்தின் கீழே என்று எழுதி
விட்டால் அச்சு தயாரிப்பவர் அதுமாதிரிச் செய்துவிடுவார்.
இன்னும் ஒன்று.</p>

<p>	புத்தகத்தின் அட்டையில் இரு வர்ணங்களில், அல்லது
மூன்று நான்கு வர்ணங்களில் படம் அச்சிடப்படுகிறதே அது
எப்படி? இப்படி அச்சிடுவதற்கான படத்தை எப்படி வரைய
வேண்டும்? வரைந்த படத்திலேயே அந்த வர்ணங்களைப் பூசி
விடவேண்டுமா என்று கேட்கத் தோன்றலாம்.</p>

<p>	அப்படிச் செய்யக் கூடாது.</p>

<p>	படத்தை வரைந்துவிட்டு, படத்தின் இடப்பக்க ஓரத்தில்
`பட்டர் பேப்பர்' என்னும் காகிதத்தை இலே~
சாக ஒட்டவேண்டும். இந்தக் காகிதம் எல்லா கடைகளிலும்
கிடைக்கும். இந்தக் காகிதத்தில் கீழே உள்ள படம் நன்றாகத்
தெரியும்.</p>

<p>	பிறகு, படத்தில் எங்கெங்கே என்னென்ன வர்ணங்கள்
வரவேண்டுமோ அவற்றை அந்தக் காகிதத்தில் பூசிக்காட்டி~
னால், அச்சு தயாரிப்பவர் தயாரித்துவிடுவார். அந்த வர்ணங்~
களிலேயே `ஸ்கிரீன்' வர வேண்டுமென்றால், அந்த வர்ணத்~
தைக் குறிப்பிட்டு `ஸ்கிரீன்' என்று எழுத வேண்டும்.</p>

<p>	3 வர்ணங்கள் பயன்படுத்தினால் 3 அச்சுகள் தயாரிக்க
வேண்டும். 4 வர்ணங்கள் பயன்படுத்தினால் 4 அச்சுகள்
தயாரிக்கவேண்டும்.
-80-</p>

<p>		முயற்சியும் பயிற்சியும்</p>

<p>	`பாடப்பாட ராகம்' என்பார்கள். சங்கீத வித்துவான்கள் - சிறிய
வித்துவான்களாக இருந்தாலும் சரி, பெரிய வித்துவான்களாக
இருந்தாலும் சரி-தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டில் பாடிக்
கொண்டிருப்பார்கள். அப்போதுதான் குரல் வளமும், அனுபவமும்
கிட்டும். சரீரம் பண்படும்.</p>

<p>	`நமக்குத்தான் கச்சேரி இல்லையே' என்று எந்தச் சங்கீத
வித்துவானும் சும்மா இருந்து விடமாட்டார்.</p>

<p>	அதே மாதிரித்தான் எந்தக் கலைஞராக இருந்தாலும் தன்
தொழிலில் மெருகேற்றத் தினமும் பயிற்சி செய்தாக வேண்டும்.</p>

<p>	ஓவியத்திலும் அப்படித்தான். தினமும் நேரம் கிடைக்கும்
போதெல்லாம் ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் வரைந்து வரைந்து
பழகுங்கள்.</p>

<p>	மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், மலர்கள், மலைகள்,
நீர்நிலைகள், ஆகாயம் எல்லாவற்றையும் வரையுங்கள். நேரே
பார்த்து வரையுங்கள்.</p>

<p>	ஓவியமும் சிற்பமும் இயற்கையை மனசில் வாங்கி கற்பனை
மெரூகூட்டி நகல் செய்வது தானே ...?</p>

<p>	இந்தப் புத்தகத்தை வாங்கிப் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்
அனைவரும் தாங்கள் ஓவியத்தில், முன்னேற இது ஒரு சிறந்த வழி
காட்டியாக இருந்தது என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்கள்.
முயற்சியாலும் பயிற்சியாலும் எந்தக் கலைதான் கைவராது?</p>

<p>		வாழ்த்துகிறேன்; வளருங்கள்!</p>

<p></p></body></text></cesDoc>